இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடம்புல இருக்குற கெட்ட நீர், கெட்ட கொழுப்பு கரைஞ்சு எடை வேகமா குறையும்..

Posted By:

Weight Loss Varagu Arisi Vegetable Kanji Recipe In Tamil: எடையைக் குறைக்க டயட்டில் இருக்கிறீர்களா? உங்களின் டயட்டில் காலையில் பெரும்பாலும் ஒரே மாதிரியான உணவு தான் இருக்குமா? அதுவும் சுவையில்லாத உணவாகத் தான் இருக்குமா? அப்படியானால் உங்களின் காலை உணவில் சிறுதானிய உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதுவும் வரகரிசியைக் கொண்டு காய்கறிகளை சேர்த்து கஞ்சி தயாரித்து குடியுங்கள். இப்படி கஞ்சி தயாரிக்கும் போது, அதன் சுவை அற்புதமாக இருப்பதோடு, வயிறும் நீண்ட நேரம் நிறைந்திருக்கும். இந்த கஞ்சியை தினமும் காலையில் குடித்து வரும் போது, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் குறையும். குறிப்பாக இந்த கஞ்சி சர்க்கரை நோயாளிகளும் குடிக்க ஏற்றவாறு இருக்கும்.

Weight Loss Kanji Recipes How To Make a Varagu Arisi Vegetable Kanji

உங்களுக்கு வரகரிசி வெஜிடேபிள் கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரகரிசி வெஜிடேபிள் கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வரகரிசி - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 6 டம்ளர்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் வரகரிசி மற்றும் 1/4 கப் பாசிப்பருப்பை எடுத்து, நீரில் 3-4 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய கேரட்டை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 1/4 டீஸ்பூன் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, கழுவி வைத்துள்ள வரகரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் 6 டம்ளர் நீரை ஊற்றி, கொத்தமல்லியை சேர்த்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குக்கரை மூடி, 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கிளறினால், சுவையான வரகரிசி வெஜிடேபிள் கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, October 22, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion