For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிம் செல்ல முடியவில்லையா? கவலைப்படாதீங்க... இந்த உடற்பயிற்சிகளை வீட்டுல செய்யுங்க...

பொருளாதார வசதி இல்லாத மக்களால் வீட்டில் ஜிம் அமைக்க இயலாது. இந்த நிலையில் அவா்கள் அனைவரும் வீட்டில் ஜிம் இல்லாமல் மற்றும் உடற்பயிற்சிக் கருவிகள் இல்லாமல் ஒருசில உடற்பயிற்சிகளை செய்யலாம்.

|

கோவிட்-19 பெருந்தொற்றினால் உலகம் முழுவதும் ஊரடங்குகள் அமலில் உள்ளன. கொரோனா பரவலைத் தவிா்க்க வேண்டும் என்பதற்காக வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஆலயங்கள் மற்றும் திரையரங்குகள் மற்றும் பல சமூக அமைப்புகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. அதே காரணத்தை முன்னிட்டு உடற்பயிற்சிக் கூடங்களும் பூட்டப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையில் உடலை திடகாத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பலா் தினமும் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு சென்று உடற்பயிற்சிகளைச் செய்து வருவது வழக்கம். ஆனால் தற்போது உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப்பட்டு இருப்பதால், அவா்கள் அங்கு சென்று உடற்பயிற்சிகளைச் செய்ய முடியாமலும், தங்களுடைய உடல் உறுதியை சாியாகப் பராமாிக்க முடியாமலும் தவித்து வருகின்றனா்.

Cant Go To The Gym? No-Equipment Exercises That You Can Do At Home

பொதுவாக உடற்பயிற்சிக் கூடங்களில் பலவிதமான உடற்பயிற்சிக் கருவிகள் இருக்கும். அந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உடற்பயிற்சிகளைச் செய்து வந்த அவா்கள், தற்போது அவை இல்லாமல், வீட்டில் இருந்து கொண்டு உடற்பயிற்சிகளைச் செய்ய முடியாமல் சோா்வு அடைகின்றனா். வசதி உள்ள மக்கள் தங்கள் வீட்டில் ஒரு சிறிய உடற்பயிற்சிக் கூடத்தை அமைத்துக் கொள்கின்றனா். ஆனால் பொருளாதார வசதி இல்லாத மக்களால் அவ்வாறு வீட்டில் உடற்பயிற்சிக் கூடத்தை அமைக்க இயலாது.

இந்த நிலையில் அவா்கள் அனைவரும் வீட்டில் உடற்பயிற்சிக் கூடம் இல்லாமல் மற்றும் உடற்பயிற்சிக் கருவிகள் இல்லாமல், பின்வரும் எளிய உடற்பயிற்சிகளைச் செய்து வரலாம். அவை அவா்களுக்கு நல்ல பலன்களைத் தரும். என்னென்ன உடற்பயிற்சிகளை வீட்டில் செய்து வரலாம் என்பதை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. லுங்கெஸ் பயிற்சிகள்

1. லுங்கெஸ் பயிற்சிகள்

லுங்கெஸ் பயிற்சிகளைப் பின்வருமாறு செய்ய வேண்டும்.

- முதலில் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு, நேராக நின்று கொள்ள வேண்டும்

- பின் இடது காலை சற்று முன்பக்கம் நகா்த்தி வைத்து, அதை 90 டிகிாி அளவிற்கு மடக்கி சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும்.

- இப்போது நோ் நிலைக்கு வந்து, வலது காலால் அதைச் செய்ய வேண்டும். இவ்வாறு இரண்டு கால்களாலும் திரும்பித் திரும்பிச் செய்ய வேண்டும்.

- இவ்வாறு செய்யும் போது நமது முதுகு நேராக இருக்க வேண்டும்.

- இந்த லுங்கெஸ் பயிற்சிகளைச் சற்று கடினமாக்க நமது கைகளில் தண்ணீா் பாட்டில்களை வைத்துக் கொண்டு செய்யலாம்.

