சோப்பை ஏன் முகத்திற்கு அதிகம் பயன்படுத்தக் கூடாது?

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக முகத்தில் உள்ள அழுக்கை நீக்க சோப்பு பயன்படுத்தி முகத்தை கழுவுவோம். ஆனால் அப்படி பயன்படுத்தும் சோப்பை முகத்திற்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் ஒரு நாளைக்கு குளிக்கும் போது தவிர, மற்ற நேரங்களில் சோப்பு பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

தினமும் தலைக்கு ஷாம்பு போடுவதால் ஏற்படும் தீய விளைவுகள்!!!

வேண்டுமெனில் கடைகளில் சரும வகைக்கு ஏற்ப விற்கப்படும் ஃபேஸ் வாஷ்களைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கின்றனர். இப்போது ஏன் சோப்பை முகத்திற்கு அதிகம் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

அடிக்கடி தலைக்கு குளிப்பது நல்லதா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோப்புகளில் கெமிக்கல்கள் அதிகம்

சோப்புகளில் கெமிக்கல்கள் அதிகம்

உடலை சுத்தப்படுத்த பயன்படும் சோப்புக்களில் கெமிக்கல்கள் அதிகம் உள்ளது. அதனால் தான் சோப்புக்களில் நுரை அதிகம் வருகிறது. மேலும் எந்த சோப்புகளில் நுரை அதிகம் வருகிறதோ, அவற்றில் கெமிக்கல் அளவுக்கு அதிகமாக உள்ளது என்று அர்த்தம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சரும வறட்சி

சரும வறட்சி

கெமிக்கல் இருக்கும் சோப்பை முகத்திற்கு அதிகம் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் முற்றிலும் வெளியேறி, சரும் அதிகம் வறட்சியடையும். சிலருக்கு குளித்த பின் சரும வறட்சி ஏற்படுவதற்கு முக்கிய காரணமும் இதுவே.

நல்ல பாக்டீரியாக்களும் அழியும்

நல்ல பாக்டீரியாக்களும் அழியும்

சோப்புக்களை பயன்படுத்தும் போது கெட்ட பாக்டீரியாக்கள் மட்டுமின்றி, நல்ல பாக்டீரியாக்களும் அழிக்கப்படுகின்றன. நல்ல பாக்டீரியாக்கள் நம் சருமத்தில் இருந்தால் தான், சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

பாதுகாப்பு அடுக்கு பலவீனமடையும்

பாதுகாப்பு அடுக்கு பலவீனமடையும்

சோப்புக்களை முகத்திற்கு அதிக அளவில் பயன்படுத்தும் போது, சருமத்திற்கு பாதுகாப்பு தரும் அடுக்கு அழிக்கப்பட்டு, அதனால் சருமத்தினுள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் நுழைந்து அதனால் பல சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சரும பிரச்சனைகள்

சரும பிரச்சனைகள்

சோப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அதிகப்படியான சரும வறட்சியின் காரணமாக சரும சுருக்கம் ஏற்பட்டு, விரைவிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும். சில நேரங்களில் சோப்புக்களும் முகப்பரு வருவதற்கு காரணமாக விளங்கும்.

தீர்வு

தீர்வு

எதைக் கொண்டு முகத்தைக் கழுவுவது சிறந்தது என்று பலரும் கேட்கலாம். சொல்லப்போனால் ஒரு நாளைக்கு இத்தனை முறை தான் முகத்தைக் கழுவ வேண்டும் என்று நினைக்காமல், அவ்வப்போது முகத்தை குளிர்ந்த நீரில் சாதாரணமாக கழுவி வந்தாலே, சருமத்தில் அழுக்குகள் தேங்காது. ஒருவேளை எதையேனும் பயன்படுத்தி கழுவ வேண்டும் என்று நினைத்தால், ஃபேஸ் வாஷ் பயன்படுத்துங்கள். குறிப்பாக சரும வகைக்கு ஏற்ற ஃபேஸ் வாஷ் வாங்கி பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Soaps are Bad For Your Skin

Is washing your face with soap bad? Yes it damages your skin. Read on to know why soap is bad for skin.
Story first published: Saturday, July 25, 2015, 14:20 [IST]