For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு ஆணின் உடலில் பெண் செக்ஸ் ஹார்மோன் அதிகம் இருந்தால் என்ன ஆபத்துன்னு தெரியுமா?

ஆண்கள் தங்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவைக் குறைக்க மருத்துவரிடம் ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவதைத் தவிர, ஒருசில உணவுகளை உண்பதன் மூலமும் குறைக்கலாம்.

|

ஒரு ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஆண் செக்ஸ் ஹார்மோன் அதிகளவில் இருக்க வேண்டும். ஏனெனில் இது தான் ஒரு ஆண்பாலுக்குரிய சக்தியையும், அம்சங்களையும் பெற உதவுகிறது. எனவே இது ஒரு ஆணின் உடலில் போதுமான அளவில் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் இதன் அளவு குறைந்தால், அது அந்த ஆணின் ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் பாதிக்கும். அதோடு வயதான காலத்தில் டி-நிலைகளின் அளவு குறைவதற்கு மற்றொரு காரணி ஈஸ்ட்ரோஜென் அதிகரிப்பு ஆகும். ஈஸ்ட்ரோஜென் என்பது ஒரு பெண் செக்ஸ் ஹார்மோன் ஆகும்.

Anti-Estrogen Diet For Men To Cope With Hormonal Issues

ஒரு ஆணின் உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி அதிகரிக்கும் போது, டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் இடையூறு ஏற்பட்டு, ஆண்பாலின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. எனவே ஆண்கள் தங்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவைக் குறைக்க மருத்துவரிடம் ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவதைத் தவிர, ஒருசில உணவுகளை உண்பதன் மூலமும் குறைக்கலாம். இந்த கட்டுரையில் ஈஸ்ட்ரோஜென் அளவைக் குறைக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு ஆணின் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமானால் என்ன நடக்கும்?

ஒரு ஆணின் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமானால் என்ன நடக்கும்?

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒரு விஷயம் என்றால் அது இது தான். ஒரு ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அதிகமாகவும், ஈஸ்ட்ரோஜென் குறைவாகவும் இருக்க வேண்டும். ஆனால் ஈஸ்ட்ரோஜென் அதிகரிப்பால் டி-நிலைகளின் அளவு குறைந்தால், அந்த ஆணின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். சில சமயங்களில் இந்த நிலையால் இரத்த உறைதல், புற்றுநோய் மற்றும் இதய நோய்களின் அபாயம் கூட எழக்கூடும்.

காரணங்கள்

காரணங்கள்

ஒரு ஆணின் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரிக்க ஒரு சில காரணங்கள் உள்ளன. அவையாவன:

* மூளை அல்லது அட்ரீனல் பகுதியில் கட்டிகள்

* கல்லீரல் அழற்சி

* அதிகமாக மது குடிக்கும் பழக்கம்

* குறிப்பிட்ட ஆன்டி-பயாடிக், மன இறுக்க நிவாரண மருந்துகளை எடுப்பது

* உடல் பருமன் போன்றவற்றால் ஒரு ஆணின் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகமாக வாய்ப்புள்ளது.

ஆன்டி-ஈஸ்ட்ரோஜென் டயட்

ஆன்டி-ஈஸ்ட்ரோஜென் டயட்

சில ஆய்வுகளில் குறிப்பிட்ட உணவுகளை உண்பதன் மூலம் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும், எந்த ஒரு டயட்டை மேற்கொள்ளும் முன்பும், மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உடல் வாகு என்பதால் தான். இப்போது ஈஸ்ட்ரோஜென் அளவுக் குறைக்க உதவும் உணவுகள் எவையென்று காண்போம்.

சோயா பொருட்கள்

சோயா பொருட்கள்

சோயா பொருட்களில் தாவர வகை ஈஸ்ட்ரோஜெனான பைட்டோஈஸ்ட்ரோஜென் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென் அளவைக் குறைக்கும். பொதுவாக தாவர வகை ஈஸ்ட்ரோஜென்கள் புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் இதர ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்கும்.

ஆளி விதை

ஆளி விதை

ஆளி விதைகளில் பாலிஃபீனால்கள் உள்ளன. இவை ஈஸ்ட்ரோஜென் அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஆளி விதைகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்களைப் போன்ற லிக்னன்கள் ஏராளமான அளவில் நிரம்பியுள்ளன.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் மற்றும் ஐசோப்ளேவோன்கள் அதிகம் உள்ளன. இவை உடலில் டெஸ்டோஸ்டிரோன்கள் ஈஸ்ட்ரோஜென்களாக மாறுவதைத் தடுக்கும். ஆகவே பச்சை இலைக் காய்கறிகளான ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, கேல், முளைக்கட்டிய புரூஸல்ஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளவும்.

மாதுளை

மாதுளை

மாதுளையில் ஈஸ்ட்ரோஜென்களைத் தடுக்கும் பண்புகளான பைட்டோ கெமிக்கல்கள் நிரம்பியுள்ளன. ஆண்கள் மாதுளையை தினமும் உட்கொண்டு வந்தால், உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

சிவப்பு திராட்சை

சிவப்பு திராட்சை

சிவப்பு திராட்சையில் ஈஸ்ட்ரோஜென்களைக் குறைக்கும் பண்புகள் அதிகம் உள்ளது. அதிலும் இதன் விதைகளில் புரோஅந்தோசையனிடின்கள் உள்ளது மற்றும் தோலில் ரெஸ்வரேட்ரால் உள்ளது. இவை இரண்டுமே ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தடுத்து, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் அளவைக் குறைக்கும்.

காளான்கள்

காளான்கள்

ஆண்ட்ரோஜனை ஈஸ்ட்ரோஜனாக மாற்றும் உடலில் உள்ள அரோமடேஸ் நொதியின் உற்பத்தியைத் தடுப்பதன் மூலம், உடலில் ஈஸ்ட்ரோஜனைத் தடுக்க பல்வேறு வகையான காளான்கள் உதவுகின்றன. ஆண்கள் காளானை அடிக்கடி உண்பதன் மூலம் உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி தடுக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Anti-Estrogen Diet For Men To Cope With Hormonal Issues

Increase in estrogen levels may increase the risk of cancer and heart stroke in men. Follow the anti-estrogen diet to regulate hormones.
Desktop Bottom Promotion