செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய பழங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உடல் ஆரோக்கியமாக இருக்க அன்றாடம் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டியது அவசியம். உடல்நல நிபுணர்களும், உடலுக்கு போதிய ஆற்றல் கிடைக்க வேண்டுமானால், தினமும் குறைந்தது 2 வகையான பழங்களை உட்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.

குறிப்பாக வாழைப்பழம் மற்றும் பப்பாளியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் இவ்விரண்டு பழங்களிலும் நார்ச்சத்து மற்றும் சோடியத்துடன் வேறு பல சத்துக்களும் நிறைந்துள்ளதால், இவற்றை உட்கொண்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படலாம்.

அதுமட்டுமின்றி, சில பழங்களை உணவு உண்ட பின் உட்கொண்டு வந்தால், செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் அந்த பழங்களில் உணவுகளை எளிதில் உடைக்கும் நொதிகள் உள்ளன. சரி, இப்போது செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்பட உணவுக்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள் எவையென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேரிக்காய்

பேரிக்காய்

பேரிக்காயை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும். சமீபத்திய ஆய்வு ஒன்றிலும், பேரிக்காயில் ஏராளமான அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்பட்டு, மலச்சிக்கல் ஏற்படுவது குறைவது தெரிய வந்துள்ளது. மேலும் பேரிக்காயில் கொலஸ்ட்ரால், சோடியம், கொழுப்பு போன்றவை இல்லாததோடு, 190 மிகி பொட்டாசியம் உள்ளதால், செரிமானம் நன்கு நடைபெறும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளிலும் நார்ச்சத்து வளமாக உள்ளது. இத்தகைய ஆப்பிளை உணவு உண்ட 15 நிமிடத்திற்கு பின் உட்கொண்டால், உண்ட உணவுப் பொருட்கள் எளிதாக உடைக்கப்பட்டு, செரிமான மண்டலத்தின் இயக்கம் ஆரோக்கியமாக இருக்கும்.

ராஸ்ப்பெர்ரி

ராஸ்ப்பெர்ரி

நீரிழிவு நோய் உள்ளவர்கள் செரிமான பிரச்சனையால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தால், ராஸ்ப்பெர்ரியை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதோடு, சர்க்கரை மற்றும் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது.

பப்பாளி

பப்பாளி

உங்கள் செரிமான பிரச்சனையை 24 மணிநேரத்தில் சரிசெய்ய வேண்டுமானால், ஓரளவு பச்சையாக உள்ள பப்பாளியை சாப்பிடுங்கள். ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதோடு, உணவை எளிதில் உடைக்கும் பாப்பைன் என்னும் பொருளும் அதிகம் உள்ளது.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது குறையும். அதற்கு இதனை காலையிலோ அல்லது உணவு உண்ட பின்னரோ உட்கொள்ளலாம்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் புரோமெலைன் என்னும் உணவை எளிதில் உடைக்கும் நொதி ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே உங்களின் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், இதனை வாரம் ஒருமுறையாவது உட்கொள்ளுங்கள்.

அத்திப்பழம்

அத்திப்பழம்

உலர்ந்த அத்திப்பழத்தில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே நீங்கள் உண்ட உணவு எளிதில் செரிமானமடைய, உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் உட்கொண்டு வாருங்கள்.

வெண்ணெய் பழம்/அவகேடோ

வெண்ணெய் பழம்/அவகேடோ

உணவு உண்ட பின்னர் அவகேடோ பழத்தை மில்க் ஷேக் போட்டு குடித்தால், உண்ட உணவு எளிதில் செரித்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Eat These Fruits To Improve Digestion

Here are some of the best foods to consume post a meal to aid in better digestion. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter