திருமணமான ஆண்கள் தங்கள் டயட்டில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

புதிதாக திருமணமான ஒவ்வொரு ஆணும் படுக்கையில் சிறப்பாக செயல்பட்டு தன் மனைவியை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நினைப்பது மட்டுமின்றி, அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்றெல்லாம் தேடிக் கண்டுப்பிடித்து அவற்றைப் பின்பற்றுவார்கள். அதில் முக்கியமாக விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் பாலுணர்ச்சியைத் தூண்டும் உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு அவற்றை அதிகம் சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பாலுணர்வைத் தூண்டும் மற்றும் விந்தணுவின் எண்ணிக்கையையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். மேலும் இந்த உணவுகளை குழந்தைப் பெற முயற்சிப்போர் உட்கொண்டு வந்தாலும், நல்ல பலன் கிடைக்கும். சரி, இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் காதல் ஹார்மோன்களைத் தூண்டும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. மேலும் வாழைப்பழம் உடலின் ஆற்றலை அதிகரிக்கும். ஆகவே ஆண்கள் தினமும் வாழைப்பழத்தை உட்கொண்டு வருவது படுக்கையில் சிறப்பாக செயல்பட உதவும். (ஒருவேளை இதனால் தான் முதலிரவு அறையில் வாழைப்பழத்தை வைக்கிறார்களோ!)

சாக்லெட்

சாக்லெட்

சாக்லெட்டில் உள்ள ஃபீனைல் எத்திலமைன் என்னும் சக்தி வாய்ந்த ரசாயன சேர்மம் காதல் ஹார்மோன்களைத் தூண்டும். மேலும் இந்த ரசாயனம் பரவச நிலை மற்றும் சந்தோஷத்தை உணர வைக்கும் ஹார்மோனான டோபமைனையும் வெளியிடச் செய்து, உறவில் சிறப்பாக செயல்பட உதவும்.

பூண்டு

பூண்டு

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு பூண்டு மிகச்சிறந்த உணவுப் பொருள். இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள், உடலின் அனைத்து உறுப்புக்களுக்கும் இரத்த ஓட்டத்தை சீராகச் செல்ல வழிவகுக்கும்.

கடல் சிப்பி

கடல் சிப்பி

கடல் சிப்பியில் செக்ஸ் ஹார்மோன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. மேலும் ஜிங்க் விந்தணுவின் உற்பத்திக்கும் பெரிதும் உதவி புரியும். எனவே அவ்வப்போது கடல் சிப்பியை உட்கொண்டு வாருங்கள்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பச்சை இலைக் காய்கறிகளில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. குறிப்பாக பசலைக்கீரை பிறப்புறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உறவில் பேரின்பத்தை அடைய உதவும் வயாகரா போன்று செயல்படும்.

தர்பூசணி

தர்பூசணி

ஆய்வு ஒன்றில் தர்பூசணி பழம் வயாகரா போன்று செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. அதிலும் தர்பூசணி பழத்தின் தோலுக்கு மேலே உள்ள வெள்ளை நிறப் பகுதியில் சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, பாலுணர்ச்சியைத் தூண்டி விறைப்புத்தன்மை பிரச்சனையைப் போக்குமாம்.

மாதுளை

மாதுளை

மாதுளை கூட வயாகரா போன்று செயல்படும். மாதுளையில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பிறப்புறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். மேலும் இது 100 சதவீதம் பக்கவிளைவு இல்லாததும் கூட.

முருங்கை

முருங்கை

ஆய்வுகளில் முருங்கை சிறந்த வயாகரா என்றும், ஆண்கள் இதனை அதிகம் உட்கொண்டு வந்தால், பாலுணர்ச்சி எக்கச்சக்கமாக தூண்டப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods Every Married Man Must Add To His Diet

Foods for the married man, here are some options you ladies have to pamper your men with. These foods will make him active and fit.
Subscribe Newsletter