யோனி பொருத்தம் என்றால் என்ன? இது தாம்பத்திய வாழ்விற்கு எவ்வளவு அவசியம்?

Posted By:
Subscribe to Boldsky

திருமணத்தில் முக்கியமாக பத்து பொருத்தங்கள் பார்ப்பார்கள். இதில் ஒரு சில பொருத்தங்கள் மிகவும் அவசியம். அதில் ஒன்று தான் யோனி பொருத்தம். இது தான் கணவன் - மனைவி வாழ்வில் தாம்பத்திய உறவு சிறக்குமா? இல்லையா? என்பதை கூறும் பொருத்தம் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோனி பொருத்தம் என்றால் என்ன?

யோனி பொருத்தம் என்றால் என்ன?

யோனி பொருத்தம் என்பது தம்பதிகள் மத்தியில் தாம்பத்திய வாழ்க்கை குறித்து கூறும் பொருத்தம் ஆகும். கணவன் - மனைவி வாழ்வில் இல்வாழ்க்கை இன்பம், மகிழ்ச்சி போன்றவற்றை இது குறிக்கிறது.

நட்சத்திர வாரியாக!

நட்சத்திர வாரியாக!

மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வெவ்வேறு வகையிலான விலங்குகளின் காம உணர்வு பொருத்தப்பட்டு கூறிகிறார்கள்.

யோனி நட்சத்திரம் எப்படி பார்ப்பது?

யோனி நட்சத்திரம் எப்படி பார்ப்பது?

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விலங்கின் யோனி இருக்கிறது என்று கூறுகின்றனர். இதில் எந்த இரண்டு நட்சத்திரத்தை குறிக்கும் விலங்குகளின் யோனி சேரும், சேராது என வகை பிரித்து பட்டியலே இருக்கிறது.

யோனி பகை நட்சத்திரங்கள்!

யோனி பகை நட்சத்திரங்கள்!

 • குரங்கு - ஆடு : பூராடம், திருவோணம் - பூசம், கிருத்திகை
 • சிங்கம் - யானை : அவிட்டம், பூரட்டாதி - பரணி, ரேவதி
 • குதிரை - எருமை : அஸ்வினி, சதயம்- சுவாதி, அஸ்தம்
 • பசு -புலி : உத்திரம், உத்திராடம், விசாகம்- சித்திரை, உத்திரட்டாதி
 • எலி - பூனை : மகம், பூரம் - ஆயில்யம், புனர்பூசம்
 • பாம்பு - எலி : ரோகிணி, மிருகசீரிஷம்- மகம், பூரம்
 • கீரி- பாம்பு : உத்திராடம்- ரோகினி, மிருகசீரிஷம்,
 • மான் - நாய் : கேட்டை, அனுஷம்- மூலம், திருவாதிரை
நட்சத்திரங்களும் யோனி வகைகளும்!

நட்சத்திரங்களும் யோனி வகைகளும்!

 • அஸ்வினி - தேவ ஆண் குதிரை!
 • பரணி - மானுஷ ஆண் யானை
 • கிருத்திகை - ராஷஸ பெண் ஆடு
 • ரோகிணி - மானுஷ ஆண் நாகம்
 • மிருகசீரிஷம் - தேவம் பெண் சாரை
 • திருவாதிரை - மானுஷ ஆண் நாய்
 • பனர்பூசம் - தேவம் பெண் பூனை
 • பூசம் - தேவம் ஆண் ஆடு
 • ஆயில்யம் - ராஷஸ ஆண் பூனை
 • மகம் - ராஷஸ ஆண் எலி
 • பூரம் - மானுஷ பெண் எலி
 • உத்திரம் - மானுஷ பெண் எருது
 • அஸ்தம் - தேவம் பெண் எருமை
 • விசாகம் - ராஷஸ ஆண் புலி
 • அனுஷம் - தேவம் பெண் மான்
 • கேட்டை - ராஷஸ ஆண் மான்
 • மூலம் - ராஷஸ பெண் நாய்
 • பூராடம் - மானுஷ ஆண் குரங்கு
 • உத்திராடம் - மானுஷ பெண் மலட்டு பசு
 • திருவோணம் - தேவம் பெண் குரங்கு
 • அவிட்டம் - ராஷஸ பெண் சிங்கம்
 • சதயம் - ராஷஸ பெண் குதிரை
 • பூரட்டாதி - மானுஷ ஆண் சிங்கம்
 • உத்திரட்டாதி - மானுஷ பெண் பசு
 • ரேவதி - தேவம் பெண் யானை
யோனி பொருத்தம் இல்லை என்றால்?

யோனி பொருத்தம் இல்லை என்றால்?

இருவர் மத்தியில் யோனி பொருத்தம் இல்லை எனில், அவர்களது தாம்பத்திய வாழ்க்கை சிறக்காது. கணவன் - மனைவி உறவில் வேட்கை குறைவாக இருக்கும் என்றும், குழந்தை பாக்கியத்தில் சிரமம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What is Yoni Porutham in Tamil Astrology?

What is Yoni Porutham in Tamil Astrology? What its important in marriage life? Read on here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter