For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரண்டே வாரத்தில் எடையைக் குறைக்க உதவும் சிறந்த ஒர்க்-அவுட்கள்!!!

By Boopathi Lakshmanan
|

நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதை விட அதிகமான முயற்சி இருந்தால் தான் உங்களால் எடையைக் குறைக்க முடியும். உடலின் அதிகமான கலோரிகளை நீங்கள் எரிக்க விரும்பினால், அதற்கு கடுமையான பயிற்சியுடன் கூடிய, உணவுக் கட்டுப்பாட்டை நீங்கள் பின்பற்ற வேண்டியிருக்கும். இரண்டே வாரத்தில் எடையைக் குறைக்கும் வழிமுறைகளைப் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

பத்தே நாள் தான் டைம்.. அதுக்குள்ள தொப்பையை சுருக்கனும்.. எப்படி?...இப்படிச் செய்யலாம்!

அதிலும் இரண்டே வாரங்களில் எடையைக் குறைக்க உதவும் ஒர்க்-அவுட்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா? இரண்டு வாரமா - சான்ஸே இல்லைன்னு நினைத்தால் கூட, இந்த பயிற்சிகளால் சரியான விளைவுகளை ஏற்படுத்த முடியும். எடை குறைப்புக்கான இந்த பயிற்சிகளை 2 வாரங்களுக்குப் பின்பற்றி வந்தால், உங்களுக்கு குறுகிய காலத்தில் ஆச்சிரியப்படச் செய்யும் பலன்கள் கிடைக்கும்.

இந்த பயிற்சிகளில், எடை குறைப்புக்கான பயிற்சிகளைத் தான் நாம் காண்கிறோம். இந்த எடை குறைப்புப் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால், நீங்கள் முதலில் கணித்ததை விட நல்ல பலன்கள் கிடைத்து எடை குறையும். இப்பொழுது இந்த சக்தி வாய்ந்த உடற்பயிற்சிகளைத் தெரிந்து கொள்வோம்.

ஆயுர்வேதத்தின் படி உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்...

இதோ 2 வாரங்களில் எடையைக் குறைப்பதற்கான சிறந்த ஒர்க்-அவுட்கள். எடை குறைப்புக்கான இந்த ஒர்க்-அவுட்களை சற்றே கவனித்துப் பாருங்கள் - குறிப்பிடத் தகுந்த, மிகவும் திறமையான பயிற்சிகளாக அவை இருக்கும். மிகவும் வேகமாக எடையை எப்படி குறைக்கலாம் என்ற உங்கள் கேள்விக்கான பதில்கள் இந்த பயிற்சிகளில் இருக்கும்.

வீடியோவில் பார்க்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வார்ம் அப்

வார்ம் அப்

எடை குறைப்புக்கான சிறந்த ஒர்க்-அவுட்களை செய்யும் போது, நீங்கள் செய்யும் வார்ம் அப் பயிற்சி, உடலின் குறிப்பிட்ட தசைகளை இயங்கச் செய்யும். தடையற்ற வகையில் புஜங்களை சுழற்றவும், கைகளை அசைக்கவும் மற்றும் மூட்டு இணைப்புகளை இயக்கவும் வார்ம்-அப் அவசியம்.

ஹிட்ஸ்: முதல் வாரம்

ஹிட்ஸ்: முதல் வாரம்

ஹிட்ஸ், பொதுவாகவே ஓட்டம் தான் 2 வாரங்களில் எடையைக் குறைப்பதற்கான பயிற்சிகளில் மிகச்சிறந்த வழிமுறை என்பார்கள். எனவே நீங்கள் ஹிட்ஸ்களை தொடங்கலாம். 100 மீட்டர் ஹிட்ஸ்களை 10 முறை திரும்பத் திரும்பச் செய்யுங்கள். ஒரு ஹிட்ஸிலிருந்து மற்றொன்றை தொடங்கும் முன்னர் குறைந்த பட்சம் 3 நிமிடங்கள் ஓய்வெடுங்கள். முதல் வாரத்தில் ஒவ்வொரு ஹிட்ஸ்-க்கும் இடையில் நீங்கள் வேறெதுவும் செய்யத் தேவையில்லை. எடை குறைப்புக்கான பயற்சிகளில் ஹிட்ஸ் சிறந்த பயிற்சி என்பதற்கு மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை.

