For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

படிக்கும் போது புத்தியை ஒருமுனைப்படுத்த உதவும் உணவுகள்!!!

By Ashok CR
|

பரீட்சை வரும் காலங்களில், என்ன சாப்பிட்டால் புத்தியை ஒருமுனைப்படுத்தலாம் என்பதில் நகரத்தை சேர்ந்த குழந்தைகள் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். படிப்பில் கவனத்தை செலுத்தி புத்தியை ஒருமுனைப்படுத்த உணவுகள் தான் ஒரே வழி என பல ஆராய்ச்சிகள் கூறியுள்ளது. மேலும் இது நினைவாற்றல் சக்தியையும் கூட அதிகரிக்கிறது. கேட்க நம்பும்படியாக இல்லாவிட்டாலும் கூட, இது உண்மையே. அவ்வகை உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொண்டு மூளையை நன்றாக தீட்டுங்கள்.

அறிவுத்திறனை மெதுவாக அழிக்கும் 11 உணவுகள்!!!

குறிப்பாக, கடைசி நிமிட வேலை, பரீட்சை என்றால் பெற்றோர்களிடம் இருந்து வரும் அழுத்தம் இவைகளை சொல்லலாம். படித்ததெல்லாம் மறந்து போனது போல் இருக்கும்படியான எண்ணங்கள் எப்போதும் பலருக்கும் வருவதுண்டு. புத்தியை ஒருமுனைப்படுத்துவது என்பது புதிதான பிரச்சனை கிடையாது. அது அனைவராலும் சந்திக்கப்படும் ஒரு பொதுவான பிரச்சனையே. ஒருவரின் வாழ்க்கையில் பரீட்சை என வரும் போது, ஞாபகப்படுத்தி அதனை சேமித்து வைத்துக் கொள்வது என்பது எரிச்சலடைய வைக்கின்ற விஷயமே.

உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் 10 உணவுகள்!!!

கீழ்கூறிய உணவுகள் உங்கள் புத்தியை ஒருமுனைப்படுத்த உதவுவதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கும். உங்கள் நரம்புகளை சாந்தப்படுத்தி உங்களை யோசிக்க வைப்பதற்கு உதவி புரியும். படிக்கும் போது இந்த உணவுகளை உட்கொண்ட பிறகும் கூட, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படுவதை நீங்கள் கவனிக்கலாம். இந்த உணவுகளால் உங்கள் மூளை செயல்பாடு மேம்படும்; ஒருமுனைப்படுத்துதல் அதிகரிக்கும்; உங்களின் கவனம் சிதறமால் இருக்கும்.

சரி, அப்படிப்பட்ட உணவுகளைப் பற்றி இப்போது பார்க்கலாம், வாங்க!

நல்ல ஆரோக்கியமான வாழ்விற்கான 10 சூப்பர் உணவுகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வால்நட்ஸ்

வால்நட்ஸ்

வால்நட்ஸை உற்றுப் பாருங்கள், பார்க்க சின்ன மூளையை போல் உள்ளதல்லவா? இந்த மூளை உணவு வளமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை கொண்டுள்ளது. இது மூளை அணுக்களின் DNA-வில் இயக்க உறுப்புகள் பாதிப்பை ஏற்படுத்தாமல் போராடும். இதனால் புத்தி ஒருமுனைப்படுத்துதல் மேம்படும்.

சாக்லெட்

சாக்லெட்

படிக்கும் போது உண்ண வேண்டிய பொருட்களில் சிறந்த உணவாக விளங்குகிறது டார்க் சாக்லெட். அதில் உள்ள காப்ஃபைன் அதே வேலையை தான் செய்கிறது. கூடுதலாக இது மூளையை காக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உணவாகவும் விளங்குகிறது.

பெர்ரிக்கள்

பெர்ரிக்கள்

பரீட்சைக்கு படிக்கும் போது அவசியம் உண்ண வேண்டிய உணவாக விளங்குகிறது ப்ளூபெர்ரி. இது மூளையை அழுத்தத்திலிருந்து காக்கும். மேலும் படிக்கும் திறனையும் மேம்படுத்த உதவும்.

