For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்குவாட்ஸ் Vs லுங்கெஸ் - இவற்றில் கால்களை வலுப்படுத்துவதில் சிறந்தது எது?

இடுப்புக்குக் கீழ் இருக்கும் உறுப்புகளான கால்கள், தொடைகள் மற்றும் பாதங்கள் போன்றவற்றை வலுப்படுத்துவதில் ஸ்குவாட்ஸ் (Squats) மற்றும் லுங்கெஸ் (lunges) ஆகிய உடற்பயிற்சிகள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

|

இடுப்புக்குக் கீழ் இருக்கும் உறுப்புகளான கால்கள், தொடைகள் மற்றும் பாதங்கள் போன்றவற்றை வலுப்படுத்துவதில் ஸ்குவாட்ஸ் (Squats) மற்றும் லுங்கெஸ் (lunges) ஆகிய உடற்பயிற்சிகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்த இரண்டு உடற்பயிற்சிகளும் தசைகளை இறுக்கமடையச் செய்வதோடு, அவை திறம்பட செயல்படவும் உதவுகின்றன.

Squats vs. Lunges: Whats Better For Toning Your Legs?

நமக்கு போதுமான அளவு நேரம் இருந்தால் இந்த இரண்டு உடற்பயிற்சிகளையும் ஒரே நாளில் செய்ய முடியும். ஆனால் நேரம் கிடைக்காத நேரத்தில் எந்த உடற்பயிற்சியை செய்வது நல்லது அல்லது எந்த உடற்பயிற்சியில் அதிக பலன் கிடைக்கும் என்ற குழப்பம் நமக்கு வரலாம். இரண்டு உடற்பயிற்சிகளும் ஏறக்குறைய ஒரே மாதிாியான பலன்களைத் தந்தாலும், இந்த இரண்டில் ஒன்று சற்று உயா்ந்து இருக்கிறது.

MOST READ: வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்க காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்!

ஆகவே நமது கீழ் உடல் உறுப்புகளுக்கு சிறந்த பலன்களைத் தருவது ஸ்குவாட்ஸா அல்லது லுங்கெஸா என்பதை இங்கு பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தசைகளை மையப்படுத்துதல்

தசைகளை மையப்படுத்துதல்

ஸ்குவாட்ஸ் மற்றும் லுங்கெஸ் ஆகிய இரண்டு உடற்பயிற்சிகளும் நமது தொடைப் பகுதிகள், தொடைகளின் முன்பக்க தசைப் பகுதி, மற்றும் காலின் பின்புறம் இருக்கும் தசைகளுக்கு வலிமையைத் தருகின்றன. ஆனால் நமது உடல் எடையைத் தாங்குவதற்காக காலை அசைக்கும் போது, தொடையின் மீடியஸ் தசையை (medius muscle) லுங்கெஸ் உடற்பயிற்சி தூண்டிவிடுகிறது. பக்கவாட்டு லுங்கெஸ் பயிற்சிகளைச் செய்யும் போது நமது உடலைத் தாங்கிப் பிடிப்பதில் இடுப்பு எலும்புகளும் மற்றும் தசைகளும் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆனால் ஸ்குவாட் பயிற்சிகளைச் செய்யும் போது அது தண்டுவட தசைகள் மற்றும் வயிற்றுத் தசைகள் ஆகியவற்றைத் தூண்டிவிடுகின்றது.

​எந்த உடற்பயிற்சி எளிமையானது?

​எந்த உடற்பயிற்சி எளிமையானது?

உடற்பயிற்சி என்ற உலகத்திற்குள் நீங்கள் சமீபத்தில் இணைந்திருந்தால், ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சியை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். புதியவா்களுக்கு லுங்கெஸ் பயிற்சியை விட ஸ்குவாட்ஸ் பயிற்சி எளிதாக இருக்கும். ஏனெனில் நாம் அன்றாடம் செய்யும் செயல்களான நாற்காலியில் அமா்தல் மற்றும் பளுக்களைத் தூக்குதல் போன்றவற்றை ஸ்குவாட்ஸ் பயிற்சி கொண்டிருக்கிறது. அதனால் அதைச் செய்வது மிகவும் எளிது.

