For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க உடலில் உள்ள கொழுப்புகளோட வகைகள் மற்றும் அது உங்க உயிருக்கு என்ன ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா?

எல்லாவற்றிற்கும் மேலாக, உள்ளுறுப்பு கொழுப்பு என்பது உடலில் சேரும் கொழுப்பின் மிகவும் தீங்கு விளைவிக்கும் வகையாகும். இந்த வகையான கொழுப்பு வயிற்றுப் பகுதியில் ஆழமாக அமர்ந்து, சிறுநீரகங்கள், குடல், இதயம் மற்றும் பிற உறுப்பு

|

இன்றைய காலகட்டத்தில் தொப்பை கொழுப்பு பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. உடலில் அதிகப்படியான கொழுப்பு குவிவது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. இது உங்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடலில் எங்கும் இருக்கும் கொழுப்பு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. குறிப்பாக அது நடுப்பகுதியில் அதாவது உங்கள் வயிற்றுப்பகுதியில் கொழுப்பு இருந்தால் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் கொழுப்பு விநியோகம் நம் கையில் இல்லை. இது வயது, பாலினம், ஹார்மோன்கள் நிலை மற்றும் மரபணுக்களால் பாதிக்கப்படுகிறது.

Types of body fat and which one is harmful for health

பலருக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் நான்கு அடிப்படை வகையான கொழுப்புகள் உள்ளன, ஒவ்வொன்றும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ளது. இதுதவிர, எல்லா வகையான கொழுப்புகளும் ஒரே மாதிரியானவை அல்ல, ஒரே மாதிரியாக செயல்படுகின்றன. கொழுப்புகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தோல் கொழுப்பு

தோல் கொழுப்பு

இந்த வகையான கொழுப்பு தசையின் மேல், தோலின் கீழ் அமர்ந்திருக்கும். பழுப்பு மற்றும் வெள்ளை கொழுப்பு கலங்களின் கலவையிலிருந்து தயாரிக்கப்படும் நமது உடலில் 90 சதவிகிதம் கொழுப்பு தோலடி ஆகும். இந்த வகையான கொழுப்பை கைகள், தொப்பை, தொடைகள் அல்லது பிட்டம் ஆகியவற்றில் எளிதில் சேர்ந்துவிடும். சில அளவுகளில் தோலடி கொழுப்பு இருப்பது சாதாரணமாகவும் ஆரோக்கியமாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், இந்த கொழுப்பு அதிகப்படியான அளவு இருப்பது ஹார்மோன்கள் மற்றும் உணர்திறன் அளவில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்.

MOST READ: உயிருக்கு ஆபத்தான பாதிப்பை ஏற்படுத்தும் இரத்த அழுத்தத்தை இயற்கையாக எப்படி குறைக்கலாம் தெரியுமா?

உள்ளுறுப்பு கொழுப்பு

உள்ளுறுப்பு கொழுப்பு

எல்லாவற்றிற்கும் மேலாக, உள்ளுறுப்பு கொழுப்பு என்பது உடலில் சேரும் கொழுப்பின் மிகவும் தீங்கு விளைவிக்கும் வகையாகும். இந்த வகையான கொழுப்பு வயிற்றுப் பகுதியில் ஆழமாக அமர்ந்து, சிறுநீரகங்கள், குடல், இதயம் மற்றும் பிற உறுப்புகளைச் சுற்றி உள்ளது. அதனால்தான் இது தொப்பை கொழுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு நபரின் நடுப்பகுதியில் உள்ள அதிகப்படியான உள்ளுறுப்பு கொழுப்பு நீரிழிவு, இதய நோய், பக்கவாதம், தமனி நோய் மற்றும் சில புற்றுநோய்களின் அபாயத்திற்கு வழிவகுக்கும். இந்த வகையான கொழுப்பைத் தொட முடியாது, ஏனெனில் அவை திசுக்களுக்கு அடியில் ஆழமாக இருப்பதால் உணர மட்டுமே முடியும்.

பழுப்பு கொழுப்பு

பழுப்பு கொழுப்பு

பழுப்பு கொழுப்பு பெரும்பாலும் குழந்தைகளில் காணப்படுகிறது. பெரியவர்களிடமும் இதுபோன்ற கொழுப்புகள் உள்ளன. ஆனால், இது தோள்கள் மற்றும் மார்புப் பகுதியைச் சுற்றி சிறிய அளவில் இருக்கும். இது ஒரு சிறப்பு வகையான கொழுப்பாகும், இது உடல் சூடாக இருக்க கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது. குளிர்ந்த வெப்பநிலை பழுப்பு கொழுப்பைச் செயல்படுத்தி அதிக கலோரிகளை எரிக்க உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

அத்தியாவசிய கொழுப்பு

அத்தியாவசிய கொழுப்பு

பெயர் குறிப்பிடுவது போல, இந்த வகையான கொழுப்பு வாழ்க்கைக்கும் ஆரோக்கியமான உடலுக்கும் அவசியம். அத்தியாவசிய கொழுப்பு பெரும்பாலும் மூளை, எலும்பு மஜ்ஜை, நரம்புகள் மற்றும் உறுப்புகளை பாதுகாக்கும் சவ்வுகளில் காணப்படுகிறது. கருவுறுதல், வைட்டமின் உறிஞ்சுதல் மற்றும் வெப்பநிலை கட்டுப்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். மேலும், ஹார்மோன்களின் கட்டுப்பாட்டிற்கு இந்த வகையான கொழுப்பு பொறுப்பு வகிக்கிறது.

MOST READ: ஹீரோயின் மாதிரி நீங்க அழகாக இருக்க புதினா உங்களுக்கு எப்படி உதவும் தெரியுமா?

வெள்ளை கொழுப்பு

வெள்ளை கொழுப்பு

ஒயிட் ஃபேட் எனப்படும் வெள்ளை கொழுப்பு, வெள்ளை நிறத்தில் இருப்பதால் இவ்வாறு அழைக்கின்றனர். இது இரத்தத்தில் குறைந்த அடர்த்தி மற்றும் மிடோகோன்றியா (Mitochondria) போன்ற காரணங்களால் உண்டாகிறது. இந்த கொழுப்பு செல்கள், பசியை தூண்டும் லெப்டின் செல்களை தூண்டும். இதன் காரனத்தால் அடிக்கடி பசி எடுத்துக் கொண்டே இருக்கும். ஆதலால், அடிக்கடி சாப்பிட நேரிடும். இது உங்கள் உடல் எடையை அதிகரிக்கும்.

இறுதிகுறிப்பு

இறுதிகுறிப்பு

உடற்பயிற்சிக்கான அமெரிக்க கவுன்சிலின் படி, ஒரு பெண்ணின் உடல் அமைப்பில் 10 முதல் 13 சதவிகிதம் அத்தியாவசிய கொழுப்பிலிருந்து வந்தால், அது ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஆண்களுக்கு இது 2 முதல் 5 சதவிகிதம் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Types of body fat and which one is harmful for health

Weight loss: Here we talking about the types of body fat, their benefits, risks and which one is harmful for health.
Story first published: Wednesday, August 4, 2021, 16:21 [IST]
Desktop Bottom Promotion