Latest Updates
-
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க..
Independence Day 2026 Wishes In Tamil: இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் தியாகத்தையும், நாட்டின் சுதந்திரத்தையும் நினைவுகூரும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தினம் நம் நாட்டின் வரலாற்றை நினைவுபடுத்துவதோடு, ஒற்றுமை, தேசப்பற்று, சகோதரத்துவம் மற்றும் பொறுப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.

சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக முதலில் நாம் அனைவரும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வோம். அதுவும் "இனிய சுதந்திர தின வாழ்த்துகள்" என்ற எளிய வார்த்தைகளிலிருந்து தேசப்பற்றை வெளிப்படுத்தும் உணர்வுப்பூர்வமான செய்திகள் வரை, ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த விதத்தில் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வோம்.
நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு அற்புதமான சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறீர்களா? கீழே உங்களுக்காக ஒருசில சுதந்திர தின வாழ்த்து செய்திகள் மற்றும் தேசப்பற்று நிறைந்த வாசகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் பிடித்ததை தேர்வு செய்து பகிருங்கள்.
1. நம் முன்னோர்கள் போராடி பெற்ற
சுதந்திரத்தை போற்றுவோம்..
எதிர்கால சந்ததியினருக்காக
அதை பாதுகாப்பதை உறுதி செய்வோம்..
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
2. சுதந்திரம் இலவசம் அன்று
அதன் விலை கட்டுக்கடங்கா
தைரியமும், தியாகமும் தான்..
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
3. வளமான இந்தியாவை உருவாக்க
இந்த விடுதலை நாளில்
நாட்டு மக்கள் அனைவரும்
உறுதியேற்போம்..
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
4. சுதந்திரம் தைரியமாக இருப்பதில் உள்ளது..
அதை குடும்பமாக அரவணைப்போம்..
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
5. உதிரங்களை உரமாக்கி
உதித்த சரித்திரம் நம் சுதந்திரம்..
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
6. என் தேசத்தின்
சகோதர சகோதரிகள் அனைவருக்கும்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications






