For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் செய்யும் உடற்பயிற்சியில் மாற்றம் தேவைப்படுகிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

By Boopathi Lakshmanan
|

உடலை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன் என்பது திருமூலம் மொழி. இந்த கூற்றை பின்பற்றும் போதும், சரியான முறையில் செயல்பட வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம். படித்துப் பயன் பெறுங்கள்!

வயிற்றுக் கொழுப்பைக் கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்!!!

தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலமான கட்டுடலையும், கவர்ச்சியான தோற்றத்தையும் பெறுவதுடன், ஒழுங்கான வாழ்க்கை முறை மற்றும் மகிழ்ச்சியையும் பெற முடியும். ஆனால் சில நேரங்களில், ஒரே மாதிரியான உடற்பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்து வருவது உங்களுடைய குறிக்கோளை பயனற்றதாக்கிவிடும். இதுப்போன்ற சூழல்கள் ஏற்படும் நேரங்கள் தான், உடற்பயிற்சிகளில் மாற்றம் செய்ய வேண்டிய நேரங்களாக இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறி 1

அறிகுறி 1

நீங்கள் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யத் துவங்கும் போது, சில நாட்களிலேயே பலன்களைப் பெறத் துவங்குவீர்கள். சில மாதங்களுக்குப் பின்னர், நீங்கள் ஒரு சமதளமான அல்லது முன்னேற்றமில்லாத இடத்தில் இருப்பதை உணருவீர்கள். இந்நேரங்களில் நல்ல பலன்களைப் பெற, எண்ணிக்கைகளை அதிகரித்தல் மற்றும் மீண்டும் செய்தல் மற்றும் செய்யும் வேகத்தை அதிகரித்தல் போன்றவை உதவும்.

அறிகுறி 2

அறிகுறி 2

ஒரே மாதிரியான பயிற்சிகளை ஒரே வரிசையில் திரும்பத் திரும்பச் செய்வதால், பயிற்சியின் மீதான உங்களுடைய ஊக்கம் விலகிச் சென்றுவிடும். எனவே, உங்களிடம் பல்வேறு வகையான பயிற்சிகள் இருப்பதை நீங்கள் உறுதி செய்தால், உங்களுக்குத் தேவையான ஊக்கம் விலகவே விலகாது.

அறிகுறி 3

அறிகுறி 3

நீங்கள் ஜிம்மில் இருந்து வந்த பின்னர் மூட்டுகளில வலி ஏற்பட்டால், நீங்கள் சரியான வகையில் பயிற்சியை செய்யவில்லை அல்லது தொடங்கவில்லை அல்லது முடிக்கவில்லை எனலாம். இதுப்போன்ற நேரங்களில் இலேசான கார்டியோவை சாதாரணமாகச் செய்து விட்டு, வலுவிற்கான பயிற்சியை அல்லது பிற முன்னேறிய பயிற்சிகளை செய்யலாம்.

அறிகுறி 4

அறிகுறி 4

ஒரே மாதிரியான பயிற்சிகளை திரும்பத் திரும்ப செய்வதால் உங்களுடைய உடல் பகுதிகளுக்கு அதிகமான பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கும், மற்றும் இதனால் நீங்கள் தளர்வடையத் துவங்கியிருப்பீர்கள். எனவே உங்களுடைய பயிற்சியை நன்றாகத் திட்டமிடுங்கள் மற்றும் இடையிடையே ஓய்வு கொடுப்பதன் மூலம் தசைகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதையும் உறுதி செய்யுங்கள்.

அறிகுறி 5

அறிகுறி 5

உங்களுடைய வரையறையை நீங்கள் அதிகரிக்காமல் இருந்தால், உங்களால் ஃபிட்னஸ் அளவைப் பராமரிக்க முடியும் ஆனால் உச்சநிலைக்குச் செல்ல முடியாது. கிராஸ்ஃபிட் மற்றும் HIIT போன்ற சவால் விடக் கூடிய பயிற்சிகளை நீங்கள் முயற்சிப்பதன் மூலம் நீங்கள் இந்த உச்சநிலைக்குச் செல்ல முடியும்.

அறிகுறி 6

அறிகுறி 6

உங்களுடைய பயிற்சியினால் நீங்கள் சோர்வடைந்து இருக்காலம். ஆனால் அது உங்களுடைய முழு சக்தியையும் வடிகட்டி இருக்காது. எனவே, பயிற்சிக்குப் பின்னர் மிகவும் தளர்ந்து போகும் நிலையை நீங்கள் அனுபவித்திருந்தால், அது நீங்கள் குறைந்த தீவிரமுள்ள பயிற்சிகளை செய்ய வேண்டும், பயிற்சிகளுக்கு இடையில் நன்கு ஓய்வெடுக்க வேண்டும் மற்றும் நன்றாக சாப்பிட வேண்டும் என்று சொல்லும் அறிகுறியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Six Sure Signs You Need To Change Your Workout

Sometimes, doing the same exercise over and over again may negate your fitness goals. If any of these situations sound familiar, it's time you change your fitness routine.
Desktop Bottom Promotion