For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடையை மிகவேகமாக குறைக்க இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்க போதும்...!

ஒரு நபரின் வளர்சிதை மாற்றம் என்பது அவரது உடல் ஆற்றலுக்காக கலோரிகளை எரிக்கும் விகிதமாகும். இது உங்கள் வயது, பாலினம், மரபியல், உடல் கொழுப்பு, தசை நிறை மற்றும் செயல்பாட்டு நிலை போன்ற பல காரணிகளைப் பொறுத்தது.

|

ஒரு நபரின் வளர்சிதை மாற்றம் என்பது அவரது உடல் ஆற்றலுக்காக கலோரிகளை எரிக்கும் விகிதமாகும். இது உங்கள் வயது, பாலினம், மரபியல், உடல் கொழுப்பு, தசை நிறை மற்றும் செயல்பாட்டு நிலை போன்ற பல காரணிகளைப் பொறுத்தது.

How to Boost Your Metabolism to Speed Up Weight Loss in Tamil

உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகமாக இருந்தால், ஓய்வு மற்றும் செயல்பாட்டின் போது அதிக கலோரிகளை எரிப்பீர்கள். உங்கள் எடை இழப்பு இலக்குகளை விரைவாக அடைய, உங்கள் கொழுப்பை எரிக்கும் அமைப்பை புதுப்பிக்கும் சில வாழ்க்கை முறை மாற்றங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி

அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி

அதிதீவிர உடற்பயிற்சி உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் கொழுப்பை எரிப்பதையும் பல மணிநேரங்களுக்கு உயர்த்தும், நீங்கள் வழக்கமாக உடற்பயிற்சி செய்யும் நேரத்தை விட நீண்ட நேரம் இருக்கும். அதிக நன்மைகளைப் பெற, ஜிம்மில் மிகவும் தீவிரமான உடற்பயிற்சியை முயற்சிக்கவும் அல்லது உங்கள் வழக்கமான நடைப்பயணத்தின் போது குறுகிய ஜாகிங்கைச் சேர்க்கவும். HIIT, ஓட்டம், நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை நீங்கள் முயற்சி செய்யக்கூடிய வேறு சில உடற்பயிற்சிகளாகும். அதிக தீவிரம் மற்றும் குறைந்த தீவிரம் கொண்ட உடற்பயிற்சியின் மாற்று காலங்களை உள்ளடக்கிய ஒரு வழக்கமான உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.

நீரேற்றம்

நீரேற்றம்

சரியான வளர்சிதை மாற்றத்திற்கு நீர் அவசியம். வழக்கமான தினசரி நுகர்வுக்கு 1.5 லிட்டர் தண்ணீரைச் சேர்ப்பது 18-23 வயதுடைய அதிக எடை கொண்ட பெண்களின் சராசரி எடை மற்றும் உடல் நிறை குறியீட்டைக் குறைப்பதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. நீங்கள் சிறிது நீரிழப்புடன் இருந்தால், உங்கள் வளர்சிதை மாற்றம் குறையலாம். ஒரு நாளைக்கு எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிளாஸ் தண்ணீர் குடித்த பெரியவர்கள் நான்கு டம்ளர் நீர் குடிப்பவர்களை விட அதிக கலோரிகளை எரிக்கிறார்கள் என்று மற்றொரு ஆய்வு கண்டறிந்துள்ளது. நீரேற்றமாக இருக்க, ஒவ்வொரு உணவு மற்றும் சிற்றுண்டிக்கும் முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். மேலும், உங்கள் உணவில் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்கவும், ஏனெனில் அவை இயற்கையாகவே தண்ணீரைக் கொண்டிருக்கும்.

MOST READ: இந்த 5 ராசி ஆண்கள் ரொம்ப கஞ்சத்தனமான கணவர்களாக இருப்பார்களாம்... இவங்க மனைவிகள் ரொம்ப பாவம்...!

ஸ்மார்ட் சிற்றுண்டி

ஸ்மார்ட் சிற்றுண்டி

சீரான நேரத்தில் சாப்பிடுவது வளர்சிதை மாற்ற சமநிலையை பராமரிக்க உதவுகிறது. ஒவ்வொரு 3 முதல் 4 மணி நேரத்திற்கும் ஒரு சிறிய உணவு அல்லது சிற்றுண்டியை உட்கொள்வது உங்கள் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்துகிறது, எனவே நீங்கள் ஒரு நாளில் அதிக கலோரிகளை எரிக்கிறீர்கள். தொடர்ந்து சிற்றுண்டி உண்பவர்கள் உணவு நேரத்தில் குறைவாகவே சாப்பிடுகிறார்கள் என்றும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இல்லையெனில், ஒரு நபர் ஒரே நேரத்தில் நிறைய சாப்பிட்டு, நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், அவரது உடல் கலோரிகளை மெதுவாக எரித்து, அதிக கொழுப்பு செல்களை சேமிக்கும்.

க்ரீன் டீ குடிக்கவும்

க்ரீன் டீ குடிக்கவும்

ஆய்வுகள் இதனை உறுதியாக நிரூபிக்கவில்லை என்றாலும், வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதிலும் கொழுப்பைக் கரைப்பதிலும் க்ரீன் டீ பங்கு வகிக்கிறது என்று சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. மிதமான தீவிர உடற்பயிற்சியின் போது 2 முதல் 4 கப் க்ரீன் டீ குடிப்பதால் 17% அதிக கலோரிகளை எரிக்க உடல் தள்ளும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. சர்க்கரைச் சாறுகளைத் தேர்ந்தெடுப்பதை விட இது நிச்சயமாக ஒரு சிறந்த மாற்றாகும் மற்றும் உங்கள் தினசரி நீர் நுகர்வுக்கும் சேர்க்கிறது.

MOST READ: ஆண்களிடம் இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் அவங்க புற்றுநோய் ஆபத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்... உஷார்

நன்கு ஓய்வெடுத்த உடல்

நன்கு ஓய்வெடுத்த உடல்

தூக்கமின்மை உடல் பருமன் அபாயத்தில் ஒரு பெரிய அதிகரிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. வளர்சிதை மாற்றத்தில் தூக்கமின்மையின் எதிர்மறையான விளைவுகளால் இது ஓரளவு ஏற்படலாம். தூக்கமின்மை அதிகரித்த இரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் எதிர்ப்பு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அதிக ஆபத்துக்கு வழிவகுக்கிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் பலர் பசி மற்றும் உடல் எடையை குறைக்க போராடுகிறார்கள். ஏனென்றால், தூக்கமின்மை பசி ஹார்மோன் கிரெலின் அதிகரிக்கிறது மற்றும் லெப்டின் என்ற ஹார்மோனைக் குறைக்கிறது. சரியான அளவு தூக்கம் தனிநபர்களிடையே மாறுபடும் போது, பெரியவர்களுக்கு ஒரு இரவுக்கு குறைந்தது 7-8 மணிநேரம் தேவை என்று ஆராய்ச்சி கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Boost Your Metabolism to Speed Up Weight Loss in Tamil

Read to know how to boost your metabolism to speed up weight loss.
Story first published: Tuesday, May 10, 2022, 11:27 [IST]
Desktop Bottom Promotion