உடல் எடையை குறைக்க வந்தாச்சு ஒயிட் டீ!! அதனை எப்படி தயாரிப்பது?

Posted By:
Subscribe to Boldsky

பல வகையான டீக்களை குடித்திருப்போம். வொயிட் டீ கேள்விப்பட்டிருக்கிறீர்களா?எந்த வகையில் பதப்படுத்தப்படாத டீ இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் டீயைத் தான் நாம் வொயிட் டீ என்கிறோம்.

All about White tea and its proven benefits

இந்த டீயை தயாரிக்க குருத்து இலைகளை தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். இதனுடைய சுவையே தனியாக தெரியும். ப்ளாக் டீ,க்ரீன் டீயை தொடர்ந்து தற்போது களமிறக்கப்பட்டிருக்கும் வொயிட் டீ குறித்து முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வொயிட் டீ தயாரிக்கும் முறை :

வொயிட் டீ தயாரிக்கும் முறை :

மற்ற டீக்களை தயாரிப்பது போன்றே இது எளிதானது. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுடவைக்க வேண்டும், பின்னர் அதில் டீ இலைகளை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அவ்வளவு தான் வொயிட் டீ தயார் வேண்டுமானால் அதில் தேன் கலந்து கொள்ளலாம்.

சிலர் தண்ணீரை கொதிக்க வைத்து அது ஆறிய பிறகு அதில் டீ இலைகளை போடுவார்கள் இது சிறந்த பலனை கொடுக்காது. டீ இலைகள் அதிக நேரம் இருந்தால் அதன் சாறு தண்ணீரில் இறங்கிடும் அப்போது தான் அதன் பலன் உங்களுக்கு கிடைக்கும்.

காஃபைன் :

காஃபைன் :

ஒரு கப் வொயிட் டீயில் 28 கிராம் காஃபைன் தான் இருக்கிறது.மற்ற பானங்களை ஒப்பிடுகையில் இதன் காஃபைன் அளவு மிகவும் குறைவானது.ஒரு கப் காபியில் 95 கிராம் காஃபைன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது நம் எனர்ஜியை அதிகப்படுத்தும் அதே நேரத்தில் தொடர்ந்து குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டாது.

நியூட்ரிஷியன் :

நியூட்ரிஷியன் :

வொயிட் டீயில் ஏராளமான நியூட்ரிஷியன்கள் நிறைந்திருக்கிறது. டானின்ஸ்,ஃப்ளூராய்ட்,ஃப்ளேவனாய்ட்,கேட்சின்ஸ்,பாலிபினாய்ல் போன்றவையும் அடக்கம்.இதனை குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகள் ஏற்படும்.

ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் :

ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் :

இதில் இருக்கும் பாலிஃபினால் ஆண்ட்டி ஆக்ஸிடன்ட் ஏஜென்ட்டாக செயல்படும். அதோடு இந்த டீயில் இருக்கும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு உடலில் உள்ள டாக்ஸின்களை நீக்கிடும்.இதனால் உடலில் உள்ள செல்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.

சருமப் பாதுகாப்பு :

சருமப் பாதுகாப்பு :

ஆரோக்கியமான சருமத்தை பெற விரும்புபவர்கள் வொயிட் டீ குடிக்கலாம். இதில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் அவை நம் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கச் செய்திடும். அதே நேரத்தில் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களிலிருந்து நம் சருமத்தை பாதுகாத்திட முடியும்.

பற்கள் :

பற்கள் :

வொயிட் டீ குடிப்பது பல்லுக்கும் மிகவும் நல்லது. இதில் இருக்கும் சத்துக்கள் பற்களில் ஏற்படும் தொற்றை தவிர்க்கவும் அதே நேரத்தில் பற்களை தாக்கும் பாக்டீரியாக்களை அளிக்கவும் செய்திடும். இதில் இருக்கும் ப்ளூரைட் பற்சொத்தை ஏற்படாமல் தடுக்கும்.

புற்றுநோய் :

புற்றுநோய் :

க்ரீன் டீயினைப் போலவே வொயிட் டீயும் நுரையிரல் புற்றுநோய் வராமல் தடுத்திடும்.இதில் இருக்கும் கீமோ ப்ரிவன்ட்டிவ் ஏஜென்ட்டினால் புற்று நோய் வருவதற்கு முன்னரே அதனை வராமல் தடுக்க முடியும்.

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த டீ குடிப்பதால் அவர்கள் உடலின் சர்க்கரை அளவினை அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும். அதே நேரத்தில் அடிக்கடி தாகமெடுப்பது, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது போன்ற பிரச்சனை இருப்பவர்கள் வொயிட் டீ குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இதயம் :

இதயம் :

இதில் இருக்கும் ஃப்ளேவனாய்ட் இதயம் தொடர்பான பிரச்சனைகளை வராமல் தடுத்திடும். ப்ளேவனாய்ட் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் என்பதால் இதயத் துடிப்பும் சீராக இருக்கும்.

நோய் எதிர்ப்பு :

நோய் எதிர்ப்பு :

நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தான் நமக்கு நோய்த்தொற்று ஏற்ப்பட்டு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதில் ஏராளமான ஆன்ட்டி பாக்டீரியல் ப்ராப்பர்டீஸ் இருக்கிறது இதனால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வொயிட் டீ தொடர்ந்து குடித்து வர பாக்டீரியா தொற்றிலிருந்து நம்மை காத்திடும்.

எடையை குறைக்க :

எடையை குறைக்க :

உடலுழைப்பு இல்லாத வேலை, திட்டமிடாத உணவுகளால் தான் பெரும்பாலும் எடை அதிகரிக்கிறது.தீவிரமாக டயட் பின்பற்ற முடியவில்லை என்று நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த டீயை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

இது நம் உடலில் உள்ள அப்டிபோசைட்ஸ் எனப்படுகின்ற கொழுப்பு செல்களை அழிக்க உதவிடும். இந்த டீ குடிக்கிறோம் என்று அளவில்லாமல் உணவு எடுத்தால் அது ஆபத்தைத் தான் ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

All about White tea and its proven benefits

All about White tea and its proven benefits
Story first published: Wednesday, August 23, 2017, 10:30 [IST]
Subscribe Newsletter