For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆபிஸ் போற அவசரத்தில் என்ன மாதிரியான ஆரோக்கிய உணவுகள் நீங்க சாப்பிடலாம்?

அலுவலகத்திற்கு செல்லும் முன் அவசர கதியில் எந்த மாதிரியான ஆரோக்கிய உணவுகளை சாப்பிடலாம் என இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By Suganthi Ramachandran
|

நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை கவனிப்பதே ஒரு கலை. நமக்கு தேவையான உணவுக் கலை நமக்கு சந்தோஷம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அள்ளிக் தருகின்றன.

காலமும் நேரமும் வேகமாக நகரும் இந்த மாடர்ன் வாழ்க்கையில் மனஅழுத்தமும் சுமைகளும் தான் மிஞ்சுகின்றன. இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சாப்பிடும் பழக்கத்தை பின் சீட்டில் வைத்துக் கொண்டு நாம் காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம். உங்களுக்கு தெரியுமா இதனால் தான் நமக்கு நிறைய உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகின்றனர்.

Smart & Easy Ways To Eat Healthy During Office Hours

தற்போதைய நிலையில் நீங்கள் ஆபிஸில் கண் அசைக்காமல் 8-10மணி நேரம் வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஆனால் இப்பொழுதுள்ள கணினி வேலைக்கு உடல் உழைப்பு தேவைப்படுவதில்லை என்பது இந்த உலகத்தில் எவரும் எதிர்பார்க்காத சிந்தனை தான்.

இதற்கு அதிகமான வருமானம் வந்து என்ன பயன் அதை சந்தோஷமாக அனுபவிப்பதற்கு ஆரோக்கியமான உங்கள் உடல் எங்கே? உங்களிடம் ஒண்ணுமே இல்லை. நீங்கள் ஆரோக்கியமான உடலை பெறுவது கனவானால் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் மற்றும் உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள் உங்கள் கனவுகள் ரெம்ப தூரம் இல்லை.

வாங்க வாசகர்களே ஆரோக்கியமான உணவுகளை கண்டுபிடித்து உங்கள் ஆபிஸ் நேரத்தில் சாப்பிட திட்டமிடலாம். இந்த ஆரோக்கியமான உணவுகளை கொண்டு உங்கள் எனர்ஜியை அதிகரிக்கலாம்.
அதே நேரத்தில் ஆரோக்கியமற்ற ஜங்க் புட் களை ஆபிஸ் நேரத்தில் சாப்பிடுவதை அறவே தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.வீட்டில் சமைத்த உணவுகள்

1.வீட்டில் சமைத்த உணவுகள்

வீட்டில் சமைத்த உணவுகள் தான் உங்கள் ஆபிஸ் நேரத்தை அழகாக்குகின்றனர். வெளியில் கடைகளில் வாங்கி சாப்பிடும் உணவுகள் உங்களுக்கு உடல் உபாதைகளை கொடுத்து ஆபிஸ் நேரத்தை வேதனைக்குள்ளாக்கி விடும்.

வீட்டு உணவுகள் சாப்பிடுவது வெறும் செலவு குறைக்க மட்டும் அல்ல நேரத்தையும் குறைத்து சுத்தமான சூழலில் சுத்தமான சமையல் பொருட்களை கொண்டு செய்யப்படுவதாகும். எனவே இவைகள் தான் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேலோங்க செய்யும்.

2. மேஜையில் வாட்டர் பாட்டில் வைத்திருங்கள்

2. மேஜையில் வாட்டர் பாட்டில் வைத்திருங்கள்

நீங்கள் அதிகமான வேலை செய்யும் போது உங்கள் உடலை போதுமான நீர் சத்துடன் வைத்துக் கொண்டாலே போதும் எல்லா உபாதைகளும் பறந்தே போய்விடும்.

