Latest Updates
-
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம்
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் பிறந்த ராசி அவர்களின் ஆளுமை மற்றும் குணாதிசயங்களை நிர்ணயிப்பதில் மிகவும் முக்கியப்பங்கு வகிக்கிறது. அனைத்து ராசிக்காரர்களும் தங்கள் குடும்பத்தினர் மீது அன்பு வைத்துள்ளவர்களாக இருப்பார்கள். இருப்பினும், சில ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தினர் மீது அளவிலா அன்பும், அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் தங்கள் குடும்பத்தை பாதுகாக்கவும், அவர்களின் நலனுக்காகவும் எதையும் செய்ய துணிவார்கள், எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்களுக்கு உலகில் அனைத்து விஷயத்தை விடவும் அவர்களின் குடும்பமே முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சக்திவாய்ந்த உள்ளுணர்வு மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தை மிகவும் பாதுகாக்கிறார்கள். அவர்கள் சுய பாதுகாப்பு மற்றும் சக்திவாய்ந்த உள்ளுணர்வுக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காகவும், உரிமைகளுக்காகவும் தீவிரமாகப் போராடுகிறார்கள். உங்கள் குடும்பத்தில் ஒரு மேஷ ராசிக்காரர் இருந்தால், நீங்கள் எந்த சவாலையும் அவர்களின் உதவியால் எளிதாக சமாளிக்க முடியும். யாராவது உங்களைத் தொந்தரவு செய்ய முயன்றாலோ அல்லது நீங்கள் தடைகளை எதிர்கொண்டாலோ அவர்கள் உங்களைப் பாதுகாக்க முன்னால் நிற்பார்கள். அவர்களின் உறுதியான, கடினமான மனநிலை உங்களைப் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் உணர வைக்கிறது.
கடகம்
கடக ராசிக்காரர்கள் ராசி சக்கரத்தின் 'அம்மா' என்று அழைக்கப்படுகிறார்கள். தீவிரமான வளர்ப்பு குணங்களும், அக்கறையான இயல்பும் கொண்ட அவர்கள் பொதுவாக உணர்திறன் மிக்கவர்கள். தங்கள் குடும்பத்தை மோதல்களில் இருந்தும், ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்ற கவசமாக நிற்பார்கள். பொதுவாக அவர்கள் அமைதியானவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்களின் அன்புக்குரியவர்கள் அச்சுறுத்தலில் இருக்கும் போது அவர்கள் வேறொருவராக காணப்படுவார்கள். அவர்கள் தங்கள் குடுமபத்தினருக்கு பாதுகாப்பான இடங்களை உருவாக்குவதன் மூலம் அவர்களின் விசுவாசத்தை நிரூபிக்கிறார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பிலேயே தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கும் திறனுக்காக நன்கு அறியப்பட்டவர்கள். அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க ஒருபோதும் பயப்பட மாட்டார்கள். யாராவது தங்கள் குடும்பத்தினருக்கு வேண்டுமென்றே தீங்கு செய்ய முயன்றால், விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்கள் குடும்பத்தினரை மட்டுமல்ல, அவர்களுக்கு பிடித்தவர்களை கூட ஆபத்தில் இருக்க அனுமதிக்க மாட்டார்கள். அவர்களின் சக்திவாய்ந்த உள்ளுணர்வு அவர்கள் விரும்பும் ஒருவரை காயப்படுத்தக்கூடிய சூழ்நிலைகளை முன்கூட்டியே கணிக்க வழிவகுக்கிறது. ஒரு இடம் அல்லது சூழல் தங்கள் அன்புக்குரியவருக்கு துன்பத்தை ஏற்படுத்தினால், அவர்கள் அதை முடிவுக்குக் கொண்டுவர தங்கள் சக்தியால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் பொதுவாக நேர்மறையான அணுகுமுறையை கடைபிடிபிக்கும் நிதானமான நபர்களாக அறியப்படுகிறார்கள். அதற்கு காரணம் ஒழுக்கம் மற்றும் கர்மாவின் அதிபதியான சனிபகவான் மகரத்தின் ஆளும் ராசியாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். தங்களின் குடும்பத்தினர் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது மகர ராசிக்காரர்கள் பொறுப்பேற்க பயப்படுவதில்லை. தங்கள் அன்புக்குரியவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படும்போது, அவர்கள் தங்களின் திறன், ஆற்றல் அனைத்தையும் அதற்காக பயன்படுத்துவார்கள். ஒரு மகர ராசிக்காரர் தங்கள் குடும்பத்தை எந்த விஷயமும் நீண்ட காலம் தொந்தரவு செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
