உடலை சுத்தம் செய்ய உதவும் சக்தி வாய்ந்த உணவுப் பொருட்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

வார நாட்களில் வேலை வேலை என்று அலுவலகத்தை பற்றியே நினைத்து, உங்கள் உடலை மறந்திருப்பீர்கள். மேலும் அதிகப்படியான மன அழுத்தத்தினால், அதனை குறைப்பதற்கு கண்களில் படும் வாய்க்கு சுவையாக இருக்கும். கண்ட உணவுகளையெல்லாம் வயிறு நிறைய சாப்பிட்டிருப்பீர்கள். இப்படி உட்கொண்டதால் உடலில் நிறைய கழிவுகள் சேர்ந்திருக்கும்.

உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் அற்புத ஜூஸ்!!!

இப்படி உடலில் சேரும் கழிவுகளை வார இறுதியில் தவறாமல் வெளியேற்றி விட வேண்டும். இல்லாவிட்டால், பல பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும். அதற்கு வார இறுதியில் டயட் ஒன்றே மேற்கொள்ள வேண்டும். அது வேறொன்றும் இல்லை, வார இறுதியில் ஒருசில ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

இங்கு உடலை சுத்தம் செய்ய உதவும் சக்தி வாய்ந்த உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, தவறாமல் வார இறுதியில் உட்கொண்டு வந்தால், உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதனை ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம், உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். அதுமட்டுமின்றி, எலுமிச்சை உடலின் pH அளவை சீராக பராமரிக்கும்.

மாதுளை

மாதுளை

மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இவை உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்கும்படி செய்வதோடு, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள் உடலை சுத்தம் செய்ய உதவும் உணவுப்பொருட்களில் மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இவை செரிமானத்தை அதிகரித்து, டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றும்.

பூண்டு

பூண்டு

பூண்டில் அல்லிசின் என்னும் கெமிக்கல் உள்ளது. இவை ரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றம் வைரஸ்களை அழித்து, உடலில் இருந்து வெளியேற்றும்.

கைக்குத்தல் அரிசி

கைக்குத்தல் அரிசி

கைக்குத்தல் அரிசியில் பி வைட்டமின்கள், புரோட்டீன் மற்றும் மாங்கனீசு போன்ற உடலைத் தாக்கும் நோய்களை எதிர்த்துப் போராடும் சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. எனவே வார இறுதியில் வெள்ளை சாதத்தை சாப்பிடுவதற்கு பதிலாக, கைக்குத்தல் அரிசி சாதத்தை சமைத்து சாப்பிடுங்கள்.

சீரகம்

சீரகம்

உடலை சுத்தம் செய்ய உதவும் உணவுப் பொருட்களில் மற்றொரு முக்கியமான ஒன்று சீரகம். இந்த சீரகத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை ஆரோக்கியமான செரிமானத்திற்கு வழிவகுக்கும். எனவே விடுமுறை நாட்களில் சீரகத்தை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வாருங்கள்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளை சாப்பிட்டால், நோய்கள் அண்டாது. அதே சமயம், ஆப்பிளில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், இதனை விடுமுறை நாட்களில் ஸ்நாக்ஸ் நேரத்தில் உட்கொண்டு வந்தால், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் சுத்தமாகும்.

வெங்காயம்

வெங்காயம்

ஆம், வெங்காயம் கூட உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும். இதற்கு அதில் உள்ள சல்பர் மட்டுமின்றி, அமினோ அமிலங்களும் தான் காரணம்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ் மிகவும் சக்தி வாய்ந்த க்ளின்சிங் தன்மையைக் கொண்டுள்ளது. மேலும் இதில் சல்பர், வைட்டமின் சி மற்றும் அயோடின் போன்றவைகளும் உள்ளது. எனவே விடுமுறை நாட்களில் முட்டைக்கோஸை சாலட்டுகளில் சேர்த்து உட்கொண்டு, உடலை சுத்தப்படுத்துங்கள்.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட்டில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவற்றுடன், பீட்டா-சியானின் என்னும் நிறமி, உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்துவிடும்.

குறிப்பு

குறிப்பு

விடுமுறை நாட்களில் எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்டு, உடலை அசுத்தப்படுத்துவதற்கு பதிலாக, மேலே கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு சாலட் போன்று செய்து விடுமுறை நாட்களில் உட்கொண்டால், உடல் சுத்தமாவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். முக்கியமாக உடல் எடையும் அதிகரிக்காமல் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weekend Detox Diet To Cleanse Your Body

The weekend is here and it is time to do a detox at home. The best to go in for is the weekend detox diet. It will also aid in weight loss.
Story first published: Friday, August 7, 2015, 17:07 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter