For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை குறைக்க முயலும்போது கொழுப்பு உணவுகளை நீங்க எடுத்துக்கணுமா? வேண்டாமா?

கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவை நீங்கள் சாப்பிட்டால், உங்கள் உடல் எப்போதும் அந்த கார்போஹைட்ரேட்டுகளை எரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கும்.

|

கொழுப்புக்கள் உடலில் எரிவதால் உடல் பருமன் மற்றும் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்களானால், சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். அவற்றில் முக்கியமானது ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது. உடல் எடை குறைப்பு திட்டம் என்றவுடன், கொழுப்பு இல்லாத உணவைப் பின்பற்றுகிறீர்களா? ஆம். எனில், உடனே அதை நிறுத்துங்கள். உணவுக்குப் பிறகு பெரும்பாலான மக்கள் செய்யும் முதல் காரியம் உணவில் இருந்து கொழுப்புகளை அகற்றுவதாகும். கொழுப்புகளை உணவில் இருந்து நீக்குவது மக்களுக்கு சாதாரணமாகத் தோன்றுகிறது.

Why intake of fats is essential on a weight loss diet in tamil

ஏனெனில் கொழுப்புகள் ஆரோக்கியத்திற்கு மோசமானவை மற்றும் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும் என்று எப்போதும் நமக்கு கூறப்படுபவை. அவற்றை நாமும் நம்பி கொண்டிருக்கிறோம். இதனால்தான் கொழுப்புகள் உண்மையில் எடை இழப்பு செயல்முறைக்கு உதவ முடியும் என்ற உண்மையை மக்கள் புரிந்துகொள்ள சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். இக்கட்டுரையில், எடை இழப்பு உணவில் கொழுப்புகளை உட்கொள்வது ஏன் அவசியம் என்று காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொழுப்புகளின் முக்கியத்துவம்

கொழுப்புகளின் முக்கியத்துவம்

உணவு கொழுப்பு ஒரு சீரான உணவின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு அத்தியாவசிய மேக்ரோநியூட்ரியண்ட் ஆகும். கொழுப்புகள் உங்கள் மூளை மற்றும் நரம்பு திசுக்களுக்கான கட்டுமானத் தொகுதிகளாக செயல்படுகின்றன. கொழுப்புகள் உயிரணுக்களில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகின்றன. கொழுப்புகள் மற்றும் கொழுப்பு அமிலங்களின் வடிவத்தில் A, D, E மற்றும் K. போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன. கொழுப்புகள் உங்கள் உடலை பாதுகாக்க உதவுகின்றன மற்றும் அதிகப்படியான ஆற்றல் சேமிக்கப்படுகின்றன.

MOST READ: ஆயுர்வேதத்தின்படி 'இந்த' டீ உங்க செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுதாம்...!

 ஆரோக்கியமான கொழுப்பு

ஆரோக்கியமான கொழுப்பு

உங்கள் தினசரி உணவில் நெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிடு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சிறிய அளவில் சேர்க்கலாம். ஒரு நாளைக்கு ஒரு சில நட்ஸ்கள் உங்கள் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்குகின்றன.

கொழுப்பு ஒரு எரிபொருளாக

கொழுப்பு ஒரு எரிபொருளாக

உங்கள் உடல் ஆற்றலுக்காக கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை சார்ந்துள்ளது. கார்போஹைட்ரேட்டுகள் ஆற்றலின் முதன்மை ஆதாரமாக இருக்கும்போது, கொழுப்புகள் இரண்டாம் நிலை அல்லது காப்பு சக்தியாக செயல்படுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் உடல் முதலில் கார்போஹைட்ரேட்டுகளை எரிக்கிறது மற்றும் அவை தீர்ந்துவிட்டால், அது கொழுப்புகளாக மாறும்.

ஆரோக்கியமான சீரான உணவு

ஆரோக்கியமான சீரான உணவு

நீங்கள் ஒரு சீரான உணவை எடுத்துக் கொண்டால், உங்கள் உடல் இயற்கையாகவே முதலில் கார்போஹைட்ரேட்டுகளை எரித்து பின்னர் கொழுப்புகளுக்கு மாறும். ஆனால், சமநிலையற்ற உணவின் காரணமாக பலர் தினமும் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடுவதால், அவர்களின் உடலுக்கு அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து அன்றைக்குத் தேவையான அனைத்து சக்தியும் கிடைக்கிறது. இதன் காரணமாக, உட்கொள்ளும் கொழுப்புகள் உடலுக்கு எந்தப் பயனும் இல்லை மற்றும் உடலில் சேர்வதால் எடை அதிகரிக்கும்.

MOST READ: சர்க்கரை நோயாளிகளே! உங்க குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த 'இந்த' ஒரு பொருள் போதுமாம்...!

இன்சுலின் பங்கு

இன்சுலின் பங்கு

நீங்கள் உணவை உண்ணும்போது, உடலில் இன்சுலின் தூண்டப்படும். இன்சுலின் உணவை ஆற்றலாக மாற்ற உடலை சமிக்ஞை செய்கிறது, பின்னர் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்பை தினசரி வேலைகளைச் செய்ய உடலைத் தூண்டுகிறது. அதிக இன்சுலின் அளவு உங்கள் உடலை கொழுப்பை சேமிக்கும் நிலையில் வைத்திருக்கும், அதே நேரத்தில் குறைந்த இன்சுலின் அளவு உங்கள் உடலை ஆற்றலுக்காக கொழுப்பை எரிக்க செய்யும்.

எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்

எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்

கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவை நீங்கள் சாப்பிட்டால், உங்கள் உடல் எப்போதும் அந்த கார்போஹைட்ரேட்டுகளை எரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கும். மேலும் பிற்காலத்தில் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்புகளை ஒருபோதும் பயன்படுத்தாது. இது காலப்போக்கில் கொழுப்புகள் குவிந்து எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

MOST READ: டெய்லி 'இந்த' ஆறு உணவை நீங்க சாப்பிட்டீங்கனா? உங்க உடல் எடை ரொம்ப வேகமா குறையுமாம்...!

கொழுப்புகளை எரிப்பது

கொழுப்புகளை எரிப்பது

மறுபுறம், நீங்கள் உங்கள் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் குறைத்தால், உடல் உட்கொள்ளும் மட்டுப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை விரைவாக எரித்து பின்னர் சேமித்து வைக்கப்பட்ட கொழுப்புகளை ஆற்றலுக்காகத் தட்டும். இந்த செயல்முறை சேமித்த ஆற்றல் அல்லது கொழுப்புகளை எரிக்கிறது மற்றும் படிப்படியாக எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

எல்லாமே அதிகமாக இருப்பது மோசமானது என்பது அனைவரும் அறிந்த உண்மை. நீங்கள் அதிகப்படியான கொழுப்புகளை உட்கொண்டால், நீங்கள் நிச்சயமாக எடை அதிகரிப்பீர்கள். மேலும், வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதும் உங்கள் எடை இழப்பு பயணத்தில் ஒரு தடையாக மாறும். எனவே, உங்கள் உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளை மிதமான அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது மற்றும் உங்கள் உணவை வழக்கமான உடற்பயிற்சியுடன் இணைத்து உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல் உடலமைப்பையும் பராமரிப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why intake of fats is essential on a weight loss diet in tamil

Here we are explain to why intake of fats is essential on a weight loss diet in tamil.
Story first published: Friday, September 17, 2021, 12:22 [IST]
Desktop Bottom Promotion