பிரட்டை எப்படி பரிசோதித்து வாங்குவது?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

இன்றைய அவசர உலகத்தில் பிரெட் , ஓட்ஸ் போல் தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது. க்கும் நேரம் குறைவு. சாப்பிடவும் எளிது. அதோடு சத்துக்களும் நிறைந்தவை. ஆகவே பிரட்டை சாப்பிடுவது தவறில்லை.

ஆனால் நம் நாட்டில் சீதோஷணத்திற்கு தகுந்தாற்போல் பிரட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் சாப்பிடுவது நல்லதல்ல.

அதே போல் கண்ணில் பார்க்கும் ஏதோ பிரட்டையும் வாங்குவதும் நல்லதல்ல. தரமற்ற பிரட்கலும் கடைகளில் விற்பனைக்கு வருவதுண்டு.

ஆனால் வெள்ளை பிரட் நல்லதா? இல்லை பிரவுன் பிரட் நல்லதா என பலரும் குழப்பத்தில் இருக்கின்றனர். மேலும் பிரட் வாங்கும்போது நீங்கள் என்னென்ன கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற விஷயங்கள் இங்கே சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 எந்த மாதிரி வாங்க வேண்டும் ?

எந்த மாதிரி வாங்க வேண்டும் ?

பொதுவாக முழுதானியங்கள் அடங்கிய பிரட் வாங்க வேண்டும். கடைகளில் வாங்கும்போது முழுதானியம்(whole grain) என போட்டிருக்கிறதா என பார்த்து வாங்குங்கள்.

இவைகளில் நார்சத்து, புரோட்டின், விட்டமின் , மினரல் ஆகியவை அடங்கியுள்ளன. பருப்பு வகைகள், பிரவுன் அரிசி, கோதுமை, பார்லி, ஓட்ஸ் ஆகியவை அடங்கிய பிரட்டுகள் கடைகளில் விற்பதுண்டு.

வெள்ளை பிரட் வாங்காதீர்கள். உடலுக்கு நல்லதல்ல. அவை முற்றிலும் மைதாவினால் செய்யப்படுபவை. ஆகவே சுவைக்காக பிரட் வாங்குவது தவறு.

லேபிள் பார்த்து வாங்குங்கள் :

லேபிள் பார்த்து வாங்குங்கள் :

வாங்கும்போது அதில் 100 % முழுதானியம் ( whole grain) என்று முத்திரை குத்தப்பட்டுள்ளதா என பார்த்து வாங்குங்கள். லேபிள் இருந்தால்தான் அவற்றில் அதிகபட்சம் 16 வகையான பருப்பு வகைகளும் தானியங்களும் அடங்கியவை என அர்த்தம்.

லேபிள் இல்லையென்றால் அவற்றில் வெறு 50 சதவித சத்துக்களே அடங்கியிருக்கும். மீதி மைதா போன்ற பொருட்கள் அடங்கியிருக்கும்.

சுவை :

சுவை :

வெறும் கோதுமை அதிகம் நிறைந்த பிரட்டுகளில் சுவை இருக்காது ஆனால் ஓட்ஸ், பார்லி, பிரவுன் அரிசி ஆகியவைகளில் செய்யப்படும் பிரட்டுகளில் சுவையும் இருக்கும்.

சத்துக்களும் அதே அளவு இருக்கும். அவற்றில் நீங்கள் காய்கறிகள், கலந்து சாண்ட்விச்சாக சாப்பிடும்போது அதன் சுவை அதிகரிக்கும். பல மடங்கு சத்துக்கள் கிடைக்கும்.

 தேவைப்படும் நார்சத்து :

தேவைப்படும் நார்சத்து :

நார்சத்துக்களில் கவனம் கொள்ளுங்கள். குறைந்தது 3 தானியங்களாவது இருக்கும்படி பிரட் வாங்குங்கள். இவையே உடல் எடையை அதிகரிக்கச் செய்யாமல் ஆரோக்கியத்துடன் வாழ உதவும்

தயாரித்த தேதி முக்கியம் :

தயாரித்த தேதி முக்கியம் :

பொதுவாக பிரட்டில் ஈஸ்ட் கலப்பதால் எளிதில் கெட்டுபோகும் வாய்ப்புண்டு. ஆகவெ தயாரிக்கும் தேதியை முக்கியமாக பாருங்கள்.

எந்த பிரட்டையும் 1 வாரத்திற்கு மேல் வைத்து சாப்பிடக் கூடாது. வயிற்று உபாதைகளை கொடுத்துவிடும். ஆகவே புதிதான பிரட்டுகளையே பார்த்து உடனுக்குடன் சாப்பிட்டு விடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to choose Bread

Which bread is good? brown or white?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter