உடல் எடையை குறைக்க நட்ஸை எப்படி சாப்பிட வேண்டும் என தெரியுமா?

Written By: Lakshmi
Subscribe to Boldsky

நட்ஸ் அதிகப்படியான கொழுப்புச்சத்துக்களை கொண்டுள்ளது. அதே சமயம் இதில் அதிகப்படியான வைட்டமின்கள், கனிமங்கள், புரதம் மற்றும் நார்சத்துக்கள் ஆகியவை அடங்கியுள்ளன. இதனை நொறுக்கு தீனியாக சாப்பிடுவது ஆரோக்கியமானது என நினைப்போம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே சமயம் சரியான அளவில் கட்டுப்பாடுடன் சாப்பிடுவது அவசியம்.

உடல் எடையை குறைக்கும் சில நட்ஸ் பற்றி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதம்:

பாதம்:

பாதாமில் அதிகப்படியான நார்ச்சத்து, வைட்டமின் இ, மெக்னீசியம் மற்றும் கொழுப்பு சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குறைக்க வல்லது. நொறுக்கு தீனியாக எடுத்துக்கொள்ளும் போது உடல் எடையை குறைக்க சிறந்தது. இதில் முக்கியமானது என்னவென்றல் இதனை அளவுடன் எடுத்துக்கொள்ளும் போது இது உடல் எடையை குறைக்கும். ஒருவேளை அதிகப்படியாக எடுத்துக்கொண்டால் இது எதிர்மறையாக உடல் எடையை அதிகரிக்கச்செய்யும். 6-7 பாதம்கள் ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்வது சிறந்தது என அறிவுறுத்தப்படுகிறது.

வால்நட்:

வால்நட்:

வால்நட் அதிகப்படியான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை உள்ளடக்கியுள்ளது. இது கொழுப்பின் அளவை குறைக்க உதவியாக உள்ளது. மேலும் இது உங்கள் முகத்தை பளபளக்கச் செய்ய உதவியாக உள்ளது.

முந்திரி:

முந்திரி:

முந்திரி அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகளை கொண்டுள்ளது. அதே சமயம் வளர்ச்சிதை மாற்ற நோய் அறிகுறிகளை குறைக்க வல்லது. நிறைய முந்திரி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.

வேர்க்கடலை:

வேர்க்கடலை:

வேர்க்கடலையில், நார்ச்சத்து அடங்கியுள்ளது. ஆண்டி- ஆக்ஸிடண்ட், கொழுப்பு, உணவு புரதம் ஆகியவை அதிக அளவில் அடங்கியுள்ளது. இதில் உள்ள மோனோ மற்றும் பாலி நிறைவுறா கொழுப்பு ஆகிய இரண்டும் இதயம் சார்ந்த பிரச்சனைகளை குறைக்கிறது. அதிகப்படியான வேர்கடலையை சாப்பிட்டால், நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை, உடல் எடை அதிகரிப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதே சமயம் உப்பு போட்ட வேர்கடலை உண்ணும் போது முழுமையான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. மேலும் கலோரி அளவு அதிகரிக்கிறது.

உலர்ந்த திராட்சைகள்:

உலர்ந்த திராட்சைகள்:

உலர்ந்த திராட்சைகளை அதிக அளவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது. ஆனால் இதில் அதிகளவில் சக்கரை இருப்பதால், இதனை அளவுக்கு மீறி உண்ணும் போது உடல் எடை அதிகரிக்கலாம் மற்றும் இரத்தத்தில் குளோக்கோஸின் அளவை சக்கரை நோயாளிகளுக்கும் அதிகரிக்க செய்கிறது. பெரும்பாலும் இது சக்கரைக்கு பதிலாக இனிப்பான உணவுகளில் சேர்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, திராட்சை கீர், பழக்கூழ், சேமியா, ஷேக்குகள் போன்றவற்றில் சக்கரைக்கு பதிலாக சேர்க்கப்படுகிறது.

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

முதலில் இவைகலை சாப்பிடும் அளவில் கவனம் தேவை.

ஒரே வழியில் சாப்பிட வேண்டாம்.

சக்கரை / சுவையூட்டிகள் / உப்பு சேர்ந்த நட்ஸ்கள் அதிகப்படியான கலோரிகளை கொண்டிருக்கும் எனவே இது உடல் எடை அதிகரிப்பு மற்றும் வேறு சில பிரச்சனைகளை உருவாக்கும். சிறிதளவு நட்ஸை ஒட்ஸ் கஞ்சி, தயிர் அல்லது சூப் உடன் சேர்த்து உண்ணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to reduce weight using nuts

How to reduce weight using nuts