For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதா? அப்ப இந்த காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்க...

By Maha
|

இன்றைய நவீன காலத்தில் பலருக்கும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. அதனால் தான் பல்வேறு நோய்களுக்கும் எளிதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒருவரின் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால், எந்த ஒரு நோய் தாக்கினாலும், அது விரைவில் குணமாகிவிடும். உடலில் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்க வேண்டுமெனில், அதற்கு உணவுகள் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறது.

குறிப்பாக காய்கறிகளை ஒருவர் அதிகம் உட்கொண்டு வந்தால், அவற்றில் உள்ள ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பொருட்கள், நோய்கள் அண்டாமல் தடுக்கும். இங்கு ஒருவரின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் காய்கறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த காய்கறிகள் என்னவென்று படித்து, அவைகளை உங்களின் டயட்டில் சேர்த்து வந்தால், நிச்சயம் நீங்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு

பூண்டு

மருத்துவ குணம் வாய்ந்த காய்கறிகளில் முதன்மையானது பூண்டு. இந்த பூண்டில் அல்லிசின் என்னும் பொருள், உடலில் உள்ள திசுக்களை, கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். மேலும் ஆய்வுகளில் பூண்டானது பக்கவாதம், இதய நோய்கள், புற்றுநோய், நோயெதிர்ப்பு குறைபாடு, ஆர்த்ரிடிஸ் மற்றும் கண்புரை ஆகியவற்றை தடுப்பதில் சிறந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றாட உணவில் பூண்டு சேர்ப்பதைத் தவிர்க்காதீர்கள்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயத்தில் க்யூயர்சிடின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது புற்றுநோயின் தாக்கத்தையே குறைக்கும் அளவில் சக்தி வாய்ந்த ஒன்று. மேலும் பூண்டைப் போன்றே வெங்காயத்திலும் அல்லிசின் என்னும் அற்புதமான பொருள் உள்ளது. அதுமட்டுமின்றி, இவற்றில் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஆந்தோசையனின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.

காளான்

காளான்

காளான்களை உட்கொண்டு வந்தாலும், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காளான்களுக்கு புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்தி உள்ளது. மேலும் இது டி.என்.ஏ பாதிக்கப்படுவதையும் தடுக்கும். எனவே அடிக்கடி காளானை சமைத்து சாப்பிடுங்கள்.

தக்காளி

தக்காளி

அன்றாட சமையலில் சேர்க்கும் தக்காளிக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது. குறிப்பாக இதில் லைகோபைன் மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. எனவே எக்காரணம் தக்காளியை மட்டும் உணவில் சேர்க்காமல் இருக்காதீர்கள்.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட் இரத்தத்தை சுத்தம் செய்யும் ஓர் அற்புதமான காய்கறி. மேலும் பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது இரத்தணுக்களை குறிப்பாக இரத்த வெள்ளையணுக்களை அதிகம் உற்பத்தி செய்கிறது. எனவே இந்த காய்கறியை தவறாமல் வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்ப்பது அவசியம்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

கீரைகளில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டீன், போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமை மற்றும் செயல்பாட்டை அதிகரிக்கும் சத்துக்கள் ஏராளமாக உள்ளது. அதிலும் பசலைக்கீரையை அடிக்கடி உட்கொண்டு வந்தால், இதய நோய், புற்றுநோய் மற்றும் இதர நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ்

தண்டு போன்று காட்சியளிக்கும் அஸ்பாரகஸ், உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் வெளியேற்றிவிடும். மேலும் இதுவும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்கறிகளுள் ஒன்று.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

கிழங்குகளிலேயே சர்க்கரைவள்ளிக் கிழங்கில் தான் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, புற்றுநோய், வைரஸ் தொற்றுகள் போன்றவை அழிக்கப்படும். எனவே இதனை அடிக்கடி வேக வைத்து உட்கொண்டு வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vegetables That Boost Your Immune System

Here is a list of vegetables that boost your immune system. Take a look...
Desktop Bottom Promotion