Latest Updates
-
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும
சுவையான... பீன்ஸ் பொரியல்
பீன்ஸ் பொரியல், கலோரி குறைவாகவும், புரோட்டீன் அதிகமாகவும் உள்ள ஒரு ஆரோக்கியமான டிஷ். அதுமட்டுமல்லாமல், பீன்ஸ் பொரியலானது மிகவும் சுவையானதும் கூட. மேலும் இது செய்வது மிகவும் எளிது. அதிலும் மதிய வேளையில் சாம்பார் மற்றும் பீன்ஸ் பொரியலை செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான்.
இப்போது பீன்ஸ் பொரியலின் எளிமையான செய்முறையை கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பார்த்து, உங்களின் அனுபவத்தை சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - 250 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
துருவிய தேங்காய் - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 1/2 கப்
செய்முறை:
முதலில் பீன்ஸை கழுவி, அதன் இருமுனைகளையும் அகற்றி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு சிறு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய பீன்ஸை போட்டு, தீயை குறைவில் வைத்து, 5-6 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
பின்பு அதில் உள்ள அதிகப்படியான நீரை வடித்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து, 1 நிமிடம் தாளிக்க வேண்டும்.
பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
அடுத்து பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒன்றிரண்டாக வேக வைத்துள்ள பீன்ஸ் சேர்த்து, வடித்து வைத்துள்ள தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும்.
தண்ணீர் முழுவதும் வற்றியதும், துருவிய தேங்காய் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி, இறக்கி விடவும்.
இப்போது சுவையான பீன்ஸ் பொரியல் ரெடி!!!



Click it and Unblock the Notifications
