பழங்களின் தோல்களை சாப்பிட்டால் என்ன ஆகும்? அறிந்து கொள்வீர்களா?

Posted By: Hemalatha V
Subscribe to Boldsky

எல்லா பழங்களுமே உடலுக்கு நல்லதுதான். அதிக நார்சத்து, விட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்ஸ்டென்ட் நிறைந்தவை. அவற்றின் தோலை தூக்கியெறிந்துவிட்டு சதைப்பகுதியை மட்டுமே உண்ணும் மக்கள் நாம். சதைப்பகுதியை விட, தோலில் அதிகம் சத்துக்கள் மறைந்துள்ளது.

தோலின் கடினத்தன்மையையும், சுவையையும் விரும்பாமல் அதனை தூக்கி எறிந்து விடுகிறோம். இனிமேலும் தொடர்ந்து அப்படி செய்யாதீர்கள். உடல் நலம் கருதிதான் பழங்களை சாப்பிடுகிறோம். தோலில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளதென அறிந்த பின் ஏன் தூக்கி எறிய வேண்டும். யோசியுங்கள்.!

இங்கு சில பழங்களின் தோல்களைப் பற்றியும், அவற்றின் நன்மைகளையும் பற்றி தெரிந்து கொள்ளலாமா

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரஞ்சு தோல் :

ஆரஞ்சு தோல் :

ஆரஞ்சு தோல் உடல் எடையை குறைக்கும். நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தும். புற்று நோயை தடுக்கும். இதயத்தை பலப்படுத்தும். ஆரஞ்சு தோலில் புளிக் குழம்பு செய்து சாப்பிட்டால் சுவையும் சத்துக்களும் அபாரமாய் இருக்கும்.

வாழைப்பழத் தோல் :

வாழைப்பழத் தோல் :

வாழைப்பழத்தோலை பற்களில் தினமும் தேய்த்து வந்தால், மஞ்சள் பற்களை வெள்ளையாகும். காயங்கள் மீது தடவினால், புண் மிக விரைவில் ஆறும். பாத வெடிப்புகளில் தினமும் இந்த தோலை தேய்த்து வந்தால், ஒரு வாரத்தில் வெடிப்பு மறையும்.

மாதுளை தோல் :

மாதுளை தோல் :

மாதுளம் பழத் தோல் லேசான துவர்ப்பு சுவையுடன் இருக்கும். இது இதய நோய்கள் வராமல் தடுக்கும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த, அதனை வெறும் வாயில் மெல்லலாம். எலும்பை பலப்படுத்தும்.

வெள்ளரிக்காய் தோல் :

வெள்ளரிக்காய் தோல் :

இதன் தோலில், நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கிறது. நார்ச்சத்தும் நிறைந்தது. உடல் எடையை குறைக்கும். மலச்சிக்கலை குணப்படுத்தும். கண்பார்வையை அதிகப்படுத்தும்.

ஆப்பிள் தோல் :

ஆப்பிள் தோல் :

ஆப்பிளின் தோலில் ஃப்ளேவினாய்டு உள்ளது. இது புற்று நோயை எதிர்க்கும். நோய் எதிர்ப்பு செல்களை வலுப்படுத்தும். இதிலுள்ள அர்சோலிக் அமிலம் உடல் பருமனை குறைக்கும்.

எலுமிச்சை தோல் :

எலுமிச்சை தோல் :

எலுமிச்சையின் தோல் பற்களில் உண்டாகும் தொற்றுக்களை அழிக்கும். இதிலுள்ள லெமனோன் மற்றும் சல்வெஸ்ட்ரால் இரண்டுமே புற்று நோயை விரட்டும். நச்சுக்களை உடலிலிருந்து வெளியேற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing health benefits of fruit peels

Amazing health benefits of fruit peels
Story first published: Tuesday, June 28, 2016, 15:00 [IST]