என் காதலை காப்பாற்றிக்கொள்ள தானே பொய் சொன்னேன்..! இது தவறா..?

Written By:
Subscribe to Boldsky

நாம் நமது வாழ்க்கைத்துணையிடம் எந்த விஷயத்தையும் மறைக்காமல் அப்படியே சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களையும் சொல்லிவிட முடியாது. சில உண்மைகளை கூறி அவர்களை கஷ்டப்படுத்துவதை விட மகிழ்ச்சிப்படுத்தும் பொய்களை கூறிவிடுவதே சிறந்தது என நாம் நினைப்போம்!

சிலரிடம் உங்களது துணையிடம் நீங்கள் எது போன்ற விஷயங்களை மறைப்பீர்கள்? அதற்காக என்று கேட்ட போது கிடைத்த பதில்கள் இதோ உங்களுக்காக...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைப்படத்தில் பார்த்தது போல் இல்லை!

புகைப்படத்தில் பார்த்தது போல் இல்லை!

என் காதலியை புகைப்படத்தில் பார்த்து தான் நான் காதலித்தேன். அவர் கொஞ்சம் அதிகமாகவே மேக்கப் போடுவார். சில சமயங்களில் அவர் போட்ட லிப்ஸ்டிக் அவரது பற்களில் ஒட்டிக்கொண்டது கூட உண்டு...! ஆனால் இதை எல்லாம் நான் அவளிடம் கூறி அவளை கஷ்டப்படுத்த மாட்டேன்..! அவளுக்கும் எனக்கும் திருமணமாகிவிட்டது...!

உடலுறவில் புதிய செயல்பாடுகள்!

உடலுறவில் புதிய செயல்பாடுகள்!

எனக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிவிட்டது.. என் கணவரை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் உடலுறவில் புதியதாக ஏதாவது இருக்க வேண்டும் என நினைப்பேன்.. ஆனால் அவர் புதியதை எல்லாம் டிரை செய்ய முன்வர மாட்டார். அவருக்கு இதில் ஈடுபாடு வர நான் என்னால் இயன்றதை செய்துவிட்டேன். ஆனால் அவர் மாறவில்லை என்று நினைக்கிறேன்...! ஆனால் இதை பற்றி அவரிடம் சொல்லி கஷ்டப்படுத்த மாட்டேன்..!

திருமணத்திற்கு முன்பு காதல் இல்லை!

திருமணத்திற்கு முன்பு காதல் இல்லை!

எனக்கு பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் தான். என் மனைவி மிகவும் அழகானவள். அலுவலக வேலையிலும் திறமைசாளி, அவரது பெற்றோர்களும் படித்தவர்கள் தான். நல்ல குடும்பம். அனைத்து இருந்தும் அவள் மீது திருமணத்திற்கு முன்னர் எனக்கு காதல் வரவில்லை. வேறுவழி எதுவும் இல்லை என்று தான் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் திருமணமான சில வாரங்களிலேயே அவள் மீது காதலில் விழுந்து விட்டேன்..!

முத்தமிட தெரியாது..!

முத்தமிட தெரியாது..!

எனது மனைவியிடம் முத்தமிடுவதை பற்றி எவ்வளவு தான் விளக்கமாக சொல்லி கொடுத்தாலும், அவள் சரியாக முத்தமிடமாட்டாள். அது இயற்கையாகவே வர வேண்டும் என விட்டுவிட்டேன்.. என்ன தான் இருந்தாலும் எனக்கு ஏற்ற துணை என் மனைவி மட்டும் தான்....!

முதல் சந்திப்பு கசப்பானது!

முதல் சந்திப்பு கசப்பானது!

முதல் சந்திப்பு அன்று நான் பார்லர் எல்லாம் சென்று என் முடியை அழகுபடுத்திக்கொண்டு, அழகான உடையில் தேவதை போல சென்றேன்.. ஆனால் என் காதலன் ( தற்போது கணவர்) ஒரு அழுக்கான வண்டியில் என்னை அழைத்துக்கொண்டு, ஒரு ரோட்டு கடையில் சாப்பிட அழைத்தார்... அன்று நான் தப்பித்தால் போதும் என்று ஒடி வந்துவிட்டேன்..! ஆனால் தப்பிக்க முடியவில்லை அன்று முதல் அவர் மீது காதலில் விழுந்துவிட்டேன்..!

வேறொரு பெண்ணிடம் ஈர்ப்பு..!

வேறொரு பெண்ணிடம் ஈர்ப்பு..!

எனக்கு என்னுடன் வேலை செய்யும் ஒரு பெண் மீது ஈர்ப்பு உண்டானது. ஆனால் அவரை காதலிக்கும் நோக்கம் எல்லாம் எனக்கு இல்லை. இதை பற்றி யாரிடமும் பேசவும் இல்லை. அவள் மீது உண்டான ஈர்ப்பு பற்றி நான் என் மனைவியிடம் சொன்னால், என் மீது அவளுக்கு உள்ள நம்பிக்கை போய்விடுமோ என்று நினைத்து அவளிடம் இருந்து அதை மறைத்து விட்டேன்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My Shocking secret i never told to my partner

My Shocking secret i never told to my partner
Story first published: Monday, August 7, 2017, 18:42 [IST]