விந்தணு உற்பத்தி அதிகரிக்க வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க!

By: Viswa
Subscribe to Boldsky

நமது அன்றாட உணவுப் பழக்கவழக்கங்களில் இருந்து கணினிமாயமான நமது வாழ்வியல் முறை வரைக்கும் பல காரணங்களால் ஆண்களுக்கு ஆண்மைக் குறைப்பாடு ஏற்படுகின்றது. சிலருக்கு மரபணுக் கோளாறுகள் காரணமாகவும், விந்தணு உற்பத்தியில் குறைப்பாடு ஏற்படலாம். ஆயினும் நமது விஞ்ஞானமயமான உலகில் நமது மார்டன் வாழ்க்கை முறையும் கூட பல சமயங்களில் ஆண்மை குறைப்பாட்டிற்கு காரணமாக அமைகிறது. ஏன் நீங்கள் அறிவீர்களா? ஆண்கள் அணியும் இறுக்கமான ஜீன்ஸ் கூட ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்தும், விந்தணு உற்பத்தியைக் குறைக்கும்.

இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட நிவாரணங்கள் இல்லையா? என்றால். இருக்கிறது நிறைய நிவாரணங்கள் இருக்கிறது. ஏன் நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் உணவுப் பொருட்களிலேயே இதற்கான தீர்வுகள் நிறைந்துக் கிடக்கின்றன. இவ்வளவு நிவாரணங்கள் இருந்தும். ஆண்களுக்கு இந்த பிரச்சனைகள் தொடரக் காரணம், நமது உணவுப் பழக்கத்தில் நாமாகவே ஏற்படுத்திக் கொண்ட மாற்றங்களே ஆகும். விந்தணு உற்பத்தி மற்றும் ஆண்மைக் குறைப்பாடு பிரச்சனைகளில் இருந்து எளிதாக விடுபட நமது பாரம்பரிய உணவுப் பொருட்களை உட்க்கொண்டாலே போதுமானது. சரி வாருங்கள் இதற்கான தீர்வினை அறிந்து கொள்ளலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீரகம்

சீரகம்

சீரகம், வில்வபட்டை இரண்டையும் நன்கு இடித்து பொடியாக்கி நெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

கீரை

கீரை

தாளிக் கீரையை சுத்தம் செய்து பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் விந்து குறைபாடு குறையும்.

எள்ளுப்பூ

எள்ளுப்பூ

எள்ளுப்பூவை எடுத்து சுத்தம் செய்து பசும்பாலில் போட்டு நன்கு காய்ச்சி சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

புளியங்கொட்டை மற்றும் ஓமம்

புளியங்கொட்டை மற்றும் ஓமம்

புளியங்கொட்டையை நன்கு இடித்து பொடி செய்து, அதனுடன் ஓமத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால், விந்து உற்பத்தி அதிகரித்து, ஆண்மை குறைப்பாடு குறையும்.

தேங்காய்

தேங்காய்

தேங்காய் துவையலில் கசகசாவை சேர்த்து வைத்து அரைத்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு குறையும்.

அத்திப்பழம்

அத்திப்பழம்

ஆண்மை நீங்க மற்றும் விந்தணு அதிகரிக்க அத்திப்பழத்தை 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகும்.

அரசமர விதை

அரசமர விதை

விந்து அதிகரிக்க, அரசமரத்தின் விதையை தூள் செய்து அதை சாப்பிட்டு வருதல் நல்ல பயன் தரும். இதனால் ஆண்மை குறைப்பாடு குறையும்.

பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழம்

இரவில் பேரீச்சம்பழத்தை ஆட்டுப்பாலில் ஊற வைத்து மறுநாள் காலையில் ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

பாதாம்

பாதாம்

பாதாம் பருப்புகளுடன், ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் சேர்த்து இரவில் அருந்தி வந்தால், விந்து உற்பத்தி மேம்படும் அதனால் விரைவில் ஆண்மை குறைபாடுகளில் இருந்து தீர்வு பெறலாம்.

பலாப்பழம்

பலாப்பழம்

பலா பிஞ்சினை ச‌மைத்து மதிய உணவில் சேர்த்து சாப்பிட்டு வர‌, விந்து நன்கு உற்பத்தி அதிகரித்து ஆண்மை குறைப்பாடு நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods That Generate Your Sperm Efficiency

Here you can know about the foods that generate your sperm efficiency.
Story first published: Monday, February 9, 2015, 13:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter