For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா?

டயட் மேற்கொள்ளும் போது நாம் பின்பற்ற வேண்டிய முறைகளும் நாம் செய்யும் தவறுகளைப் பற்றியும் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.

|

எடை குறைப்பு முயற்சிக்காக பின்பற்றப்பட வேண்டிய வழிகள் இன்று பலவிதமாக உள்ளன. பலரும் பல வழிகளைப் பரிந்துரைக்கின்றனர். தேநீர் மட்டும் பருகும் டயட், உடல் சுத்திகரிப்பு பவுடர் உட்கொள்ளும் முறை என்று ஒவ்வொரு புது வழி ஒவ்வோரு நாளும் உருவாகிறது. இதன் காரணமாக நம்மில் பலரும் இவற்றுள் நமக்கு எளிதாகப் பின்பற்றக்க்கொடிய வழிகளை முயற்சித்து எடை குறைய ஆசைப்படுகிறோம்.

Common Dieting Tricks

ஆனால் இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான பாதிப்புகள் உள்ளன. இந்த பதிவில் இன்றைய நாட்களில் பொதுவாக பலராலும் பின்பற்றக்கூடிய சில டயட் வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கான பாதிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வித டயட் முறைகளைத் தவிர்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தெளிவற்ற புரத பவுடர்கள்

தெளிவற்ற புரத பவுடர்கள்

இத்தகைய புரத பவுடர்களில் உள்ள புரதம், இனிப்பு மற்றும் இதர தெளிவற்ற மூலப்பொருட்கள், வாயு, வயிறு உப்புசம் போன்றவற்றை உண்டாக்கி, கழிப்பறையிலேயே உங்கள் பாதி நேரம் முடங்கிவிடும். மேலும் உணவு கட்டுப்பாடு நிறுவனங்கள் இத்தகைய பொருட்களின் பாதுகாப்பு மற்றும் திறன் பற்றிய கணக்கீடுகளைத் தருவதில்லை. மேலும் இதில் மறைந்திருக்கும் உண்மை என்னவென்றால், இத்தகைய மந்திர பானங்களில், நீங்கள் பொதுவாக உட்கொள்ளும் கலோரிகளை விட அதிகம் கலோரிகள் உள்ளன.

தேநீர் டயட்

தேநீர் டயட்

பலவகையான எடை குறைப்பு அட்டவணையில் தேநீர் பரிந்துரைக்கப்படுகின்றன. குறிப்பாக மூலிகைத் தேநீர் பருகுவதால் எடை குறைப்பு சாத்தியம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இவை மூலிகைத் தேநீராக இருக்கும் பட்சத்தில் நன்மை விளைவிப்பதாக உள்ளது. எனவே, மூலிகை தேநீர் பருகும்முன், அதன் மூலப்பொருள் குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பருகுவது நல்லது.

உடலின் கழிவுகளை அகற்ற பின்பற்றப்படும் தேநீர் டயட்டில் குறிப்பிடும் தேநீர் வகைகளில் நிலவாகை இல்லை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இலை மலமிளக்கியாக செயல் புரிவதில் சிறப்பு பெற்ற ஒரு இலை ஆகும். எனவே அடிக்கடி மலம் கழிக்கும் நிலை உருவாகும். அதோடு மட்டுமில்லாமல், உடலின் நீர்ச்சத்து குறையும் போது, எலக்ட்ரோலைட்டுகளையும் சேர்த்து இழக்க நேரிடலாம். இதனால் தசை பிடிப்பு, மாரடைப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.

MOST READ:கட்டிப்பிடி வைத்தியத்தை வைத்தே கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் பெண்... எந்த ஊரும்மா நீ...