பசலைக் கீரைகள்

பசலைக் கீரைகள்

பசலைக் கீரைகளை படிக்கும் போது உட்கொண்டால் அது பெரிதும் உதவியாக இருக்கும். கீரையில் வைட்டமின் ஈ உள்ளதால், அது உங்கள் அறிவுத்திறன் செயற்பாட்டை மேம்படுத்தும். மேலும் உங்கள் மூளையின் திசுக்களையும் கூட அதிகரிக்கும்.

கேரட்

கேரட்

கேரட் பார்வைக்கு மட்டுமல்லாது மூளையின் செயற்பாட்டிற்கும் நல்லது. முழுமையான ஆரஞ்சு நிற கேரட்டுகளை உட்கொண்டால், அலர்ஜியை குறைத்து அறிவை மீள் நிலைப்படுத்த உதவும். கேரட்டில் உள்ள லுட்டியோலின் என்ற பொருள் ஞாபக மறதியை குறைத்து மூளையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

மீன்

மீன்

மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வளமையாக உள்ளதால், படிக்கும் போது அது நம் மூளையை பெரிதளவில் ஊக்குவிக்கும். மீனில் உள்ள முக்கிய கொழுப்பு அமிலங்கள் உங்கள் நினைவாற்றலை தீட்ட உதவும் என ஆராய்ச்சிகள் கூறுகிறது.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

பரீட்சை நேரத்தில் காலை உணவை கண்டிப்பாக தவறவிடாதீர்கள். காலை உணவிற்கு முழு தானியத்தை உண்ணுங்கள். இது படிக்கும் போது, அன்றைய நாள் முழுவதும் உங்கள் கவனத்தை ஒருமுனைப்படுத்த உதவும். காலை உணவிற்கு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை விட முழு தானிய உணவே நல்லது.

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகளில் டோபமைன் வளமையாக உள்ளது. இது பரீட்சைக்கு படிக்கும் போது ஊக்கம் மற்றும் ஒருமுனைப்படுத்தல் ஆகியவற்றை அதிகரிக்க உதவும் மூளை இரசாயனமாகும்.

பீன்ஸ்

பீன்ஸ்

பரீட்சைக்கு படிக்கும் போது புத்தியை ஒருமுனைப்படுத்த உதவும் சிறந்த உணவுகளில் ஒன்று தான் பீன்ஸ். அதிலும் ஒரு முறை உட்கொண்டால் அது உந்துவித்தலை அதிகரிக்கும். அதே போல் சீரான ஆற்றலை அளிக்கும். இதற்கு காரணம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையுடன் வைத்திருக்க உதவும்.

ஆளி விதை

ஆளி விதை

சூரியகாந்தி விதிகளை போலவே, பரீட்சை நேரத்தில் புத்தியை ஒருமுனைப்படுத்த ஆளி விதைகளும் பெரிதும் உதவும். ஆளி விதையில் மக்னீசியம், பி வைட்டமின்கள், ஒமேகா-3 கொழுப்பமிலங்கள், நார்ச்சத்து ஆகியவைகள் உள்ளது. இது மனதை தெளிவாக்க உதவும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது செரோடோனின், நோரிபைன்ப்ரைன் மற்றும் டோபமைன் உற்பத்திக்கு துணை புரியும். இந்த மூன்று பொருட்களுமே புத்தி ஒருமுனைப்படுத்தலுக்கு முக்கியமானது.

காபி

காபி

அளவுக்கு அதிகமாக காபி குடிப்பது உடலுக்கு நல்லதல்ல. ஆனால் சூடான ஒரு கப் காபி உங்கள் கவனம், ஆற்றல் திறன் மற்றும் புத்தி ஒருமுனைப்படுத்துதலை படிக்கும் போது மேம்படுத்த உதவும்.

கிரீன் டீ

கிரீன் டீ

படிக்கும் போது உங்கள் புத்தி ஒருமுனைப்படுத்தல் அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் உணவுடன் கிரீன் டீயையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிலுள்ள பொருட்கள் உங்கள் கவனம் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Help In Concentration While Studying

These foods will in concentration and memory while studying. Make sure you add these foods to your daily diet.
Desktop Bottom Promotion