For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாரடைப்பு வராமல் இருக்கணுமா? அப்ப இந்த 5 யோகாசனங்களை செய்யுங்க...

தினந்தோறும் யோகா செய்வதன் மூலம் மனிதருக்கு ஏற்படக்கூடிய பல வகை நோய்களைத் தவிர்க்கலாம். குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் தவிர்க்க யோகா செய்யலாம்.

|

உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றிற்கும் நன்மை பயக்கக்கூடிய ஒன்று யோகா. ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினந்தோறும் யோகா செய்தாலே போதும். இன்றைய காலக்கட்டத்தில் நாம் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சனைகள், அலுவலக வேலை போன்றவை மன அழுத்தத்தை ஏற்படுத்தி, அவை நம் உடல்நல சரிவிற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. அந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான சுலபமான வழிகளில் யோகா மற்றும் தியானம் போன்றவை முக்கிய இடம் வகிக்கிறது. தினந்தோறும் யோகா செய்வதன் மூலம் மனிதருக்கு ஏற்படக்கூடிய பல வகை நோய்களைத் தவிர்க்கலாம். குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் தவிர்க்க யோகா செய்யலாம். அந்த வகையில், இமயமலை சித்தா, கிராண்ட் மாஸ்டர் அக்ஷர் 5 யோகா ஆசனங்களைப் பகிர்ந்துகொள்கிறார். இந்த யோகானங்கள் மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க உதவுகிறது.

Yoga Asanas To Avoid Heart Stroke

வழக்கமாக தொடர்ந்து யோகா பயிற்சி செய்வதன் மூலம் மன நிம்மதி மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்வைப் பெறலாம். மூச்சுப்பயிற்சியுடன் கூடிய யோகாசனம் செய்வது நிதானத்தையும், அமைதியையும் கொடுக்கும். குறிப்பாக, இது மன அழுத்தத்தைத் தடுக்கிறது. வாருங்கள், இப்போது மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க உதவும் 5 யோகாசனங்களை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்...

MOST READ: புதன் வக்ர பெயர்ச்சியால் அடுத்த ஒரு மாசம் கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிராணயாமா மற்றும் தியானத்தின் நன்மைகள்

பிராணயாமா மற்றும் தியானத்தின் நன்மைகள்

யோகா, தியானம் செய்ய தொடங்குபவர்கள் ஆரம்ப காலத்தில் சிறு தடுமாற்றங்களை சந்திக்க நேரிடுவது இயல்பு. ஆரம்ப தியானம், ஸ்வாஸ் தியான், ஸ்திதி தியானம் போன்ற தியான நுட்பங்கள் மனதின் ஏற்ற இறக்கங்களுக்கு இடைநிறுத்தத்தைக் கொண்டு வருகின்றன. இது யோகா மற்றும் தியானம் செய்யும் போது உங்களை ஓய்வெடுக்கவும் மெதுவாக தொடரவும் அனுமதிக்கிறது. தொடர்ச்சியாக யோகா பயிற்சியை செய்வதன் மூலம், நீங்கள் மிகவும் நிம்மதியான மனநிலை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியமான நல்வாழ்வின் பலனைப் பெறத் தொடங்க பெரிதும் உதவிடும்.

மண்டுகாசனம்

மண்டுகாசனம்

செய்முறை:

* முதலில், நீங்கள் வஜ்ராசனாத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். இது ஒரு எளிய முழங்காலை பின் நோக்கி மடித்து அமரும் நிலையாகும்.

* இப்போது, ​​உங்கள் இரு கைகளிலும் கட்டை விரலை உள்ளங்கை நோக்கி மடித்து பின் 4 விரல்களாலும் கையை மூடி கொள்ளவும்.

* உங்கள் கைகளை தொப்புளின் இருபுறமும் வயிறு பகுதியில் வைக்கவும்.

* இப்போது மூச்சை வெளியே இழுத்து வயிற்றை லேசாக உள்ளே இழுத்து பிறகு, மெதுவாக முன்னோக்கி வளைந்து, உங்கள் கைகளால் தொப்புளை அழுத்தத் தொடங்குங்கள்.

* உங்களால் முடிந்தவரை முதுகை நேராக வைத்து, வளைவு நிலையில் எதிரே பார்க்க வேண்டும்.

* இப்போது இந்த நிலையில். மூச்சை நன்றாக வெளியே விட்டு, உங்களால் முடிந்தவரை அதே நிலையில் இருக்கவும்.

* இப்போது இந்த நிலையில் இருந்து எழும்போது, மூச்சை உள்ளே இழுத்து, பின்னர் மெதுவாக உங்கள் உடலை மேலே உயர்த்தி, உங்கள் கைகளை பக்கவாட்டில் வைத்து பின்னர் இயல்பு நிலைக்கு மாறி ஓய்வெடுங்கள்.