பிரபலங்கள் பின்பற்றும் நச்சு வெளியேற்ற வழிகள்

பிரபலங்கள் பின்பற்றும் நச்சு வெளியேற்ற வழிகள்

பல பிரபலங்கள் எடை குறைப்பு செய்வதற்காக சில குறிப்பிட்ட முறையை பின்பற்றியதாக நாம் கேள்விப்பட்டிருக்கலாம். தண்ணீர் மட்டும் பருகுவது, மேப்பிள் சாறு பருகுவது, சிவப்பு மிளகாய் துகள்கள் உட்கொள்வது, எலுமிச்சை சாறு மட்டும் பருகுவது என்று ஒரு அட்டவனையை அவர்கள் மேற்கொண்டிருக்கலாம். ஆனால் இதே முறையைப் பின்பற்றுவதால் நீங்களும் அந்த பிரபலம் போல் மாறி விட முடியாது.

இதனைப் பொதுவாக ஜீரோ கலோரி முறை டயட் என்றும் குறிப்பிடுவர். இதனால் உங்கள் உடல் எடை குறையலாம் ஆனால் உங்கள் உடலின் ஆற்றலும் குறைய நேரிடும். வாந்தி எடுப்பது என்ற ஒன்றைத் தவிர வேறு எதைச் செய்யவும் உங்கள் உடலால் முடியாது.

இடைவிட்ட விரதம்

இடைவிட்ட விரதம்

இந்த வகை இடைவிட்ட டயட் முறை பலவித ஆரோக்கிய நன்மைகள் கொண்டது என்று சில ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது நிச்சயம் நமக்கு பாதுகாப்பானது என்று கூற முடியாது. குறிப்பிட்ட இடைவெளியில் உணவு உட்கொள்ளாமல் இருப்பதால், குமட்டல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். தொடர்ச்சியாக இந்த டயட் முறையைப் பின்பற்றுவதால், எடை அதிகரிப்பு ஏற்படலாம். காலப்போக்கில் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தைக் குறைக்கலாம்.

MOST READ:உட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா? இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...

கேடோஜெனிக் டயட்

கேடோஜெனிக் டயட்

உலகளவில் மிகவும் பிரபலமாக அறியப்படும் ஒரு டயட், முறை கேடோஜெனிக் டயட் என்னும் கேட்டோ டயட் ஆகும். இந்த வகை டயட், அதிக கொழுப்பு, குறைந்த கார்போ சத்து என்ற குறிக்கோளைக் கொண்டது. உடல் தனக்கு தேவையான ஆற்றலை கார்போ ஹைட்ரேட்டில் இருந்து எடுக்காமல், கொழுப்பை எரித்து பெற்றுக் கொள்ளும் முறையாகும். இந்த் வகை டயட்டுகள் சில, உங்கள் உடலில் 10% கலோரிகளை மட்டுமே குறைக்க உதவுகின்றன. அதே நேரத்தில், மருந்துகளால் குணப்படுத்த முடியாத வலிப்பு போன்ற கோளாறுகளுக்கு கேட்டோ டயட் உதவுவதாகவும் அறியப்படுகிறது. ஒரு தீவிர உணவு, மூளை வேதியியலை பாதிக்கக்கூடும் என்றால், அது உங்களுக்கு மிகவும் தீவிரமாக இருக்கலாம்.

ஒரே உணவு டயட் திட்டம்

ஒரே உணவு டயட் திட்டம்

காளான் டயட், குக்கி டயட், பப்ளிமாஸ் டயட். என்று ஒரே உணவை மட்டும் உட்கொள்ளும் முறை தான் ஒரே உணவு டயட் முறையாகும். நிபுணர்கள் உங்கள் எடை குறைப்பிற்காக பரிந்துரைக்கும் அந்த ஒரே உணவு உங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருந்தாலும், இதில் ஆபத்து நிறைந்துள்ளது. பல்வேறு உணவு வகைகளை ஒரே நேரத்தில் உட்கொள்ளாமல் கைவிடுவதால், உடலில் ஊட்டச்சத்து குறைப்பது ஏற்படலாம் இதனால் குறைந்த கால அல்லது நீண்ட கால உடல்நல சிக்கல்கள் உண்டாக நேரலாம்.

