For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி பப்பாளி சாப்பிட்டால் நல்லதா?

|

பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, போலிக்அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ், இரும்பு ,நார்ச்த்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில்தான் உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து கொண்டால் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

Health benefits of papaya

வயிறு சம்பந்தபட்ட நோய்களுக்கு :

கல்லீரல் நோய்க்கு பப்பாளிப் பழமே சிறந்த உணவாகும். வயிற்றுபோக்கு,வாய்வு,நெஞ்சு எரிச்சல், அல்சர், சர்க்கரை வியாதி, கண் பார்வை கோளாறுக்கும் பப்பாளி ஒரு சிறந்த மருந்து.

பப்பாளி விதைகளை காய வைத்து பொடி செய்து சாப்பிட்டால் எப்பேர்பட்ட புழுக்களும் வெளியேறிவிடும் என்று அறிவியல்பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது.

கொழுப்பு குறைய :

இளமையோடு வாழ தினசரி பப்பாளியை உண்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு இளமைப்பொலிவோடு வாழலாம். பப்பாளி தொடர்ந்து 4 வாரங்கள்சாப்பிட்டால் கொழுப்புசத்து 19.2விழுக்காடுகள் குறைகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சரும ஆரோக்கியத்திற்கு :

எலும்பு வளர்ச்சியை அதிகப்படுத்தும். தோல் வறண்டு இருந்தால் தினமும் பப்பாளி சாப்பிட்டு வந்தால் பளபளப்பாக மாறும். பப்பாளியை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் இன்னும் நல்லது. உடல் சக்தி அதிகமாகும்.

எலும்புகள் பலமடைய :

பொதுவாக குழந்தைகளுக்கும் பப்பாளிப்பழத்தைக் கொடுத்தால், உடல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் பல், எலும்பு வலுவடையவும் உதவும். காயங்களை குணமாக்கும் பால் பழம் மட்டுமல்ல பப்பாளியில் சுரக்கும் பாலினை காயங்கள் உள்ள இடங்களில் பூசினால் காயம் விரைவில் குணமடையும்.

இதன் இலையை அரைத்துப் பூசினால் கட்டிகள் உடையும், வீக்கம் வத்தும். தேள் கொட்டிய இடத்தில் பப்பாளியின் விதையை அரைத்துப் பூசினால் விஷம் முறிவு ஏற்படும். இலைகளின் சாறு ஜுரம் நீக்கும். இருதய நோயை குணப்படுத்தும்.

அடிக்கடி பப்பாளி பழத்தினை சாப்பிடுபவர்களுக்கு நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே கிருமிகளை கொல்கிறது. இதனால் அடிக்கடி பப்பாளி சாப்பிட்டு வந்தால் நோய்கள் தாக்காது.

English summary

Health benefits of papaya

Health benefits of papaya
Story first published: Saturday, July 23, 2016, 17:19 [IST]
Desktop Bottom Promotion