மழை நேரத்தில் ஆரோக்கியமாக இருக்க தவறாமல் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

மழைகாலத்தில் தான் ஏராளமான நோய்கள் நம்மைத் தாக்கும். எனவே மழை பெய்யும் போது நம்மை ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

முக்கியமாக இந்நேரங்களில் வெளியிடங்களில் உணவுகள் உட்கொள்வதைத் தவிர்த்து, வீட்டிலேயே சமைத்து சாப்பிட வேண்டும். மற்ற காலங்களை விட மழைக் காலத்தில் தான் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்வது என்று நீங்கள் கேட்கலாம்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை மழைக் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தினமும் உட்கொண்டு வந்தால், மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூப்

சூப்

மழை பெய்யும் போது சூடாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி தோன்றுகையில், நூடுல்ஸ் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சமைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் சூப் செய்து குடித்தால், உடலில் சத்துக்களின் அளவை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம். எனவே வீட்டில் உங்களுக்கு தெரிந்த தக்காளி சூப், வெஜிடேபிள் சூப் என்று எதையாவது செய்து குடித்து, ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பழங்கள்

பழங்கள்

மழைக்காலத்தில் பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டியது முக்கியம். ஏனெனில் பழங்களில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சு, திராட்சை, பெர்ரிப் பழங்கள், சாத்துக்குடி போன்றவற்றை உட்கொள்வது நல்லது. குறிப்பாக பழங்களை சாப்பிடும் முன் அவற்றை நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

வெந்தயம் மற்றும் சீரகம்

வெந்தயம் மற்றும் சீரகம்

மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும். மேலும் உண்ணும் உணவுகள் செரிமானமாகாமலும் இருக்கும். எனவே உங்கள் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், செரிமான மண்டலம் சீராக இயங்கவும், சீரகம் மற்றும் வெந்தயத்தை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.

மூலிகை தேநீர்

மூலிகை தேநீர்

தினமும் ஒரு கப் பால் சேர்க்காத மூலிகை தேநீர் குடிக்க வேண்டும். இதனால் மூலிகைகளில் உள்ள மருத்துவ குணங்களால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே இஞ்சி டீ, எலுமிச்சை டீ, க்ரீன் டீ என்று ஏதேனும் ஒன்றை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குடித்து வாருங்கள்.

பூண்டு

பூண்டு

மழையால் காய்ச்சல், சளி போன்றவை பரவ ஆரம்பிக்கும். எனவே உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தினமும் ஒரு பல் பூண்டை பச்சையாகவோ, சூப்பில் சேர்த்தோ அல்லது பாலுடன் சேர்த்து எடுத்து வாருங்கள். இதனால் உங்களின் நோயெதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கும்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புத் தரும். எனவே அந்த மஞ்சளை அனைத்து உணவிலும் சேர்ப்பதோடு, தினமும் இரவில் சூடான பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods To Eat During Rainy Days

Here are some foods to eat during rainy days. Take a look...
Story first published: Wednesday, December 2, 2015, 11:08 [IST]
Subscribe Newsletter