MOST READ:வேர்வையில வழியா நச்சுக்கள் வெளியேறுதுனு நெனக்கறீங்களா? அப்போ என்ன வெளியேறுது?...

மிலிட்டரி டயட்

மிலிட்டரி டயட்

இந்த டயட் முறையில் ஒரு நாளில் 1000 கலோரிகள் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று அளவிடப்பட்டுள்ளது. உங்கள் உயரம் 4'8" ஆக இருந்து நீங்கள் 24/7 தூங்கிக் கொண்டே இருந்தால் மட்டுமே இந்த டயட் வேலை புரியும். உப்பு சேர்க்கப்பட்ட சிப்ஸ், டோஸ்ட், கேனில் அடைக்கபட்ட டூனா மீன் போன்றவற்றை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இவ்வளவு குறைவான உணவை சாப்பிடுவதால் கூட வேறு பாதிப்புகள் தோன்றலாம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, உடலின் வளர்சிதை மாற்றம் குறையத் தொடங்கும். இதனால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். இரத்தச் சர்க்கரைக் குறைவு, தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஆகியவை உடனடி ஆபத்துகளில் அடங்கும்.

மருத்துவர் கண்காணிக்கும்

மருத்துவர் கண்காணிக்கும் "தூய்மைப் படுத்தும் முறைகள்

"மருத்துவர்-உருவாக்கிய" தயாரிப்புகள் என அழைக்கப்படுபவை மற்ற மருந்துகளுடன் வினை புரிந்து வேறு பாதிப்புகளை உண்டாக்கலாம். அவற்றை ஆராய்ச்சி செய்ய அல்லது மதிப்பீடு செய்ய தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் இருக்கலாம். தன்னைத் தானே ஊட்டச்சத்து நிபுணர்கள் என்று சொல்லிக் கொண்டு வியாபார ரீதியாக மருத்துவ தொழிலை அணுகும் நபர்களை முற்றிலும் தவிர்க்கவும்.

கரி மற்றும் களிமண் டயட்

கரி மற்றும் களிமண் டயட்

உடலின் கழிவை அகற்ற களிமண் மற்றும் கரியைப் பயன்படுத்துவதாகக் கூறிக் கொண்டு சிலர் சமூக ஊடகங்களில் வலம் வருவர். உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் அதிக நச்சுப் பொருள்களை அகற்ற மருத்துவமனைகள் கரியைப் பயன்படுத்தும்போது, சராசரி ஆரோக்கியமான பெரியவர்களுக்கே குடலில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதால் இதில் கவனம் தேவை.

HCG டயட்

HCG டயட்

எச்.சி.ஜி என்பது கர்ப்ப காலத்தில் உற்பத்தி செய்யப்படும் "ஹ்யூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின்" என்ற ஹார்மோனைக் குறிக்கிறது. இந்த டயட் என்பது இந்த HCG ஊசியை உங்கள் உடலில் செலுத்தி, ஒரு நாளைக்கு 800 கலோரிகளை சாப்பிடுவது, ஒரு முறை உணவு உட்கொள்ளும்போது ஒரே ஒரு காய்கறியை மட்டும் சேர்த்துக் கொள்வது மற்றும் உடற்பயிற்சியைத் தவிர்ப்பது போன்ற அபத்தமான கட்டுப்பாடுகளைப் பின்பற்றும் ஒரு திட்டமாகும்.

MOST READ:சர்க்கரை நோய் இருக்கா? கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Common Dieting Tricks That Are Actually Dangerous

If weight loss were as easy as a bunch of teas, cleanses and powders, wouldn't we all be trying them by now?! No matter how strong your willpower is, sipping chalky shakes billed as "meals" is its own brand of cruel and unusual punishment. Here are some top diet "tricks" that you should probably avoid.
Story first published: Tuesday, July 16, 2019, 12:26 [IST]
Desktop Bottom Promotion