தினமும் மேக்கப் போடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

பெண்கள் தங்களின் அழகை அதிகரித்துக் காட்ட தினமும் முகத்திற்கு மேக்கப் போடுவார்கள். ஆனால் அப்படி அன்றாடம் மேக்கப் போடுவது நல்லதா கெட்டதா என என்றாவது யோசித்துள்ளீர்களா? இல்லையெனில் இந்த கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு தினமும் முகத்திற்கு மேக்கப் போடுவதால் என்ன பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

தினமும் முகத்திற்கு மேக்கப் போடுவதன் மூலம், மேக்கப் பொருட்களில் உள்ள கெமிக்கல்கள் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, இயற்கை அழகை முற்றிலும் அழித்து, சருமத்தையே ஒரு மாதிரி அசிங்கமாக வெளிக்காட்டும். அதிலும் என்னதான் நல்ல தரமான பொருளாக இருந்தாலும், சருமத்தில் தினமும் பயன்படுத்தும் போது, அது சரும அழகையே கெடுத்துவிடும்.

சரி, இங்கு அன்றாடம் முகத்திற்கு மேக்கப் போடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும அலர்ஜிகள்

சரும அலர்ஜிகள்

சருமத்தின் ஈரப்பசையை அதிகரிக்க அன்றாடம் மாய்ஸ்சுரைசர்கள் பயன்படுத்துவோம். ஆனால் அப்படி நீண்ட நாட்கள் பயன்படுத்துவதால், அதில் உள்ள கெமிக்கல்கள், சருமத்தில் அரிப்புகள், சருமத்தை கருமையாக்குவது போன்றவற்றை ஏற்படுத்தி சருமத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மூளை பாதிப்பு மற்றும் நடத்தை சீர்கேடு

மூளை பாதிப்பு மற்றும் நடத்தை சீர்கேடு

லிப்ஸ்டிக்கில் லெட், காட்மியம், குரோமியம், அலுமினியம் போன்ற பொருட்கள் உள்ளன. இத்தகைய லிப்ஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அவை வயிற்றினுள் சென்று, மூளையில் பாதிப்பு மற்றும் நடத்தையில் சீர்கேட்டை ஏற்படுத்தும்.

சிறுநீரக பிரச்சனைகள்

சிறுநீரக பிரச்சனைகள்

சருமத்திற்கு க்ரீம், சோப்பு மற்றும் பாடி லோசன் போன்றவற்றை அன்றாடம் பயன்படுத்தினால், சருமம் ஆரோக்கியமாக வெளிப்படும். ஆனால் அதில் உள்ள கெமிக்கல்கள், மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? உதாரணமாக, சில ப்ளீச்சிங் க்ரீம்களில் மெர்குரி அதிகமாக இருக்கும். இவை சிறுநீரகங்களையும், நரம்புகளையும் பாதிக்கும்.

சுவாச பிரச்சனைகள்

சுவாச பிரச்சனைகள்

முகத்திற்கு போடும் பவுடரில் உள்ள கனிமங்களை தொடர்ந்து சுவாசித்தால், அவை நுரையீரலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே நல்ல நறுமணம் உள்ளது என்று பவுடரை நிறைய பூசிக் கொள்ளாதீர்கள். இதனால் சுவாச பிரச்சனைகள் மட்டுமின்றி, தலைவலியும் அதிகம் ஏற்படும்.

புற்றுநோய்

புற்றுநோய்

ஷேவிங் க்ரீம் மற்றும் மாய்ஸ்சுரைசர்களில் பாராபீன் என்னும் பதப்படுத்தும் பொருள் உள்ளது. ஆகவே இவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் போது, மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, சரும புற்றுநோயும் ஏற்படும் அபாயமும் உள்ளது.

முதுமை

முதுமை

நீண்ட நாட்களாக மாய்ஸ்சுரைசர் மற்றும் சரும க்ரீம்களைப் பயன்படுத்தினால், அவை சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தி, விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெற வழிவகுக்கும்.

கூந்தல் பிரச்சனைகள்

கூந்தல் பிரச்சனைகள்

ஷாம்பு, ஹேர் கலர், ஜெல் மற்றும் சீரம் போன்றவை கூந்தலை பாதிக்கக்கூடியவை. இதற்கு அதில் உள்ள பார்மால்டிஹைடு என்னும் கெமிக்கல் தான் காரணம். இவையே கூந்தலின் தரத்தையும், அளவையும் குறைக்கிறது. அதிலும் கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை போன்றவை திடீரென்று வருவதற்கு காரணமும் இவையே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Why You Should Not Use Makeup Regularly

They say makeup adds to the beauty and in turn the confidence of a woman. But too much of anything is bad and we tell you why even regular makeup is bad.
Subscribe Newsletter