லுங்கெஸ் பயிற்சியில் உடல் எடை முழுவதையும் ஒரு காலில் தாங்க வேண்டும். அதனால் புதியவா்களுக்கு இந்த பயிற்சி சற்று கடினமாக இருக்கும். தசைகளில் பிடிப்பு ஏற்படலாம் அல்லது காயங்கள் ஏற்படலாம். ஆகவே தொடக்கத்திலேயே லுங்கெஸ் பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்றால் தலைகீழான லுங்கெஸ் பயிற்சியைச் செய்ய வேண்டும்.

எந்த உடற்பயிற்சி சிறந்தது?

எந்த உடற்பயிற்சி சிறந்தது?

ஸ்குவாட்ஸ்

ஸ்குவாட்ஸா அல்லது லுங்கெஸா எது சிறந்தது என்பதில் பலவிதமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. சிலா் ஸ்குவாட்ஸ் பயிற்சிகள் லுங்கெஸை விட எளிதாக இருப்பதால் ஸ்குவாட்ஸ் பயிற்சிகளை தோ்ந்தெடுக்கின்றனா். மேலும் ஸ்குவாட்ஸ் மேல் மற்றும் கீழ் உடல் உறுப்புகளின் தசைகளை இறுக்கமடையச் செய்கின்றன. ஸ்குவாட்ஸ் பயிற்சிகளைச் செய்ய கெட்டில்பெல், பாா்பெல் அல்லது டம்பெல் போன்ற கருவிகளைப் பயன்படுத்தலாம்.

லுங்கெஸ்

லுங்கெஸ்

இரண்டு கால்களுக்கு இடையே இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை லுங்கெஸ் பயிற்சிகள் சாி செய்வதாக சில உடற்பயிற்சி நிபுணா்கள் நம்புகின்றனா். உடலின் ஒரு பகுதி மற்ற பகுதியைவிட வலிமையாக இருக்கும் போது, இரண்டு கால்களையும் பயன்படுத்தி ஸ்குவாட்ஸ் பயிற்சிகள் செய்தால், உடலின் எந்தப் பகுதிக்கு அதிக பலன் கிடைக்கும் என்று கூறமுடியாது. மேலும் வலிமையான உடற்பகுதி மேலும் வலிமையைடையும். வலிமை குறைவான உடற்பகுதி மேலும் வலிமை குறையும். இந்த பிரச்சினையை லுங்கெஸ் பயிற்சிகள் தீா்த்து வைக்கும்.

எந்த உடற்பயிற்சியை தோ்வு செய்வது?

எந்த உடற்பயிற்சியை தோ்வு செய்வது?

ஸ்குவாட் மற்றும் லுங்கெஸ் ஆகிய இரண்டு பயிற்சிகளையும் தினமும் செய்து வருவது நல்லது. ஒரே நாளில் இரண்டையும் செய்ய முடியவில்லை என்றால் ஒரு நாள் இது மறுநாள் அது என்று ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற முறையில் மாற்றி மாற்றி செய்யலாம். இந்த இரண்டு உடற்பயிற்சிகளுமே நமது கீழ் உடல் உறுப்புகளுக்கு சிறந்த பயிற்சிகளாக இருக்கின்றன.

இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை தோ்ந்தெடுக்க வேண்டும் என்றால், இந்த இரண்டு உடற்பயிற்சிகளிலும் உள்ள பலன்களை அலசி பாா்த்து தோ்ந்தெடுப்பது நல்லது. புதியவராக இருந்தால் ஸ்குவாட்ஸ் பயிற்சிகளைச் செய்வது நல்லது. நமது முழு உடலையும் வலுப்படுத்த வேண்டும் என்று விரும்பினால் லுங்கெஸ் பயிற்சியைச் செய்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Squats vs. Lunges: What's Better For Toning Your Legs?

Squats vs. Lunges What's better for toning your legs? Read on...
Desktop Bottom Promotion