உடல் அசதியில் இருந்து விடுப்பட எளிய வழிமுறைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

சிலருக்கு எந்த காரணமும் இன்றி உடல் எப்போதும் அசதியாக இருப்பது போல உணர்வார்கள். உடலில் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் கூட இவ்வாறு உடல் அசதி ஏற்படலாம். சிலர் இராப்பகல் காணாமல் உழைத்துக் கொண்டே இருப்பார்கள் சரியான நேரத்திற்கு தூங்க மாட்டார்கள். இதன் காரணமாக கூட உடல் அசதி ஏற்படலாம்.

இதற்கு வைட்டமின் மாத்திரைகள் அல்லது கண்ட பவுடர்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில இயற்கை உணவுகளின் கலவையே உடல் அசதியை சீக்கிரம் போக்கும் திறன் கொண்டது. அவற்றை பற்றி இனிக் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அன்னாசிப்பழம், மிளகுத்தூள்

அன்னாசிப்பழம், மிளகுத்தூள்

அன்னாசிபழ‌ச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும்.

அன்னாசிப்பழம், தேங்காய்

அன்னாசிப்பழம், தேங்காய்

அன்னாசிப் பழம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து தேன் கலந்து சாப்பிட உடல் சோர்வு குறையும்.

முருங்கைப் பூப்போடி

முருங்கைப் பூப்போடி

முருங்கைப் பூவை பொடி செய்து கஷாயம் செய்து வெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடையும்.

மிளகு, நெய்

மிளகு, நெய்

மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவர உடல் சோர்வு குறையும்.

உலர்ந்த திராட்சை

உலர்ந்த திராட்சை

உலர்ந்த திராட்சையைப் பன்னீரில் ஊறவைத்து 2 மணி நேரம் கழித்துப் பிழிந்து அதன் ரசத்தைத் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் படபடப்பு குறையும்.

ஆரஞ்சுச் சாறு

ஆரஞ்சுச் சாறு

உலர்ந்த திராட்சைப் பழம், ஆரஞ்சுச் சாறு, ஒரு வாழைப்பழம் முதலியவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

பேரீச்சம் பழம்

பேரீச்சம் பழம்

பேரீச்சம் பழங்களை தண்ணீரில் போட்டு ஊற வைத்து ஊறிய பேரீச்சம் பழத்தையும் அந்த தண்ணீரையும் அருந்த சோர்வு குறையும்.

நெய், வெங்காயம்

நெய், வெங்காயம்

நெய்யில் வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட அசதி குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Are You Feeling Body Tired Everyday Without Any Reason

Are You Feeling Body Tired Everyday Without Any Reason, Easy ways to rid off naturally.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter