Latest Updates
-
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம்
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது!
Venus Transit In Chithirai Nakshtra on 25 August 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேலும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியுமாவார்.

இந்த சுக்கிரன் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் இந்த பெயர்ச்சியின் போது சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இந்த நட்சத்திரத்தில் சுக்கிரன் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை இருப்பார். இந்த சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய்.
இந்த செவ்வாயின் நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்லும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழிலில் முன்னேற்றத்தையும், நிதி நிலையில் உயர்வையும், வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்களையும், காதல் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களையும் காணவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் ஆளுமையும், செல்வாக்கும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனை பாராட்டுவார்கள். தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிகள் திறக்கப்படலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
ரிஷபம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி வாழ்வில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும். புதிய வேலையைத் தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் குறைந்து, உறவுகளில் இனிமை அதிகரிக்கும்.
துலாம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுக்கிரனின் அருளால் நிதி நிலைமை மேம்படும் வாய்ப்புள்ளது. முக்கியமாக நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். மன அழுத்தம் குறைந்து, மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
விருச்சிகம்
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் வாழ்வில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


