For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓட்ஸ் தயாரிக்கும்போது நீங்கள் செய்யும் 6 தவறுகள்!!

அவசர உலகத்தில் வயிற்றை நிரப்ப ஏதாவது சாப்பிடால் போதும் என்று நினைக்கிறோம்.ஆனால் என்ன சாப்பிடுகிறோம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். ஓட்ஸை நீங்கள் எப்படி தயாரிக்க வேண்டும் என்பதுதான் இக்கட்டுரை

|

காலை உணவு தவற விடக் கூடாது. நாள் முழுவதும் அதிக எனர்ஜியுடன் இருக்க அன்றைய காலை பொழுதில் நீங்கள் சாப்பிடும் உணவே தீர்மானிக்கிறது.

ஆனால் வேலைக்கு செல்லும் அவசரத்தில் மென்று முழுங்க நேரமில்லை. காலை சாப்பாட்டு நேரத்தை சுருக்க எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஓட்ஸ்.

Mistakes you are making with oat meal

ஓட்ஸ் சத்து நிறைந்தது. அதிக நார்சத்து, புரதம் மற்றும் இரும்பு போன்ற மினரல்களும் உள்ளன. எளிதில் ஜீரணமாகக் கூடியவை.

எல்லாவற்றையும் விட செய்யும் நேரம் மிகக் குறைவு. ஆனால் நிறைய பேர் ஓட்ஸ் தயாரிக்கும்போது பல தவறுகள் செய்கின்றனர். இதனால் அதன் முழு சத்துக்களும் சென்றடையாமல் போகிறது. என்ன தவறுகள் என தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓட்ஸ் எதில் தயாரிக்கிறீர்கள் ?

ஓட்ஸ் எதில் தயாரிக்கிறீர்கள் ?

நிறைய பேர் பாலில் கலக்காமல் டயட் இருக்கிறேன் என்று நீரில் ஓட்ஸ் தயாரிப்பார்கள். இது தவறு.

ஏனெனில் ஓட்ஸ் வெந்து அதன் சத்துக்கள் முழுமையடைய புரொட்டின் முக்கியம். அதனால் பாலில்தான் தயாரிக்க வேண்டும். பாதாம் பால் , தேங்காய் பாலும் உபயோகிக்கலாம். ஆனால் நீரில் ஓட்ஸ் தயாரிப்பதை தவிர்த்திடு

சிறிய பாத்திரத்தில் தயாரிக்கிறீர்களா?

சிறிய பாத்திரத்தில் தயாரிக்கிறீர்களா?

நமக்கு ஒருவருக்குதானே. எதற்கு பெரிய பாத்திரம் வேண்டும் என நினைத்து சிறிய பாத்திரத்தில் நீங்கள் செய்தால் அது தவறு.

ஏனென்றால் வெகும்போது அதன் பாகுத்தன்மை பெரிதாகிறது. ஆகவே அதற்கு குமிழ் உண்டாகும் அளவிற்கு இடம் கொடுக்கும் வகையில் பெரிய பாத்திரங்களில்தான் சமைக்க வேண்டும்.

எப்படிப்பட்ட தோற்றம் தர வேண்டும்?

எப்படிப்பட்ட தோற்றம் தர வேண்டும்?

உங்களுக்கு ஓட்ஸ் க்ரீம் போல் குழைந்து வேண்டுமா? அல்லது வடிவம் மாறாமல் அதே தோற்றத்தில் வேண்டுமா? உங்களுக்கு பிடித்த வகையில் தேந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

க்ரீம் போல என்றால் முதலில் பாலை நன்றாக கொதிக்க வைத்து அதன் பின்னர் ஓட்ஸை போட்டு கலக்க வேண்டும்.

ஓட்ஸ் அதே வடிவத்தில் வேண்டுமென்றால் முதலிலேயே ஓட்ஸை பாலிம் கலக்கி அதன் பின் அடுப்பில் வையுங்கள்.

உப்பு போடமாட்டீர்களா?

உப்பு போடமாட்டீர்களா?

ஓட்ஸில் உப்புமா அல்லது இனிப்பு கஞ்சி தயாரிக்கும்போது, சமைக்கும் ஆரம்பத்திலேயே ஒரு சிட்டிகைக்கும் குறைவாக உப்பை போட்டால் அதன் சுவை இரு மடங்காகும்.

ஆனால் ஓட்ஸ் தயாரித்த பின் உப்பு போடக்கூடாது. உப்பு அதிகமாகி அதன் சுவை முழுவதும் போய்விடும்.

கலக்காமல் இருப்பது :

கலக்காமல் இருப்பது :

ஓட்ஸை பாலில் கலந்து அடுப்பில் வைத்தால் மட்டும் போதாது. அதனை அடிக்கடி கலக்க வேண்டும். இதனால் கட்டிப்படுவது அல்லது குமிழகள் உருவாவதை தடுக்க முடியும்.

வேகுவதற்கு டைம் கொடுங்கள் :

வேகுவதற்கு டைம் கொடுங்கள் :

வெறும் 2 நிமிடத்தில் ஓட்ஸ் வேக வைப்பதற்கு இது உடனடி ரெடிமிக்ஸ் அல்ல. அதனை முழுவதும் வேகுவதற்கு நேரம் கொடுங்கள். 5-10 நிமிடத்திற்கு முன் அடுப்பை அணைக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mistakes you are making with oat meal

Common mistakes you are making with your oats meal and methods of oats preparations are described here.
Desktop Bottom Promotion