மூக்கின் மேல் வரும் கரும்புள்ளிகளைத் தடுக்க சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

கரும்புள்ளிகள் எதற்கு வருகிறது என்று தெரியுமா? சருமத்துளைகளில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் அழுக்குகள், இறந்த செல்கள் அதிக அளவில் சேர்ந்து, சருமத்துளைகள் அடைத்து ஒரு கட்டத்தில் அது கரும்புள்ளிகளாக மாறுகின்றன.

கரும்புள்ளிகளைப் போக்கும் ஃபேஸ் மாஸ்க்குகள்!!!

பெரும்பாலும் இந்த பிரச்சனை எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் அதிக அளவில் இருக்கும். ஏனெனில் அவர்களுக்குத் தான் சருமத்தில் அதிக அளவில் எண்ணெய் சுரக்கும். அதுமட்டுமின்றி, சருமத்திற்கு மேக்கப் அதிக அளவில் பயன்படுத்தினாலும் இப்பிரச்சனை எழும்.

மூக்கின் மேல் இருக்கும் சொரசொரப்பை நீக்க சில இயற்கை வழிகள்!!!

சரி, இப்போது கரும்புள்ளிகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிளின்சர்

கிளின்சர்

கெமிக்கல் அதிகம் உள்ள கிளின்சர்கள், சருமத்தில் அளவுக்கு அதிகமான எண்ணெய் பசையை உற்பத்தி செய்யும். இதனால் கரும்புள்ளிகள் அதிகமாகும். எனவே கெமிக்கல் கலந்த கிளின்சர்களை அதிக அளவில் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.

 சுத்தமான தலையணை உறை

சுத்தமான தலையணை உறை

பொதுவாக தலையணையில் அதிக அளவில் இறந்த சரும செல்கள் மற்றும் அழுக்குகள் இருக்கும். அதுமட்டுமின்றி, தலையில் இருந்து எண்ணெயும் தலையணையால் உறிஞ்சப்படும். எனவே அத்தகைய தலையணை உறையை அடிக்கடி துவைத்து பயன்படுத்த வேண்டும்.

இயற்கையான கிளின்சர்கள்

இயற்கையான கிளின்சர்கள்

சருமத்தில் உள்ள அழுக்குள் மற்றும் இறந்த செல்களை நீக்கி, கரும்புள்ளிகள் வராமல் தடுக்க வேண்டுமெனில், இயற்கையான கிளின்சர்களான பால், ரோஸ் வாட்டர், தக்காளி சாறு, உருளைக்கிழங்கு போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

மேக்கப்

மேக்கப்

முகத்திற்கு மேக்கப் அதிகம் போடுவதைத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் அழகைக் கெடுக்கும் சரும பிரச்சனைகள் வருவதற்கு முக்கிய காரணமே மேக்கப் சாதனங்கள் தான்.

ஆவிப்பிடிப்பது

ஆவிப்பிடிப்பது

வாரம் ஒருமுறை ஆவி பிடித்து வந்தால், அடைத்திருக்கும் சருமத்துளைகள் விரிவடையும். இதனால் எளிதில் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் நீக்கிவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Simple Tips To Prevent Blackheads

Simple ways to prevent blackheads include washing your face with natural cleansers. Well, what causes blackheads? Read on to know more...
Story first published: Monday, May 18, 2015, 15:49 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter