Latest Updates
-
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் -
ஏப்ரல் மாதத்தில் 5 முறை உருவாகும் அரிய சுப யோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டும்! -
தஞ்சாவூர் ரோசாப்பூ கார சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
எடைக்குறைப்பு மருந்தை உட்கொள்வதை நிறுத்தினால் என்ன நடக்கும் - புதிய ஆய்வு சொல்வது என்ன? -
IPL 2026: சிஎஸ்கே வீரர்கள் கண்டிப்பாக சுவைக்க வேண்டிய சென்னையின் பிரபல தெருவோர உணவுகள்! -
விஜய்க்கு எதிராக போட்டியிடப்போகும் 252 தேர்தல்களில் தோற்ற ' தேர்தல் மன்னன்' யார் தெரியுமா? -
மட்டன் பஞ்சு போல சாப்ட்டா இருக்கணுமா? அப்ப சமைக்கும் போது இந்த 2 பொருட்களை சேத்துக்கோங்க போதும்! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: ஏப்ரல் 16-ல் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்! -
கொங்குநாடு ஸ்பெஷல் தட்டைப்பயறு சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
கோவை ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க
எந்த காலத்தில் உடலுறவு கொண்டால் வேகமாக கருத்தரிக்க முடியும்?
இன்றைய காலத்தில் கருத்தரிப்பது என்பது கடினமான ஒன்றாகிவிட்டது. இதற்கு தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் தான் முக்கிய காரணம். நீங்கள் கருத்தரிக்க விரும்புகிறீர்களா? அப்படியெனில் சரியான காலத்தில் உடலுறவு கொள்ள வேண்டும்.
இங்கு எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், வேகமாக கருத்தரிக்க முடியும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கருவளமிக்க நாட்கள்
கருவளமிக்க நாட்களில் உடலுறவு கொண்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஒரு பெண்ணிற்கு கருவளமிக்க நாட்கள் என்பது மாதவிடாய் சுழற்சியின் 8 ஆம் நாளில் இருந்து, 19 ஆவது நாள் வரை ஆகும்.

அதிகாலை
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னலில் வெளிவந்த கட்டுரையில், அதிகாலையில் 5.48-க்கு உடலுறவில் ஈடுபடுவதை சிறந்ததாக கூறுகிறது. ஏனெனில் இந்த நேரத்தில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாக இருப்பதாவும், உடலில் ஆற்றல் அதிகமாக இருப்பதாகவும், ரிலாக்ஸான மனநிலையுடனும் இருப்பதால், இக்காலத்தில் உடலுறவு கொள்ளும் போது வேகமாக கருத்தரிக்க முடியும்.

படுக்கும் முன்
அதிகாலையில் உடலுறவு கொள்வது எப்படி சிறந்ததோ, அதேப்போல் இரவில் படுக்கும் முன் உடலுறவு கொள்வதும் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.

அடிக்கடி உறவு
தற்போதைய வேலைப்பளுமிக்க டென்சன் நிறைந்த வாழ்க்கை முறையால், தம்பதிகள் குறைவான அளவில் உடலுறவு கொள்கின்றனர். இதன் காரணமாக, ஆண்களின் விந்தணுவின் இயக்கம் பாதிக்கப்பட்டு, கருப்பையை அடைய முடியாமல் போய், கருத்தரிக்கும் வாய்ப்பும் குறைகிறது. எனவே குறைந்தது வாரத்திற்கு 2 முறையாவது உடலுறவு கொள்ள வேண்டும். இதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

ஹனிமூன்
மன அழுத்தம் உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி, உடலின் சாதாரண இயக்கங்களான தூக்கம், செரிமானம், உடல் எடை போன்றவற்றில் இடையூறை ஏற்படுத்தி, உடல் சோர்வை அதிகரித்து, மறைமுகமாக பெண்களின் இனப்பெருக்க சுழற்சியையும், ஆண்களின் விந்தணுவின் எண்ணிக்கையையும் பாதிக்கும். எனவே மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள தம்பதிகள் ஹனிமூன்/சுற்றுலா செல்ல வேண்டும்.



Click it and Unblock the Notifications











