கொழுப்பில்லாத உணவை மட்டும் தேடித்தேடி சாப்பிடுபவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்குதான்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய நாளில் அனைவருக்கும் ஃபிட்டான உடல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது, உடல் ஆரோக்கியத்திற்காக நிறையவே மெனக்கெடுகிறார்கள். கொழுப்பு சேர்வதாலேயே உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.

Side effects of fat free diet

இன்றைக்கு வாடிக்கையாளர்களின் திறனறிந்து கொழுப்பு நீக்கப்பட்ட உணவு, கொழுப்பு இல்லாத உணவுகள், கொழுப்பில்லாத டயட் என்று விதவிதமாக சந்தையில் விற்க ஆரம்பித்து விட்டார்கள். கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள் கூட இப்போது கொழுப்பு இல்லாத பால் பொருட்கள் என்று கிடைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொழுப்பினை தவிர்த்து :

கொழுப்பினை தவிர்த்து :

உண்மையிலேயே இப்படி கொழுப்பினை தடாலடியாக குறைப்பது உங்கள் உடலை எப்படி பாதிக்கிறது என்று தெரியுமா? எனர்ஜியின் முதல் இருப்பிடமாக இருப்பது கொழுப்பு தான் . உடல் ஆரோக்கியமாக செயல்பட கொழுப்பு அவசியமாகும். அதோடு பிற உணவுகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களை உறியவும் அதனை உடல் முழுவதும் உள்ள பிற பாகங்களுக்கு பகிர்ந்தளிக்கவும் கொழுப்பு தேவையாகிறது. சரிவிகித அளவில் கொழுப்பு எடுத்துக் கொள்வதால் உங்களின் உடல் எடை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

கொழுப்பு இல்லாத உணவையே தொடர்ந்து எடுத்து வந்தால் என்னென்ன உடல் உபாதைகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மூளை :

மூளை :

மூளை துரிதமாக செயல்பட கொழுப்பு மிகவும் அவசியமாகிறது. மூளைக்கு ஃபேட்டி ஆசிட் தேவை. இதனைக் கொண்டே மூளையில் இருக்கும் நியூரான்கள் மற்றும் நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் சரியாக வேலை செய்திடும்.

சரியான அளவில் கொலஸ்ட்ரால் கிடைப்பது மிகவும் அவசியமாகும். இது கூடினாலோ அல்லது குறைந்தாலோ மூளையின் செயல்பாடுகளில்,சிந்தித்து முடிவெடுக்கும் விஷயங்களில் தடுமாற்றம் நிகழலாம்.

இதயம் :

இதயம் :

கொழுப்பு என்றாலே நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது என்றும் மாரடைப்புக்கு முக்கிய காரணமும் அதிகப்படியான கொழுப்பு என்றே சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல , சர்க்கரை,கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் அதிகமாக உடலில் தேங்கியிருப்பதாலும்.

குறிப்பிட்ட சில ப்ரோட்டீன்கள் அளவுக்கு மீறி எடுப்பதாலேயுமே இதயத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. சர்க்கரை அதிகமாக சேர்த்து உடல் உழைப்பு இல்லையென்றால் அதிகப்படியான எனர்ஜி கொழுப்பாக மாறிடுகிறது.

உடல் எடை :

உடல் எடை :

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கை வைக்கிற முதல் இடம் கொழுப்பு. கொழுப்பு இல்லாத உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் உடனடியாக உடல் எடை குறைந்திடும் என்ற கணக்கு அவர்களுக்கு.

இது உண்மை தான், குறிப்பிட்ட காலத்திற்கு அதாவது உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பு கரையும் வரைக்கும் கொழுப்பு சேர்க்காமல் இருக்கலாம். ஆனால் வாழ்நாள் முழுவதுமே கொழுப்பு இல்லாத உணவுகளைத் தான் நான் சாப்பிடுவேன் என்று இருந்தால் அது உடலுக்கு தீங்கையே ஏற்படுத்திடும்.

பால் பொருட்களில் எளிதில் கரையக்கூடிய கொழுப்பு வகைகளே இருக்கிறது. அதனை உட்கொண்டால் நீண்ட நேரத்திற்கு பசியுணர்வு வராது, அதனால் தேவையற்ற திண்பணடங்களை சாப்பிட வேண்டிய சூழல் உண்டாகாது.

சர்க்கரை :

சர்க்கரை :

குறைந்த அளவு கொழுப்பு உணவினை எடுத்துக் கொள்வதால் உடலில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் என்று நினைக்கிறோம். சந்தையில் கிடைக்கும் கொழுப்பு நீக்கப்பட்ட பொருட்களில் சுவையூட்டுவதற்காக அதிகளவு சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். அதோடு அதிகளவு கார்போஹைட்ரேட்டும் இருக்கும். ஏனென்றால் அப்போது தான் குளோக்கோஸ் சத்து நமக்கு கிடைத்திடும்.

இது அதிகளவு சேரும் பட்சத்தில் கணையத்தில் சென்று அழுத்தத்தை உண்டாக்கும் இதனால் இன்சுலின் சுரப்பு வேறுபடும்.

 ஹார்மோன் மாற்றங்கள் :

ஹார்மோன் மாற்றங்கள் :

உடல் உபாதைகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது ஹார்மோன் மாற்றங்கள் தான். ஹார்மோன் சுரப்பிகளுக்கு கொலஸ்ட்ரால் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. ஏற்கனவே பார்த்தபடி மூளை துரிதமாக செயல்படுதில் ஆரம்பித்து ஒவ்வொன்றிலும் கொழுப்பு சத்து தேவையாக இருக்கிறது. அவை அளவுக்கு மீறி செல்லும் போது தான் பிரச்சனை உண்டாகிறது.

மனச்சோர்வு :

மனச்சோர்வு :

ஆரோக்கியமான கொழுப்புச் சத்து நம்முடைய மூட்களை தீர்மானிக்கிறது, டிப்ரசன் உட்பட பல்வேறு மூளை தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நீங்கி நாம் உற்சாகமாக இருக்க கொழுப்புச் சத்து தேவை.

விட்டமின் :

விட்டமின் :

நம் உடலில் பல்வேறு உறுப்புகளுக்கு தேவையான விட்டமின்கள் உறிவதற்கு கொழுப்புச் சத்து அவசியமாகும். உடலில் தேவையான அளவு கொழுப்பு இல்லையென்றால் உணவுகள் மூலமாக பெறப்படும் விட்டமின் ஏ,டி,இ மற்றும் கே போன்றவை எந்த பயனும் இன்றி கரைந்திடும். இதனால் உடலில் விட்டமின் குறைபாடு ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Side effects of fat free diet

Side effects of fat free diet
Story first published: Wednesday, October 4, 2017, 15:34 [IST]