நோய்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் பழங்கள் !!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

நம் உடலுக்கு பழங்களும், காய்களும் செய்யும் நன்மைகள் அளவிட முடியாதவை. ஆனால் அவற்றை புறந்தள்ளி, பீஸாவிற்கும், பர்கருக்குமே நாற்காலி போட்டு அமரச் செய்கிறோம். விளைவு பலஹீனம், பலப்பல நோய்கள், ஆரோக்கியமற்ற மன நிலை என சுமந்து வாழ்கிறோம்.

உங்களுக்கு தெரியுமா? பழங்களையும் காய்களையும் யார் அதிகம் சாப்பிடுகிறார்களோ அவர்கள் எப்போது மன மகிழ்ச்சியுடனும் , நேர்மறை எண்ணங்களுடன் வாழ்வார்கள். அப்படியொரு வாழ்க்கை வரபிரசாதம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் அவ்வகையான பழங்களை பற்றி சில விஷயங்களை பார்ப்போமா?

Fruits and their health benefits

மாம்பழத்தின் சத்துக்கள் :

ஒரு கப் மாம்பழத்துண்டுகளில் 100 கி. கலோரி உள்ளது. இதில் 20 வகையான விட்டமின், மினரல்கள் உள்ளன. முக்கியமாக விட்டமின் ஏ, பி6 உள்ளது. அதிகமாக நார்சத்து கொண்டவை. கொழுப்பு கிடையாது. சோடியமும் இல்லை.

நன்மைகள் :

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது. உடல் வலிமை இல்லாதவர்கள் உட்கொண்டால், பலம் கிடைக்கும். உடல் பூசியபடி இருக்கும். இதய நோய்கள் வராது. இரைப்பை பலப்படுத்தும். கண்பார்வையை தெளிவுபடுத்தும்.

Fruits and their health benefits

கொய்யா பழத்தின் சத்துக்கள் :

கொய்யாவில் விட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. புற்று நோய்க்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய ஃப்ளேவினாய்டுகளை கொண்டுள்ளது.

நன்மைகள் :

வளரும் சிறுவர்களுக்கு விட்டமின் சி நிறைந்த உணவுகள் எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது.

மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினைத் தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம்.

சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். உடலில் உண்டாகும் நச்சுக்களை வெளியேற்றிவிடும். சக்தி வாய்ந்த ஆன்டியாக்ஸிடென்டை பெற்றுள்ளது.

Fruits and their health benefits

பப்பாளி :

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ அதிகம் உள்ளது. அதோடு நிறைய நார்சத்தும் உள்ளது. பொட்டாசியம், கரோட்டின் ஆகியவைகளும் உள்ளன.

நன்மைகள் :

பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லைக் கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும்.

மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மைத் தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடலாம். கர்ப்பப்பையை பலப்படுத்தும்.

Fruits and their health benefits

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களைத் தாக்காது.

அன்னாசி :

அன்னாசியின் சத்துக்கள் :

அன்னாசி பழத்தில் வைட்டமின் பி1 , பி6 அதிக அளவில் உள்ளது. புரோமெலைன் என்ர என்சைம் சுரக்கிறது. இந்த என்சைம் ஜீரணத்தை செய்ய உதவும் என்சைமாகும்.

நன்மைகள் :

அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்குப் பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.

சாப்பிட்டு வந்தால் ரத்தவிருத்தியாகும்.

Fruits and their health benefits

நன்றாக பழுத்த அன்னாசி பழத்தைச் சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிபடாமல் உலர்த்தி வற்றல்களாகச் செய்து வைத்து கொண்டு தினமும் படுக்கச் செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும்.

அன்னாசியை தொடர்ந்து சாப்பிட்டால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

விளாம்பழம் :

விளாம்பழத்தின் சத்துக்கள் :

விளாம்பழம் பல வியாதிகளைக் குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

நன்மைகள் :

Fruits and their health benefits

இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப்படுத்தும். விளாம்பழம் கிருமிகளை அழிக்கும். அஜீரண குறைபாட்டை போக்கிப் பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு.

English summary

Fruits and their health benefits

Fruits and their health benefits
Story first published: Thursday, July 21, 2016, 14:45 [IST]
Subscribe Newsletter