For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடற்பயிற்சி செய்யாமலே இந்த குளிர்காலத்தில் உங்க உடல் எடையை குறைக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?

நீங்கள் உடற்பயிற்சிக்காக ஜிம்முக்கோ அல்லது வெளியிலோ செல்ல விரும்பவில்லை என்றால், வீட்டிற்குள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். சுத்தம் செய்தல், துவைத்தல், துடைத்தல், தோட்டம் போன்ற வீட்டு வேலைகளை செய்வது கூட கணிசமான அளவு

|

உடல் எடையை குறைப்பது என்பது நம் அனைவருக்கும் மிகவும் கடினமான விஷயம். அவ்வளவு எளிதில் உடல் எடையை குறைக்க முடியாது. ஆனாலும், சிலர் முயற்சி செய்து தங்கள் உடல் எடையை குறைக்கின்றனர். உடல் எடை அதிகரிக்க பருகாலமும் ஒரு காரணமாக இருக்கும். பொதுவாக குளிர்காலத்தில் நம் உடல் எடை அதிகரிக்கும். கோடை காலத்தில் இருக்கும் சுறுசுறுப்பு குளிர்க்காலத்தின் குளுமையால் இல்லாமல் சோம்பேறியாக்கி விடுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு விஷயம் இது.

lazy tricks to lose weight this winter in tamil

குளிர்காலம் நமது உடல் செயல்பாடுகளின் அளவைக் குறைக்கிறது. மேலும் அடிக்கடி பசியைத் தூண்டி அதிகம் சாப்பிட வைக்கிறது. இந்த காலம் நாம் ஆரோக்கியமாக இருக்கவும் அல்லது உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் பெறும் சவாலாக இருக்கும். இந்த சூழ்நிலை உங்களுக்கு சரியாக பொருந்தினால், உங்களுக்காக ஒரு சிறிய உதவிக்குறிப்பு எங்களிடம் உள்ளது. இந்த குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க உதவும் உதவிக்குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்படி குறைக்கலாம்?

எப்படி குறைக்கலாம்?

குளிர்காலத்தில் கொஞ்சம் சோம்பேறியாக இருந்தாலும் உடல் எடையை குறைக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். குளிர்காலம் உங்கள் முயற்சிகள் எதுவுமின்றி உடலில் அதிசயங்களைச் செய்யும். அதை உங்களுக்குச் சாதகமாக எப்படி வளைப்பது என்று உங்களுக்குத் தெரிந்தால் மட்டுமே,உடல் எடையை குறைக்க முடியும்.

குளிர் நடுக்கம்

குளிர் நடுக்கம்

குளிர்காலத்தில் குளிரால் நடுக்கம் ஏற்படுவது பொதுவானது. இந்த காலகட்டத்தில் நாம் அதிகாலையில் மொத்தமான ஆடைகள் அல்லது கம்பளி ஆடை அணியாமல் நடைப்பயணத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், குளிரைத் தாங்கக்கூடிய, ​​மதியம் அல்லது சூரியன் இருக்கும் நேரத்தில், வெளியே செல்லுங்கள். ஆய்வுகளின்படி, 10 முதல் 15 நிமிடங்களுக்கு நடுங்குவது கூட ஒரு மணி நேர மிதமான உடற்பயிற்சியின் அளவு கலோரிகளை எரிக்கிறது. இது மட்டுமின்றி உங்கள் தசைகளை சுருக்கவும் செய்கிறது.

ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்

ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்

குளிர்காலம் நம்மை அதிகமாக சாப்பிட வைக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. குளிர்ந்த வெப்பநிலை உடலை வெப்பமாக வைத்திருக்க தினசரி கலோரி தேவைகளை அதிகரிக்கிறது. உடல் எடை அதிகரிப்பதை குறைப்பதற்கான தந்திரம் சரியான நேரத்தில் சாப்பிடுவது, ஆரோக்கியமான மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது. நார்ச்சத்து உங்கள் வயிற்றை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கும். ஆரோக்கியமற்ற உணவு சாப்பிடுவதை தடுக்கிறது. ஒரு வேளை சாப்பிடும் போது குறைந்த அளவிலேயே சாப்பிடுவீர்கள்.

வெதுவெதுப்பான நீரைத் தவிர்க்கவும்

வெதுவெதுப்பான நீரைத் தவிர்க்கவும்

பெரும்பாலான மக்கள் குளிர் காலத்தில் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் உங்கள் எடையை பராமரிக்க விரும்பினால், குளிர்ந்த நீரைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. உடலின் மைய வெப்பநிலையை விட குளிர்ச்சியான திரவத்தை உட்கொள்வதால், உடல் வெப்பமடைவதற்கு கடினமாக உழைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த செயல்முறை உடல் எடையை குறைக்கத் தேவையான நிறைய கலோரிகளை எரிக்க உதவுகிறது. உங்களால் குளிர்ந்த நீரைக் குடிக்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் சாதாரண தண்ணீரையாவது குடிக்க முயற்சி செய்யுங்கள்.

மூலிகை தேநீர் மற்றும் பிளாக் காபி

மூலிகை தேநீர் மற்றும் பிளாக் காபி

உங்கள் வழக்கமான காபி தூள், சர்க்கரை மற்றும் பால் சேர்க்கப்பட்ட தேநீருக்கு பதிலாக மூலிகை தேநீர் மற்றும் பிளாக் காபி சாப்பிடுங்கள். ஊலாங் டீ, செம்பருத்தி தேநீர், பிளாக் டீ அல்லது பிளாக் காபி ஆகியவை ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன. அவற்றை தொடர்ந்து குடிப்பதன் மூலம், உங்கள் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தலாம் மற்றும் கொழுப்பை வேகமாக எரிக்கலாம்.

அதிக வீட்டு வேலைகளில் ஈடுபடுங்கள்

அதிக வீட்டு வேலைகளில் ஈடுபடுங்கள்

நீங்கள் உடற்பயிற்சிக்காக ஜிம்முக்கோ அல்லது வெளியிலோ செல்ல விரும்பவில்லை என்றால், வீட்டிற்குள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். சுத்தம் செய்தல், துவைத்தல், துடைத்தல், தோட்டம் போன்ற வீட்டு வேலைகளை செய்வது கூட கணிசமான அளவு கலோரிகளை எரிக்க உதவும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். வீட்டில் இருந்து வேலை செய்யும் போது கூட, ஒவ்வொரு 30 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் இருக்கையிலிருந்து எழுந்து உங்கள் வீட்டைச் சுற்றி சிறிது நடக்கவும். செல்போன் பேசும்போது கூட அமர்ந்துகொண்டு பேசாமல் நடந்து கொண்டு பேசுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

lazy tricks to lose weight this winter in tamil

Here we are talking about the lazy tricks to lose weight this winter in tamil.
Story first published: Friday, November 26, 2021, 16:30 [IST]
Desktop Bottom Promotion