புஷ்-அப்ஸ்

புஷ்-அப்ஸ்

ஹிட்ஸ் பயிற்சிக்குப் பின்னர் நீங்கள் புஷ்-அப் செய்யலாம். மார்புப் பகுதியிலுள்ள கொழுப்புகளை நீங்கள் எரிக்க விரும்பினால், கால்களை தூக்கி வைத்தவாறு பயற்சி செய்யுங்கள். இதன் மூலம் உங்களுடைய மார்பக தசைகளில் இறுக்கங்கள் ஏற்படும். 2-வது வாரத்தில், ஒவ்வொரு ஹிட்ஸ் பயிற்சிக்குப் பிறகும், குறைந்தது 5-6 தடவைகள் புஷ்-அப் பயிற்சிகளை செய்து வரவும்.

புல் அப்ஸ் மற்றும் பேரலல் பார்

புல் அப்ஸ் மற்றும் பேரலல் பார்

புஷ்-அப் பயிற்சிக்குப் பிறகு ஜிம்முக்கு செல்ல முடியுமென்றால், இதை விட புத்திசாலித்தனமாக பயிற்சிகள் வேறெதுவும் இல்லை.

ஸ்பாட் ரன்னிங்

ஸ்பாட் ரன்னிங்

ஹிட்ஸ் மற்றும் புஷ்-அப் பயிற்சிகளை நீங்கள் செய்து முடித்தவுடன், ஸ்பாட் ரன்னிங் பயிற்சியை தொடங்கவும். உயரமான அளவிற்கு முழங்காலை செயல்படுத்தினால் மட்டுமே ஸ்பாட் ரன்னிங் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங்

ஹிட்ஸ் பயிற்சிக்கு முன்னர் அல்லது பின்னர் என எப்பொழுது வேண்டுமானாலும் ஸ்கிப்பிங் பயிற்சியை செய்யலாம். இந்த பயிற்சியை அடிப்படையாகவே எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். 2 நிமிட நேரத்திற்கு, 3 அல்லது 4 முறைகளுக்கு ஸ்கிப்பிங் பயிற்சியை திரும்பத் திரும்பச் செய்யவும்.

பளு தூக்குதல்

பளு தூக்குதல்

எடை குறைப்பு பயிற்சிகளின் போது பளு தூக்கும் பயிற்சியை பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அதிகமான எடை அல்லது தொப்பை கொண்டுள்ளவர்களுடைய, கொழுப்பை குறைத்து, தேவையற்ற கலோரிகளை எரிப்பதற்கு பளு தூக்குவதை விட சிறந்த பயிற்சி எதுவுமில்லை. மெசின்களை பயன்படுத்துவதை விட, ப்ரீ வெயிட் பயிற்சிகளை செய்வது மிகுந்த பலன் தரும். பளு தூக்கும் பயிற்சிகளை செய்யும் போது, உடலின் குறிப்பிட்ட சில பகுதிகளை கவனித்திட மறந்து விட வேண்டாம்.

அப்ஸ்

அப்ஸ்

மேலே குறிப்பிட்ட பயிற்சிகளை செய்து முடித்த பின்னர், செய்தால் மிகவும் பலனளிக்கும் பயிற்சிகளில் ஒன்றாக அப்ஸ் உள்ளது. இந்த பயிற்சிகளில் பல்வேறு வேரியேசன்கள் உள்ளன. 2 வாரத்தில் நீங்கள் எடையைக் குறைக்க வேண்டும் என்று விரும்பினால், ஒரு நாளைக்கு 3 முதல் 4 அப் வேரியேசன்களை பயிற்சி செய்ய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். 4 செட்களாக 24 தடவைகள் திரும்பத் திரும்பச் செய்யும் வழிமுறை இதில் மிகவும் சிறந்த பலனளிக்கும். முதல் வாரத்தில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் அப்ஸ் பயிற்சிகளை செய்யலாம். 2-ம் வாரத்தில் தினமும் செய்து வரலாம்.

ஸ்ட்ரெட்சிங்

ஸ்ட்ரெட்சிங்

நீங்கள் செய்யும் பயிற்சிகளின் நிறைவாக ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகளை செய்தால் மட்டுமே மற்ற பயிற்சிகளின் பலன் முழுமையாகக் கிடைக்கும். உடற்பயிற்சி பந்து கொண்டு பயிற்சி செய்வதால் மிகுந்த பலன் கிடைக்கும்.

 நீச்சல்

நீச்சல்

ஸ்ட்ரெட்சிங் பயிற்சிக்குப் பிறகு நீச்சலடிக்கச் செல்லுங்கள். அது உங்களுடைய தசைகளை தளர்வடையச் செய்வதுடன், கலோரிகளையும் எரித்திடும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Best Workout To Lose Weight In Just 2 Weeks

Here is the best workout to lose weight in just 2 weeks. Take a look at these best workouts for weight loss that involves performing specific, highly effective exercises. Your question on how to lose weight fast through workout and exercises is answered. Read on...
Desktop Bottom Promotion