Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
புடலங்காய் பொரியல்
தமிழர்கள் அடிக்கடி சமைக்கும் உணவுப் பொருட்களில் புடலங்காய் முக்கியமானது. அதிலும் ஏதேனும் விஷேசம் என்றால் உடனே புடலங்காயை வாங்கி வந்து, கூட்டு, பொரியல், குழம்பு என்று பல வகையில் சமைத்து சாப்பிடுவார்கள். அத்தகைய புடலங்காயில் சுவை மட்டுமின்றி, உடலுக்கு ஏற்ற பல நன்மைகளும் நிறைந்துள்ளன. எனவே இந்த காயை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிட்டு வருவது நல்லது.
சரி, இப்போது புடலங்காயை வைத்து எப்படி சுவையான பொரியல் செய்வது என்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
புடலங்காய் - 1
கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
வர மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் புடலங்காயை உப்பு வைத்து நன்கு தேய்த்து, நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, பொடியாகவோ அல்லது நீளமாகவோ நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பைக் கழுவிப் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்து, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து வேக வைத்துள்ள புடலங்காயை சேர்த்து உப்பு போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, காயை வேக வைக்கவும்.
காயானது வெந்ததும், அதில் வேக வைத்துள்ள கடலைப் பருப்பை சேர்த்து, 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
காயில் உள்ள நீர் முழுவதும் வற்றியதும், அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.
இப்போது சுவையான புடலங்காய் பொரியல் ரெடி!!!



Click it and Unblock the Notifications
