Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
இந்த சத்து நிறைந்த உணவுகள அதிகமா சாப்பிடுறீங்களா? அப்ப உங்க வெயிட் அதிகமாகிட்டே போகுமாம்...!
நீங்கள் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டிருப்பதால், உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்ற எந்த அர்த்தமும் இல்லை. உங்கள் எடை இழப்பு இலக்குகள் உங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சி முறை இரண்டையும் சார்ந்துள்ளது.
நமது உடலின் திசுக்களை சரிசெய்வதில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டை எளிதாக்குகிறது. இது எலும்புகள், தசைகள், குருத்தெலும்புகள், தோல் மற்றும் இரத்தத்தின் இன்றியமையாத கட்டுமானத் தொகுதியாகும். மேலும் நமது ஆற்றல் மட்டங்களை அதிகமாக வைத்திருக்க புரதம் உதவுகிறது. இருப்பினும், எதையும் அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது, அவை நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதிக புரோட்டீன் உணவு பல நன்மைகளைக் கொண்டிருக்கலாம். இருப்பினும், நீங்கள் எடை குறைக்க விரும்பினால், அதிகப்படியான புரதம் உங்கள் எடை இழப்பு செயல்முறையை பாதிக்கலாம்.

எடையை குறைக்க முயற்சிக்கும்போது, உங்கள் உணவில் மிகுந்த அக்கறையாக இருக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் உட்க்கொள்ளும் உணவுகள் உங்கள் எடையை அதிகரிக்க செய்யும். இக்கட்டுரையில், அதிக புரத உணவு உட்க்கொள்வது உங்கள் எடையை எவ்வாறு பாதிக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி காணலாம்.

உயர் புரத உணவு அதிக கலோரிகளுடன் இணைக்கப்படலாம்
எடை இழப்பு பயணத்தில் இருக்கும்போது, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் அல்லது குடிக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், கலோரி அளவு மிகவும் முக்கியம். அதனால்தான் நீங்கள் கிலோவைக் குறைக்க விரும்பினால், உணவு கட்டுப்பாட்டை பராமரிக்க வேண்டியது அவசியம். எல்லாவற்றையும் மிதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், உயர் புரத உணவு அந்த விதிக்கு எதிராக இருக்கலாம். குறிப்பாக நீங்கள் இறைச்சி அடிப்படையிலான புரதத்தை சாப்பிடுகிறீர்கள் என்றால். ஒரு நாளில் நீங்கள் உண்மையில் எரிப்பதை விட அதிக கலோரிகளை உட்கொள்வீர்கள். இவை சந்தேகத்திற்கு இடமின்றி உங்கள் எடையை அதிகரிக்கும்.

நீங்கள் நிறைய இறைச்சி சாப்பிடுகிறீர்களா?
மாமிசம் அடிப்படையிலான புரதம் முதன்மையாக இறைச்சி, மீன் மற்றும் கோழி ஆகியவற்றைக் குறிக்கிறது. அவை அதிக கலோரிகளைக் கொண்டுள்ளன. உங்கள் இலக்கு முழுமையுடனும் திருப்தியுடனும் இருந்தால், நிச்சயமாக இந்த உயர் புரத உணவுகள் வேலையைச் செய்யும். ஆனால் நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், உங்கள் உணவுத் தேர்வுகள் அல்லது உங்கள் உணவுப் பழக்கத்தை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்.

தாவர அடிப்படையிலான உணவுகள்
பருப்பு, கொண்டைக்கடலை, குயினோவா, டோஃபு, எடமேம் மற்றும் நட்ஸ்கள் உள்ளிட்ட புரதச் சத்து நிறைந்த ஆரோக்கியமான தாவர அடிப்படையிலான மாற்று உணவுகள் பல உள்ளன. அவற்றில் சிறந்த விஷயம் என்னவென்றால், இவற்றில் கலோரி அளவுகள் குறைவாக இருப்பதால், உங்கள் எடையை குறைக்க உதவும்.

போதுமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளதா?
அதிக புரதச்சத்து கொண்ட உணவு திருப்திகரமாக இருந்தாலும், உங்கள் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு நுகர்வுகளை குறைக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு ஊட்டச்சத்துக்கும் ஒரு பங்கு உண்டு, ஒன்றைக் குறைத்து, மற்றொன்றை அதிகமாக வைத்திருப்பது உங்கள் உடலுக்கு எந்த பலனையும் தராது. உங்கள் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது உங்கள் மனநிலையை பெரிதும் பாதிக்கும் மற்றும் உங்கள் உணவு பசியை அதிகரிக்கலாம். இது ஆரோக்கியமற்ற அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கும். இது மக்கள் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஆரோக்கியமான சமச்சீர் உணவு என்பது உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

ஃபைபர் நிறைந்த உணவுகள்
நீங்கள் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்து, இறைச்சி சார்ந்த புரதத்தை அதிகமாகச் சேர்த்திருந்தால், உங்கள் தட்டில் அதிக நார்ச்சத்து உணவுகள் இல்லாமல் இருக்கலாம். இது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் எடையையும் பாதிக்கலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ஆரோக்கியமற்ற பிங்கிங்கைத் தடுக்க உதவுகிறது. இது எடை இழப்புக்கு உதவுகிறது. ஆதலால், புரதம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவை நீங்கள் எடுத்துக்கொள்வது முக்கியம்.

நீங்கள் குறைவாக உடற்பயிற்சி செய்கிறீர்கள்
நீங்கள் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டிருப்பதால், உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்ற எந்த அர்த்தமும் இல்லை. உங்கள் எடை இழப்பு இலக்குகள் உங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சி முறை இரண்டையும் சார்ந்துள்ளது. நீங்கள் எவ்வளவு கலோரிகளை உட்கொள்கிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதேபோல், நீங்கள் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், நீங்கள் விரும்பிய உடல் எடையை எளிதில் பெறலாம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் இருக்க வேண்டும்?
ஆய்வின் கூற்றுப்படி, உங்கள் கலோரிகளில் 10% முதல் 35% வரை புரதத்திலிருந்து வர வேண்டும். உங்கள் உடலுக்கு 2,000 கலோரிகள் தேவை என்றால், நீங்கள் புரதத்திலிருந்து 200-700 கலோரிகள் அல்லது 50-175 கிராம்களை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைப்பு விளக்குகிறது. ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி மூலம் உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.



Click it and Unblock the Notifications