நீர் சத்து பற்றாக்குறை உங்கள் உடலின் வலிமை மற்றும் ஸ்டேமினாவை குறைத்து விடும். இது தான் உங்கள் வேலையை திறம்பட செய்வதற்கு மிகவும் தேவை. மேலும் மலச்சிக்கல், சிறுநீரக உபாதைகள் மற்றும் தசைகள் பாதிப்பு போன்றவையும் அதிகமான நீர் பருகுவதால் வருவது தடுக்கப்படும்.

உங்கள் வாழ்க்கையில் அதிகமான நேரம் ஆபிஸில் செலவழிப்பதால் கைக்கு அடக்கமான வாட்டர் பாட்டிலை உங்கள் கையுடன் வைத்துக் கொள்வது நல்லது.

3. நட்ஸ் உங்கள் மேஜையில் இருக்கட்டும்

3. நட்ஸ் உங்கள் மேஜையில் இருக்கட்டும்

உங்கள் ஆபிஸ் நேரத்தில் சிறுக சிறுக கொரித்து திண்ண ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றால் அது நட்ஸ் மற்றும் வேக வைத்த முளைக்கட்டிய தானியங்கள் ஆகும். இது நீங்கள் ஆபிஸ் கேன்டினில் சாப்பிடும் பாக்கெட் சிப்ஸ்களை விட சிறந்தது. நோயற்ற வாழ்வு வாழ இந்த ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் தான் சிறந்தது. கண்டிப்பாக இந்த வகை ஸ்நாக்ஸ் உங்கள் பசிக்கும் விருந்தளிக்கும்.

4.பழங்கள் வைத்துக் கொள்ளுங்கள்

4.பழங்கள் வைத்துக் கொள்ளுங்கள்

உங்கள் மனதிற்கு பிடித்த மாதிரி சாப்பிடுவதற்கு பழங்களை வைத்துக் கொள்ளுங்கள். இதில் அதிகமான நார்ச்சத்து மற்றும் விட்டமின்கள் உள்ள இயற்கை உணவுப் பொருளாகும்.

பழங்களை வீட்டிலிருந்தே வாங்கி எடுத்துச் செல்வது கூட புத்திசாலித்தனமான செயல். பழங்களுடன் ஒரு கப் பால் சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு விட்டமின்கள் மற்றும் தாதுக்களை கொடுக்கின்றன.

5.உடனடி ஓட்ஸ் உணவுகள்

5.உடனடி ஓட்ஸ் உணவுகள்

உங்களுக்கு ஆபிஸில் அதிகப்படியான வேலைப் பளு இருந்தால் ஓட்ஸ் உணவுப் பொருட்கள் சிறந்தது. இதை குறைந்த நேரத்தில் எளிதாக சமைக்கலாம் மேலும் அதிகமான ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன.

இதில் சாதாரண, பழங்களுடன் மற்றும் நட்ஸ் வகைகளுடன் கூடிய ஃப்ளேவர்ஸ் கிடைக்கின்றன. இந்த உணவு உங்கள் எடையை குறைப்பதற்கு மட்டும் அல்ல இரத்த கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது.

6.ஜங்க் புட் தவிர்த்தல்

6.ஜங்க் புட் தவிர்த்தல்

ஜங்க் புட் சாப்பிடுவதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து கொள்ளுங்கள். இதையும் மீறி சாப்பிட்டால் நீங்கள் கீழ்வரும் பிரச்சினைகளை சந்திப்பதற்கு நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உடல் எடை, இதய நோய்கள், பல் பிரச்சினை, மன அழுத்தம், நாம் வாழும் இந்த வாழ்க்கை கடவுள் கொடுத்த பரிசாகும். உடல் வலுவுற்றால் உள்ளமும் வலுவுறும் என்பதே உண்மை.

எனவே நீங்கள் இந்த ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு மாறவில்லை என்றால் ஆரோக்கியமற்றவர்களாக மாறிவிடுவீர்கள். இந்த டிப்ஸ்களை மனதில் கொண்டு சந்தோஷமாக ஆபிஸில் சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Smart & Easy Ways To Eat Healthy During Office Hours

Smart & Easy Ways To Eat Healthy During Office Hours
Desktop Bottom Promotion