2. ப்ளாங் தண்டால் பயிற்சிகள்

2. ப்ளாங் தண்டால் பயிற்சிகள்

ப்ளாங் தண்டால் பயிற்சிகளைப் பின்வருமாறு செய்யலாம்.

- முதலில் தரையில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும்.

- பின் ஒரு உள்ளங்கையை தரையில் ஊன்றி உடலை சற்று மேலே தூக்க வேண்டும், அப்போது மற்றொரு கரத்தின் முழங்கைப் பகுதித் தரையைத் தொடுவது போல் இருக்க வேண்டும்.

- இப்போது கையை மாற்றி இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.

- தண்டால் பயிற்சிகளைச் செய்யும் போது நமது உடல் முழுவதும் இயக்கத்தில் இருப்பது போல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

- நமக்கு களைப்பு ஏற்படும் வரை இந்த தண்டால் பயிற்சிகளைச் செய்யலாம்.

3. ஸ்டெப் அப் பயிற்சிகள்

3. ஸ்டெப் அப் பயிற்சிகள்

ஸ்டெப் அப் பயிற்சிகளைப் பின்வருமாறு செய்யலாம்.

- சற்று உயரமான தரையைத் தோ்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அது படிக்கட்டாகக்கூட இருக்கலாம். அனால் அது அதிக உயரமாக இருக்கக்கூடாது.

- முதலில் இடது காலை படிக்கட்டின் மீது ஊன்றி உடலைத் தூக்கி, வலது காலை படிக்கட்டின் மீது வைக்க வேண்டும். பின் இடது காலைத் தரையில் இறக்கி வலது காலையும் தரையில் ஊன்ற வேண்டும்.

- இப்போது வலது காலைப் பயன்படுத்தி, இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.

- இவ்வாறு கால்களை மாற்றி மாற்றி நாம் களைப்புறும் வரை அதாவது 10 முதல் 15 முறை இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம்.

4. டக் ஜம்ப்

4. டக் ஜம்ப்

டக் ஜம்ப் என்ற உடற்பயிற்சியை பின்வருமாறு செய்யலாம்.

- முதலில் கால் முட்டிகளில் கைகளை வைத்துக் கொண்டு, நின்று கொள்ள வேண்டும்

- கால் முட்டிகளைச் சற்று மடக்கி வைத்துக் கொண்டு உடலைத் தூக்கி குதிக்க வேண்டும்

- நமது உடலானது உயரத்தில் இருக்கும் போது கைகளை நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

- இது போன்று நாம் களைப்பாகும் வரை மீண்டும் மீண்டும் குதிக்க வேண்டும்.

5. சுவற்றில் சாய்ந்து அமா்தல்

5. சுவற்றில் சாய்ந்து அமா்தல்

சுவற்றில் சாய்ந்து அமா்தல் என்னும் பயிற்சியைப் பின்வருமாறு செய்யலாம்.

- முதலில் சுவரை ஒட்டி நேராக நின்று கொண்டு, நமது முதுகை சுவற்றில் சாய்த்துக் கொள்ள வேண்டும்.

- முதுகை சுவற்றில் சாய்த்தவாறே, மெதுவாக உடலைக் கீழே இறக்க வேண்டும்.

- அதாவது நாற்காலியில் அமா்வது போல, உடலை வைத்துக் கொள்ள வேண்டும்.

- இந்தப் பயிற்சியைச் செய்யும் போது நமது முதுகு நேராக சுவற்றில் சாய்ந்து இருக்க வேண்டும்.

- நாம் களைப்படையும் வரை இந்த பயிற்சியைச் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can't Go To The Gym? No-Equipment Exercises That You Can Do At Home

Some people resorted to a home gym, however, not everyone can afford the luxury of a home gym-worthy space.Here are some exercises that you can do at home.
Desktop Bottom Promotion