அக்குளில் உள்ள கருமையை நீக்கி அழகாக பராமரிப்பது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

அழகு என்பது வெறும் முகத்தில் மட்டுமின்றி, தலை முதல் கால் வரை உடலின் ஒவ்வொரு பகுதியும் அதில் அடங்கும். ஆனால் சிலர் தங்களின் முகம், கை மற்றும் கால்களின் மீது மட்டும் அதிக அக்கறை காட்டி பராமரிப்புக்களை மேற்கொண்டு, அக்குளை விட்டுவிடுவார்கள். ஆனால் தற்போது பல அழகான ஆடைகள் ஸ்லீவ்லெஸ் ஆக இருப்பதால், அவற்றை அணிய வேண்டுமெனில், அக்குளை பராமரிக்க வேண்டியது அவசியம்.

அக்குள் கருமையாக உள்ளதா? அதை எளிதில் போக்க இதோ சில டிப்ஸ்...

சிலருக்கு அக்குள் மட்டும் கருப்பாக இருக்கும். இதனால் அத்தகையவர்களால் மார்டன் ஆடைகளை உடுத்த முடியாது, ஏன் கைகளைக் கூட தூக்க முடியாது. எனவே அக்குளில் உள்ள கருமையைப் போக்கி, அக்குளை அழகாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்து வந்தால், நிச்சயம் அழகான அக்குளைப் பெறலாம்.

அக்குள் வாடையைப் போக்கும் சில இயற்கை சிகிச்சைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேச்சுரல் ப்ளீச்சிங்

நேச்சுரல் ப்ளீச்சிங்

அக்குளில் உள்ள கருமையைப் போக்க, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், சிறிது தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அக்குளில் உள்ள கருமை நீங்கும்.

வியர்வை பிரச்சனை

வியர்வை பிரச்சனை

உங்களுக்கு வியர்வை அதிகம் வெளிவருமாயின், டியோடரண்ட்டை இரவு மற்றும் காலையில் தவறாமல் பயன்படுத்தி வந்தால், அதிகப்படியான வியர்வை பிரச்சனை நீங்கும். ஏனெனில் டியோடரண்ட் வியர்வையை தடுத்து நிறுத்தும்.

ஷேவிங்

ஷேவிங்

அக்குளில் உள்ள முடியை ஷேவ் செய்யும் போது, பல திசைகளில் ஷேவ் செய்ய வேண்டும். இதனால் அக்குளில் உள்ள முடி அனைத்தும் வெளிவந்துவிடும். மேலும் ஷேவிங் செய்யும் முன், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தினால், அக்குள் மென்மையாக இருக்கும்.

வேக்சிங்

வேக்சிங்

ஷேவிங் செய்தும் அக்குள் கருப்பாக இருந்தால், வேக்சிங் செய்யுங்கள். இதனால் அக்குளில் உள்ள முடி அனைத்தும் சுத்தமாக வெளியேற்றப்பட்டுவிடும்.

கருமையான சருமம்

கருமையான சருமம்

அக்குளில் கருமை அளவுக்கு அதிகமாக இருக்குமாயின், தோல் நிபுணரை சந்தித்து, அவரிடம் கருமை நீங்குவதற்கான க்ரீம் என்னவென்று கேட்டு, அதனை வாங்கி பயன்படுத்தி வாருங்கள்.

ஸ்கரப்

ஸ்கரப்

வாரம் ஒருமுறை அக்குளை ஸ்கரப் செய்ய வேண்டும். அதுவும் உப்பு அல்லது சர்க்கரை கொண்டு அக்குளை ஸ்கரப் செய்தால், அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் முற்றிலும் நீக்கப்பட்டு, அக்குள் கருமையாக இருப்பது தடுக்கப்படும்.

மாய்ஸ்சுரைசர் அவசியம்

மாய்ஸ்சுரைசர் அவசியம்

மாய்ஸ்சுரைசரை கை, கால்களுக்கு மட்டுமின்றி, அக்குளுக்கும் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் டியோடரண்ட் பயன்படுத்துவதால் மற்றும் ஷேவிங் செய்வதால், அக்குள் வறட்சியடையக்கூடும். எனவே வறட்சியைத் தடுத்து, அக்குளை மென்மையாக வைத்துக் கொள்ள மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Make Your Armpits Beautiful

How to get pretty armpits? Well, your skin care routine should also focus on your underarms. Read on to know how to get pretty armpits.