ஆண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவும் 8 உணவுகள் !

Posted By: Staff
Subscribe to Boldsky

பொதுவாகவே ஆண்களும் ஆரோக்கியமும் சேர்த்தே பார்க்கப்படுகின்றது. அதனால் தானோ என்னவோ ஆண்கள் ஆரோக்கியம் இரண்டும் ஒரே எழுத்தில் தொடங்குகிறது.

நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக வாழவிரும்பும் ஆணா நீங்கள்? அப்படியானால் ஆண்களுக்கென்றே தனித்துவம் வாய்ந்த இயற்கை உணவுகள் சில உணவுகள் உள்ளன என்பதை அறிவீர்களா?

8 Best Foods For Men To Improve Overall Health

இந்தக் காலத்தில் பெரும்பாலும் ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலை வந்துவிட்டாலும், ஆரோக்கியம் என்று வரும்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் தேவைகள் வெவ்வேறாக இருக்கின்றன.

ஆணும் பெண்ணும் வெவ்வேறு உடல்ரீதியான அமைப்புகளைக் கொண்டுள்ளபோது, அவர்களுடைய ஊட்டச்சத்திற்கான தேவையும் வெவ்வேறாக உள்ளது.

உதாரணமாக, ஒரு பெண் ஒவ்வொரு மாதமும் மாதவிடாயை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் அவரது உடலிற்குத் தேவையான ஹார்மோன்களை கட்டுப்படுத்தத் தேவையான சில உணவுகளை உண்ணவேண்டியுள்ளது.

அதேவேளையில் ஒரு ஆண் நல்ல உடற்கட்டையும் தசைகளையும் பெற அல்லது தன்னுடைய உயிரணுக்களின் தரத்தை மேம்படுத்த அல்லது தன்னுடைய விரைப்புத் தன்னையே நீட்டித்து நல்ல இல்லற சுகம் பெற அதெற்கென்று தேவையான உணவுகளை உண்ணவேண்டும்.

இந்த காரணத்திற்காக பல்வேறு உணவுகளின் சத்துக்களை பற்றி அறிந்துகொள்ளவும் அவற்றில் சிறந்ததை தொடர்ந்து உண்ணவும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது.

எனவே ஆண்கள் உண்ணவேண்டிய ஆரோக்கியமான சிறந்த உணவுகள் இதோ உங்களுக்காக:

1. மீன்

ஒரு ஆய்வின் படி ஆண்களுக்கு மீன் ஒரு சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இதிலுள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆண்களை இதைய நோய்களிலிருந்து பாதுகாக்கவல்லது.

8 Best Foods For Men To Improve Overall Health

2. பிளாக்ஸ் சீட்ஸ் (ஆளி விதைகள்)

ஆண்களின் ஆரோக்கிய பெட்டகத்தில் இந்த ஆளிவிதைக்கு இடம் நிச்சயம் உண்டு. இதில் உள்ள புரோட்டீன் சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தசைப்பற்றை ஊக்குவிக்கவும் இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.

8 Best Foods For Men To Improve Overall Health

3. வால்நட்

வால்நட் பருப்புகள் ஆண்கள் நிச்சயம் உண்ணவேண்டிய ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று. ரோமானிய பழம்பெரும் குறிப்புகளில் இது காணப்படுவதோடு ஆண்களில் விதைப்பையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

8 Best Foods For Men To Improve Overall Health

4. ஆலிவ் எண்ணெய்

உங்கள் உணவில் ரத்தக் கட்டைத் தடுக்கக் கூடிய ஆலிவ் எண்ணையை சேர்த்துக்கொள்வது ஆண்களில் பக்கவாத நோயை ஓரளவிற்குத் தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

8 Best Foods For Men To Improve Overall Health

5. கீரைகள்

கீரைகளை அதிக அளவு மக்னீசியம் சத்து காணப்படுவதால் இதுவும் ஆண்களுக்கு ஏற்ற ஒரு உணவாகக் கருதப்படுகிறது. இது இனப்பெருக்க உறுப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலுறவின்போது விறைப்பு நேரத்தை நீட்டிக்கச் செய்யும்.

8 Best Foods For Men To Improve Overall Health

6. தர்பூசணி

இயற்கை வயாகரா என அழைக்கப்படும் தர்பூசணி எல்-சிட்ருலின் எனப்படும் அமினோ அமிலத்தை அதிகம் கொண்டுள்ளதால் ஆண்கள் நெடுநேரமும் கடினமான விறைப்புடனும் நீடித்திருக்க முடியும்.

8 Best Foods For Men To Improve Overall Health

7. செர்ரி பழம்

ஆண்களின் ஆரோக்கிய உணவுகளில் அடுத்து வருவது செர்ரி பழம். இதில் உள்ள அந்தோசியானின் எனப்படும் மூலப் பொருள் இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

8 Best Foods For Men To Improve Overall Health

8. உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல தாமபத்திய உறவு அமையும். இதிலுள்ள பொட்டாசியம் விறைப்புத் தன்மையை அதிகரிக்க வல்லது.

8 Best Foods For Men To Improve Overall Health

அப்புறம் என்ன தெளிவாயிடுச்சில்ல? இந்த உணவுகளை புகுந்து புறப்படுங்க!

English summary

8 Best Foods For Men To Improve Overall Health

8 Best Foods For Men To Improve Overall Health
Story first published: Tuesday, October 25, 2016, 22:30 [IST]
Subscribe Newsletter