Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
ஈஸியான 10 பொரியல் ரெசிபிக்கள்!!!
ரெசிபிக்களிலேயே பொரியல் ரெசிபியில் நிறைய சத்துக்கள் நிறைந்திருக்கும். ஏனெனில் பொரியல் ரெசிபிக்களில் பயன்படுத்தும் காய்கறிகள் அனைத்தும் வேக வைத்து சமைப்பதால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு அப்படியே கிடைக்கும். மேலும் பொரியல் செய்வது என்பது மிகவும் எளிமையானது. பெரும்பாலும் பொரியல் ரெசிபிக்கள் ஒரே மாதிரியான செய்முறையைக் கொண்டிருக்கும்.
அதுமட்டுமின்றி, காய்கறிகளில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அதிகம் நிறைந்திருப்பதால், அதனை அதிகம் உட்கொண்டால், உடலில் நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். இதனால் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். மேலும் வீட்டை விட்டு வேறு ஊர்களில் வீடு எடுத்து தங்கி வாழும் பேச்சுலர்கள் கூட, அடிக்கடி பொரியலை சமைத்து சாப்பிட வேண்டும். ஏனெனில் அவர்கள் கடைகளில் அதிகம் வாங்கி சாப்பிடுவதால், இதய நோய், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்சனைகள் உடலை எளிதில் தாக்கக்கூடும்.
ஆகவே காய்கறிகளை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை பொரியல் போன்று சமைத்து சாப்பிடுங்கள். அதற்காக தமிழ் போல்ட் ஸ்கை, ஒருசில எளிமையான 10 பொரியல் ரெசிபிக்களை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து, அவற்றில் பிடித்தது சமைத்து சாப்பிடுங்கள்.
பூசணிக்காய் பொரியல்" title="பூசணிக்காய் பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பூசணிக்காய் பொரியல்
அக்டோபர் மாதத்தில் பூசணிக்காய் அதிகம் கிடைப்பதால், இதனைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிடலாம். அதிலும் பெங்காலி ஸ்டைலில் பொரியல் செய்து சாப்பிடலாம். குறிப்பாக அது எளிமையான செய்முறையைக் கொண்டது.
முட்டைகோஸ் பொரியல்" title="முட்டைகோஸ் பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>முட்டைகோஸ் பொரியல்
பொரியல்கள் ஒவ்வொன்றும் விருப்பதைப் பொறுத்ததே. அந்த வகையில் இங்கு முட்டைகோஸ் பொரியலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். இதன் செய்முறை மிகவும் எளிமையானது. அதிலும் இதனை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், இதன் சுவைக்கு அளவே இல்லை.
கேரட் பீன்ஸ் பொரியல்" title="கேரட் பீன்ஸ் பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>கேரட் பீன்ஸ் பொரியல்
நிறைய பேருக்கு கேரட் பீன்ஸ் பொரியல் என்றால் மிகவும் பிடிக்கும். மேலும் இந்த பொரியலில் கேரட் மற்றும் பீன்ஸை அப்படியே வேக வைத்து சாப்பிடுவதால், இதில் சுவை அதிகம் இருப்பதோடு, இதிலுள்ள சத்துக்கள் முழுவதும் கிடைக்கும்.
கொள்ளு பொரியல்" title="கொள்ளு பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>கொள்ளு பொரியல்
முளைக்கட்டிய கொள்ளுவில் எண்ணிலடங்கா சத்துக்கள் உள்ளன. இப்போது அந்த முளைக்கட்டிய கொள்ளுவைக் கொண்டு அருமையான முறையில் எப்படி பொரியல் செய்வது என்று கொடுத்துள்ளோம்.
பீன்ஸ் பொரியல்" title="பீன்ஸ் பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>பீன்ஸ் பொரியல்
வெறும் பீன்ஸ் கொண்டு எளிமையான முறையில் பொரியல் செய்ய வேண்டுமா? அப்படியெனில் இந்த செய்முறையின் படி செய்து பாருங்கள்.
புடலங்காய் பொரியல்" title="புடலங்காய் பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>புடலங்காய் பொரியல்
புடலங்காயில் சுவை மட்டுமின்றி, உடலுக்கு ஏற்ற பல நன்மைகளும் நிறைந்துள்ளன. ஆகவே இந்த காயை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்க்க வேண்டும். மேலும் புடலங்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும்.
சிறுகிழங்கு பொரியல்" title="சிறுகிழங்கு பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>சிறுகிழங்கு பொரியல்
கிழங்குகளில் ஒன்றான சிறுகிழங்கை வைத்து பொரியல் செய்தால் சூப்பராக இருக்கும். மேலும் இந்த பொரியல் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது.
சின்ன பாகற்காய் பொரியல்" title="சின்ன பாகற்காய் பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>சின்ன பாகற்காய் பொரியல்
பாகற்காய் சாப்பிட்டால், உடலில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும். எனவே வாரம் ஒரு முறை பாகற்காயை பொரியல் செய்து சாப்பிட வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்க வேண்டும். மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கும் பாகற்காய் பொரியல் சிறந்த ஒரு உணவுப் பொருள்.
வெண்டைக்காய் பொரியல்" title="வெண்டைக்காய் பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>வெண்டைக்காய் பொரியல்
வெண்டைக்காயை நீரிழிவு நோயாளிகள் சாப்பபிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம். எனவே அத்தகைய தன்மை கொண்ட வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்தால், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். அதுவும் வெண்டைக்காயை பொரியல் செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
உருளைக்கிழங்கு பாகற்காய் பொரியல்" title="உருளைக்கிழங்கு பாகற்காய் பொரியல்" class="sliderImg image_listical" width="600" height="338" loading="lazy"/>உருளைக்கிழங்கு பாகற்காய் பொரியல்
பல நன்மைகளை உள்ளடக்கிய பாகற்காயை, அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து எப்படி பொரியல் செய்வதென்று தெரியுமா? அதன் செய்முறையை தெளிவாக கொடுத்துள்ளோம். ட்ரை செய்து பாருங்கள்.



Click it and Unblock the Notifications
