வயதானாலும் இளமையாக காட்சியளிக்க சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

ஆரோக்கியமற்ற அவசர உலகில் இன்றைய தலைமுறையினர் இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெறுகின்றனர். இதற்கு பழக்கவழக்கங்களும், உணவுகளும் தான் முக்கிய காரணம். இவற்றில் மாற்றத்தைக் கொண்டு வந்தால், இளமைத் தோற்றத்தை முதுமையானாலும் தக்க வைக்கலாம்.

ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க...

அதுமட்டுமின்றி, பழக்கவழக்கங்கள் மற்றும் உணவுகளோடு, மாசடைந்த சுற்றுச்சூழல் காரணமாக சருமத்திற்கு போதிய பராமரிப்பை வழங்க வேண்டும். எனவே 30 வயதானாலும் இளமையுடன் ஜொலிக்க ஒருசில டிப்ஸ்களை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.

கை மற்றும் கால்களில் உள்ள கருமையை போக்க சில சிம்பிளான வழிகள்!!!

அது வேறொன்றும் இல்லை, சருமத்தின் இளமையைத் தக்க வைக்கும் ஃபேஸ் மாஸ்க்குகள் தான் அவை. சரி, இப்போது முதுமையிலும் இளமையுடன் காட்சியளிக்க சருமத்திற்கு போட வேண்டிய ஃபேஸ் மாஸ்க்குகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெண்ணெய் மற்றும் தேன்

வெண்ணெய் மற்றும் தேன்

1 டேபிள் ஸ்பூன் வெண்ணெயுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் சருமமானது வெண்ணெயில் உள்ள சத்துக்களை உறிஞ்சி, சருமத்தின் இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளை அரைத்து, அதனை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி சில வாரங்கள் செய்து வந்தால், நல்ல கொழுகொழு கன்னங்களைப் பெற்று, சருமத்தின் இளமைத்தன்மையைப் பாதுகாக்கலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

தினமும் இரவில் படுக்கும் முன் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முதுமையிலும் சருமம் இளமையோடு காட்சியளிக்கும்.

எலுமிச்சை சாறு மற்றும் பழத் துண்டுகள்

எலுமிச்சை சாறு மற்றும் பழத் துண்டுகள்

ஒரு பௌலில் 3 துண்டுகள் ஆப்பிளுடன், 2 துண்டுகள் கேரட் சேர்த்து, அதில் 1/2 கப் எலுமிச்சை சாறு சேர்த்து உட்கொண்டு வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், இளமையுடன் காணலாம்.

தயிர்

தயிர்

தயிரைக் கொண்டு தினமும் முகத்தை 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், கன்னங்கள் பெரிதாவதுடன், இளமையும் பாதுகாக்கப்படும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து உலர வைத்து வந்தால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை நீங்கி, முகம் பொலிவோடு இளமையாக காட்சியளிக்கும்.

பப்பாளி மற்றும் தேன்

பப்பாளி மற்றும் தேன்

நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து உலர வைத்து கழுவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

மில்க் க்ரீம்

மில்க் க்ரீம்

தினமும் இரவில் படுக்கும் முன் மில்க் க்ரீம்மை முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து வர, கன்னங்கள் கொழுகொழுவென்று ஆகி, சருமத்தின் இளமையும் பாதுகாக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Get A Fuller And Younger Face

Now it is easy to get fat face & chubby cheeks at home by these natural home remedies. Try these natural ways to increase fat on face.