நீங்கள் தினமும் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள் இவைகள் !!

Written By:
Subscribe to Boldsky

பழங்கள் உங்களுடைய மனதிற்கும் உறுப்புக்களுக்கும் உற்ற தோழன் போல். எந்த வகை பழங்களும் உங்கள் உடல் ஏற்றுக் கொள்ளும். காய்கறிகளை விட இதன் சத்துக்கள் உடனடியாக சேரும். எளிதில் ஜீரணிக்கும்.

எந்த பழமாக இருந்தாலும் நீங்கள் தினமும் ஒரு பழம் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம். இது உறுதியான தகவல்.

அதுவும் பருவத்திற்கு தகுந்தாற்போல் விளையும் பழங்களை சாப்பிட்டு வந்தால் இந்த உடல் உபாதைகளும் உங்களை நெருங்காது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இங்கே சொல்லப்பட்டிருக்கும் இந்த 4 பழங்களும் தினமும் கட்டயம் சாப்பிட வேண்டிய பழங்கள்.மேலும் அந்த பழங்கள் எவையெனவும், அதன் நன்மைகளையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் ஏன் சாப்பிட வேண்டும்?

ஆப்பிள் ஏன் சாப்பிட வேண்டும்?

ஆப்பிள் உங்கள் உடல் எடையை குறைக்கும் அதோடு சர்க்கரை வியாதி வராது என்பது தெரியுமா?

இதிலுள்ள ஃப்ளேவினாய்டு பாலிமர் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்க விடாமல் கட்டுப்படுத்துகிறது.

குளுகோஸை கொழுப்பாக மாற்றும் என்சைமின் செயலை தடுப்பதால் குளுகோஸ் சக்தியாக எரிக்கப்படுகிறது.

 பேரிக்காய் :

பேரிக்காய் :

பேரிக்காயில் இருக்கும் பெக்டின் மற்றும் ஃப்ளேவினாய்டு சர்க்கரை வியாதியை தடுக்கிறது. அதோடு உடல் பருமனையும் இளைக்கச் செய்கிறது.

தினமும் பேரிக்காயை சாப்பிடுவதால் உங்கள் ஜீரண மண்டலம் ஆரோக்கியமாகவும் ஜீரண சக்தி அதிகரிக்கவும் செய்கிறது. வயதானால் உண்டாகும் ஜீரண பாதிப்பை வர விடாமல் தடுக்கும்.

 ப்ளூ பெர்ரி :

ப்ளூ பெர்ரி :

நீல நிறத்தில் இருக்கும் ப்ளூ பெர்ரி மிகவும் நல்லது. அதன் நீல நிறத்திற்கு காரணமான ஆந்தோ சயனைன் என்ற வேதிப் பொருள் புற்று நோய், இதய நோய் வரவிடாமல் தடுக்கும்.

தினமும் அரை கப் அளவு ப்ளூ பெர்ரி சாப்பிட்டால் 100 மி.கி அளவுள்ள ஆந்தோசயனின் கிடைக்கும்.

 ஸ்ட்ரா பெர்ரி :

ஸ்ட்ரா பெர்ரி :

அதிக கார்போஹைட்ரேட் உணவு சாப்பிட்டிருந்தால் அதனால் அதிகரிக்கும் சர்க்கரை அளவை ஸ்ட்ரா பெர்ரி குறைக்கும் திறனுடையது.

இதிலுள்ள ஆந்தோசயனைன் மற்றும் ஃப்ளேவினாய்டு உடல் கொழுப்புக்களை குறைக்கிறது. இதய நோய், கல்லீரல் சம்பந்தப் பட்ட நோய் வரவிடாமல் தடுக்கும். அதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

 இந்த 4 பழங்கள் சாப்பிடுவதால் உண்டாகும் பொது நன்மைகள் :

இந்த 4 பழங்கள் சாப்பிடுவதால் உண்டாகும் பொது நன்மைகள் :

உடல் எடை குறையும். இதய நோய் வராது. இரைப்பை வளமுடன் இருக்கும். சர்க்கரை வியாதி தடுக்கப்படும். புற்று நோய் வராது. நோய் எதிர்ப்பு சக்தி இரு மடங்காகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

4 Fruits you should eat everday

4 Fruits you should eat everyday and their health benefits
Story first published: Wednesday, October 5, 2016, 12:45 [IST]
Subscribe Newsletter