வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை வேகமாக கரைக்க உதவும் உணவுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

வயிற்றில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு உங்களை வேகமாக நடமாட முடியாமல் தடுக்கிறதா? ஆம் என்பது தான் பெரும்பாலானவர்களின் பதில். வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைப்பது தான் தற்போதைய ஆண்களின் மிகப்பெரிய கவலையாக இருந்து வருகிறது.

ஆனால், நீங்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் வேகமாக உங்கள் வயிற்றில் தேங்கியிருக்கும் அளவுக்கு அதிகமான கொழுப்பை கரைக்க முடியும். இதனால், உங்கள் உடல் எடை குறைவது மட்டுமின்றி, குடலியக்கம் சீராகும், செரிமானம் சரியாகும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணி பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் அமினோ அமிலம் அதிகம். தினமும் தர்பூசணி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பது மட்டுமின்றி, வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்கவும் முடியும்.

பப்பாளி பழம்

பப்பாளி பழம்

கொழுப்பை கரைக்க உதவுவதில் ஓர் சிறந்த பழம் பப்பாளி. இதில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. உங்கள் டயட்டில் பப்பாளியை சேர்ப்பதால் விரைவாக கொழுப்பை குறைத்து, உடல் எடையில் நல்ல மாற்றம் காண முடியும்.

தக்காளி

தக்காளி

கொழுப்பை எதிர்த்து போராடும் பழம் எனும் பெயர் பெற்றது தக்காளி. சரியான அளவு உங்கள் டயட்டில் தக்காளியை சேர்த்துக் கொள்வதால் தொப்பையை குறைக்க முடியும். இது அதிகப்படியான சோடியம், தண்ணீர், கொழுப்பை நீக்க உதவுகிறது.

காளான்

காளான்

குடலியக்கத்தை சரியாக்கி, சீரான முறையில் இயங்க வைத்து, உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவுகிறது காளான். இது, வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க பெருமளவில் உதவுகிறது.

பாதாம்

பாதாம்

தினமும் பாதாம் சாப்பிடுவதால் வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க முடியும். இதில் இருக்கும் வைட்டமின் ஈ கொழுப்புச்சத்தை குறைக்க வெகுவாக உதவுகிறது.

ஓட்ஸ்

ஓட்ஸ்

வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவுவதில் ஓட்ஸ் ஓர் சிறந்த உணவாக இருக்கிறது. உங்களது காலை உணவில் ஓட்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள், இதில் இருக்கும் நார்சத்து உடல் எடையை குறைக்கவும், அதிகமாக பசி எடுக்காமல் இருக்கவும் உதவுகிறது.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் உங்கள் செரிமனாத்தை வேகமடைய வைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உங்கள் வயிற்றில் இருக்கும் கொழுப்பை வேகமாக கரைக்க முடியுமாம்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளில் இருக்கும் நார்ச்சத்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை தருவது மட்டுமின்றி, பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் சீரான முறையில் உங்கள் உடல் எடையை குறைக்க முடியும்.

திராட்சை

திராட்சை

திராட்சை உங்கள் பசியை குறைக்கும் மற்றுமொரு சிறந்த உணவாகும். திராட்சை ஜூஸ் குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் கொழுப்பை வேகமாக குறைக்க முடியும். தொடர்ந்து நீங்கள் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால் 10 நாட்களில் 10 பவுண்ட் எடை வரை குறைக்க முடியுமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Nine Super Foods To Burn Tummy Fat

Do you want to burn your belly fat? Well, here are some of the super foods you must consume everyday to burn stomach fat fast.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter