For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எக்காரணம் கொண்டும் இந்த பொருட்களை மட்டும் ஃப்ரிட்ஜில வெக்காதீங்க...

ஒவ்வொருவரும் எந்த பொருளை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும், வைக்கக்கூடாது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

|

பெரும்பாலானோருக்கு வாங்கும் ஒவ்வொரு பொருளும் கெட்டுப் போகக்கூடாது என்று ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் உணவுப் பொருட்களை அனைத்தையுமே ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அவற்றுள் சில கெட்டுப் போய்விடும்.

முட்டையை ஏன் ப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா?

எனவே ஒவ்வொருவரும் எந்த பொருளை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும், வைக்கக்கூடாது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். என்ன தான் ஃப்ரிட்ஜ் உணவுப் பொருட்களை கெடாமல் பார்த்துக் கொண்டாலும், சில பொருட்கள் வெளியே காற்றோட்டமான பகுதியில் இருந்தால் தான் நன்றாக இருக்கும்.

ஃப்ரிட்ஜில் வைத்த அசைவ உணவா? சாப்பிடாதீங்க!

சரி, இப்போது எந்த பொருட்களையெல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்று பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் அவற்றை ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரட்

பிரட்

சாப்பிடும் பிரட்டை காற்றுப்புகாத ஒரு கவரில் சுற்றி, ஈரப்பதமில்லாத இடத்தில் தான் வைத்துப் பாதுகாக்க வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்தால், அதனால் பிரட்டுகளில் பூஞ்சைகள் சீக்கிரம் வருவதோடு, கடினமாகவும் மாறிவிடும்.

பூண்டு

பூண்டு

பூண்டுகள் அவ்வளவு எளிதில் கெட்டுப் போகக்கூடிய பொருள் அல்ல. அதிலும் இதனை எத்தனை நாட்கள் ஃப்ரிட்ஜிற்கு வெளியே வைத்தாலும் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் இதனை ஈரப்பதமில்லாத மற்றும் காற்றோட்டமுள்ள இடத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணியை சிலர் வெட்டியப் பின் கெட்டுப் போகாமல் இருக்க ஃப்ரிட்ஜில் வைப்பார்கள். ஆனால் அப்படி ஃப்ரிட்ஜில் வைத்தால், அது அப்படியே சுருங்கி, அதில் உள்ள சத்துக்கள் போய் வறண்டு, காய்ந்துவிடும். எனவே முடிந்த வரை வாங்கிய தர்பூசணியை பாதுகாத்து வைத்து சாப்பிடுவதைத் தவிர்த்து, அவ்வப்போதே காலி செய்துவிடுங்கள்.

வெங்காயம்

வெங்காயம்

ஃப்ரிட்ஜில் வெங்காயத்தை வைக்கவே கூடாது. வெங்காயம் ஈரப்பமில்லாத, நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் வைத்து பாதுகாத்தால் பல நாட்கள் நன்றாக இருக்கும்.

அவகேடோ/வெண்ணெய் பழம்

அவகேடோ/வெண்ணெய் பழம்

உங்கள் வீட்டில் ப்ரௌன் நிற பை இருந்தால், அவற்றில் அவகேடோ பழத்தை சேமித்து வையுங்கள். இதனால் அவகேடோ பழம் வேகமாக பழுப்பது தடுக்கப்படும். ஒருவேளை வேகமாக பழுக்க வேண்டுமானால், அதனை அப்படியே வெளியே வைத்திருங்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் இந்த பழத்தை மட்டும் ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்.

தேன்

தேன்

உணவுப் பொருட்களிலேயே கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும் ஓன்று தான் தேன். இதனை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமே இல்லை. தேனை உபயோகிக்கும் போது, அதில் மற்ற பொருட்கள் ஏதேனும் கலக்காதவாறு சரியாக எடுத்து பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பாழாகும்.

தக்காளி

தக்காளி

தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் பாழாகாமல் இருக்கும் என்று நினைக்க வேண்டாம். மாறாக அதன் சுவை முற்றிலும் மாறி, ருசியற்றதாகிவிடும். எனவே எப்போதும் தக்காளியை வெளியே காற்றோட்டமான இடத்தில் வைத்துப் பாதுகாத்து பயன்படுத்தி வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Never Store These Foods In The Fridge

Most of us have the habit of placing every food in the fridge. But in fact, some foods don’t need refrigeration. Read on to know more...
Desktop Bottom Promotion