Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
உங்க உடல் எடையை சீக்கிரம் குறைக்க முட்டைகோஸை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
முட்டைக்கோஸ் உட்கொள்வது எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் கலோரிகள் மிகக் குறைவாக உள்ளது. அதனால், இது எடையைக் குறைக்க ஏற்றதாகக் கருதப்படுகிறது.
தற்போது உடல் பருமன் என்பது ஒரு மிக மோசமான பிரச்சனையாக மாறிவருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலான மக்கள் உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் பருமன் உங்கள் தோற்றத்தை பாதிப்பதோடு, உடல் ஆரோக்கியத்தை அதிகமாக கெடுக்கும். உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் தவறான உணவு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை. உடல் பருமன் கடுமையான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆம், அதிக எடை அதிகரிப்பால், நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், எடை அதிகரிப்பதைத் தடுக்க சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைச் செய்வது அவசியமாகிறது. பல காய்கறிகளை உட்கொள்வது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.

முட்டைகோஸ் அத்தகைய காய்கறிகளில் ஒன்றாகும். ஆம், முட்டைக்கோஸ் உங்கள் எடையைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். எடையைக் குறைப்பதோடு, முட்டைக்கோஸில் உள்ள சத்துக்களும் உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. எனவே எடை இழப்புக்கு முட்டைக்கோஸ் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

ஊட்டச்சத்து மதிப்பு
முட்டைக்கோஸ் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்பு, நார்ச்சத்து, துத்தநாகம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஃபோலேட், நியாசின் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் முட்டைக்கோஸில் காணப்படுகின்றன. முட்டைக்கோஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சேர்மங்கள் உள்ளன. இது புற்றுநோய் போன்ற பல கடுமையான உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்கிறது.

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்
முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது. முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆதலால் மறக்காமல் உங்கள் உணவில் முட்டைக்கோஸை அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள்.

எடை இழப்புக்கு எவ்வாறு உதவும்?
முட்டைக்கோஸ் உட்கொள்வது எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் கலோரிகள் மிகக் குறைவாக உள்ளது. அதனால், இது எடையைக் குறைக்க ஏற்றதாகக் கருதப்படுகிறது. ஆய்வின்படி, 100 கிராம் முட்டைக்கோஸில் சுமார் 25 கலோரிகள் உள்ளன. முட்டைக்கோஸில் நீர் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. முட்டைக்கோஸ் சாப்பிடுவதன் மூலம், வயிறு நீண்ட நேரம் நிறைந்ததாக உணர்கிறது. இது பசியைக் குறைக்கிறது, இதனால் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

விரைவாக எடையை குறைக்க உதவும்
முட்டைக்கோஸில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி, வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி, எடையை குறைக்க உதவுகிறது. முட்டைக்கோஸில் குளுட்டமைன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு முகவராகும். இது வீக்கத்தைத் தடுக்கிறது மற்றும் எடை இழப்பை துரிதப்படுத்துகிறது. முட்டைக்கோஸில் உள்ள கொழுப்பின் அளவும் மிகக் குறைவாக இருப்பதால், இது விரைவாக எடையை குறைக்க உதவுகிறது.

எடை இழப்புக்கு எப்படி பயன்படுத்துவது?
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் முட்டைக்கோஸை சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். முட்டைக்கோஸ் சாறு, சூப், வேகவைத்த காய்கறிகள் அல்லது சாலட்டை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் முட்டைக்கோஸை நன்கு கழுவிய பின்னரே உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில், இதில் பூச்சிகள் பெரும்பாலும் இருக்கும். சில சுகாதார பிரச்சனை உள்ளவர்களுக்கு முட்டைக்கோஸ் சாப்பிட பரிந்துரைக்கப்படவில்லை. ஆனால் எந்தவொரு நோய்க்கும் இதை உட்கொள்ளும் முன், உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.



Click it and Unblock the Notifications