பத்மாசனம்

பத்மாசனம்

செய்முறை

* அர்த்த பத்மாசனத்தில் உங்கள் வலது பாதத்தை தூக்கி இடது தொடையின் மேல் வைத்தும், உங்கள் இடது பாதத்தைத் தூக்கி, வலது தொடையில் மேல் வைத்தும் அமரவும்.

* உங்கள் கால்களை இடுப்புக்கு அருகே இழுக்கவும்.

* பின்னர், உங்கள் முழங்கால்களை தரையில் இறக்கி தொடும் படி வைக்கவும்.

* உங்கள் உள்ளங்கைகளை உங்கள் முழங்கால்களில் மேல்நோக்கிய படி வைக்கவும்.

* சிறிது நேரம் இதே நிலையில் வைத்தபடி உட்காரவும்.

* பின்னர், இயல்பு நிலைக்கு திரும்பி சிறிது நேர ஓய்விற்கு பிறகு மீண்டும் அதையே செய்யவும்.

பவனமுக்தாசனம்

பவனமுக்தாசனம்

செய்முறை

* முதலில் உங்கள் முதுகு தரையில் படும்படி படுத்துக் கொள்ளவும்.

* பின்னர், மூச்சை உள்ளிழுத்து கால்களை மெதுவாக தரையிலிருந்து 90 டிகிரி கோணத்திற்கு உயர்த்தவும்.

* இரண்டு கால்களையும் முழங்காலை வளைத்து, தொடைகளை அடிவயிற்றை தொடும்படி வைத்து, முழங்கால்களையும் கணுக்கால்களையும் ஒன்றாக இணைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* இப்போது, முழங்கால்களை இரண்டு கைகளாலும், கைகளின் எதிர் முழங்கைகளை தொடும் படி பிடித்து கொள்ளவும்.

* பின்னர், கழுத்தை வளைத்து கன்னத்தை முழங்கால் தொடும்படி வைக்கவும். இந்த ஆசனத்தை செய்யும் போது, சாதாரணமாக சுவாசிக்கவும்.

மலாசனம் (கழிவு வெளியேற்றும் நிலை)

மலாசனம் (கழிவு வெளியேற்றும் நிலை)

செய்முறை

* முதலில் நேராக நிமிர்ந்து கைகளை கூப்பி நிற்க வேண்டும்.

* இப்போது உங்கள் முழங்கால்களை வளைத்து, இடுப்பை இறக்கி, உங்கள் குதிகால்களில் உட்காரவும்.

* உங்கள் கால்கள் தரையில் தட்டையாக விரிந்து இருப்பதை உறுதி செய்யவும்.

* முக்கியமாக முதுகை நேராக வைத்து அமரவும்.

* சிறிது நேரம் இதே நிலையில் அமர்ந்து சாதாரணமாக சுவாசிக்கவும்.

நவுகாசனம்

நவுகாசனம்

செய்முறை

* உங்கள் முதுகு தரையில் படும்படி படுத்துக் கொள்ளுங்கள்.

* இப்போது முகுது எலும்புகளை சமப்படுத்த உங்கள் தலை மற்றும் கால்களை உயர்த்தவும்.

* உங்கள் கால்விரல்கள் உங்கள் கண்களுக்கு நேராக இருக்க வேண்டும்.

* உங்கள் முழங்கால்களையும் பின்புறத்தையும் நேராக வைக்கவும்.

* உங்கள் கைகளை தரைக்கு இணையாக முழங்கால்களை நோக்கி முன்னோக்கி நீட்டவும்.

* இந்த நிலையில் உங்கள் வயிற்று தசைகளை உள்ளே இழுத்து பிடிக்கவும்.

* குறிப்பாக உங்கள் முதுகை நேராக வைத்திருக்க வேண்டும்.

* பின்னர், மூச்சை உள்ளிழுத்து சாதாரணமாக வெளியிடவும்.

முடிவுரை

முடிவுரை

ஒட்டுமொத்த உடல்நலத்தையும், குறிப்பாக இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க யோகா மிகவும் சிறந்தது. சூரிய நமஸ்காரம் மற்றும் சந்திர நமஸ்காரம் போன்ற பயிற்சிகள் இதயத்தை ஆரோக்கியப்படுத்தும் பயிற்சிகளாக கருதப்படுகின்றன. இந்த யோகாசனங்களை காலையில் அல்லது மாலை நேரங்களில் வாரத்தில் குறைந்தது மூன்று முறையாவது செய்யவும். பஸ்த்ரிகா மற்றும் பிரம்மரி போன்ற பிராணயாமா நுட்பங்கள் உங்கள் இதயத்தைப் பாதுகாக்கவும், இதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் விரும்புவோர் தினசரி யோகானசங்களில் சேர்த்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Yoga Asanas To Avoid Heart Stroke in Tamil

Here are some yoga asanas to avoid heart stroke. Read on to know more...
Desktop Bottom Promotion