இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம்

Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

Today Rasi Palan in Tamil - 15 August 2026 Daily Horoscope in Tamil Today Horoscope in Tamil

அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சனிக் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடிக்கப்படும். நீங்கள் ஏதேனும் கடன் பிரச்சினையில் சிக்கியிருந்தால், அதில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி தீர்க்கப்படும். தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் சிறந்த வெற்றியைப் பெறுவார்கள். உங்கள் கடின உழைப்புக்கான முழுப்பலன்களை பெறுவீர்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.

ரிஷபம்

இன்று புதிய திட்டங்களைத் தொடங்கவோ அல்லது மற்றவர்களுக்கு கடன் கொடுக்கவோ வேண்டாம், ஏனெனில் அது நஷ்டத்தையும், மனஅழுத்தத்தையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இன்று சில உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம், அது உங்கள் ஆற்றலை இழக்கச் செய்யலாம். வியாபாரம் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக இருக்காது. இருப்பினும், ஒரு புதிய விருந்தினர் உங்கள் வீட்டிற்குள் நுழையலாம், அது உங்கள் குடும்பத்திற்கு உற்சாகமாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் புதிய சிந்தனை மற்றும் முன்னேற்றத்திற்கான உத்வேகத்தை உணர்வீர்கள். உங்கள் எண்ணங்களை வலுப்படுத்துவதன் மூலம் புதிய வாய்ப்புகளை நோக்கி நகரலாம். நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முதலீடு செய்யும் போது சிந்தித்து முடிவெடுக்கவும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள், ஒரு சிறிய உடற்பயிற்சி மற்றும் சீரான உணவு உங்கள் ஆற்றலை அதிகரிக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு, இந்த நாள் சாதாரணமான நாளாக இருக்கும். நீங்கள் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் அல்லது ஒரு முக்கியமான முடிவை எடுக்கலாம். குடும்ப உறுப்பினரின் உடல்நலம் உங்கள் கவலைகளை அதிகரித்திருந்தால், இப்போது அதிலிருந்து நிவாரணம் பெறலாம். வீட்டைப் புதுப்பிப்பதில் குறிப்பிடத்தக்க செலவுகள் ஏற்படக்கூடும். இன்று வதந்திகளை நம்புவதைத் தவிர்க்கவும், இல்லையெனில் நிம்மதியை இழக்க நேரிடும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பிங்க்.

சிம்மம்

இன்று உங்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். அதனால், உங்கள் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அலுவலகத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். வியாபாரிகள் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். உங்களுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்றைய நாள் மிகவும் சாதகமாக இருக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.

கன்னி

இன்று உங்கள் மனதில் கவலைகள் அதிகரிப்பதால் பதட்டமான சூழல் நிலவும். வியாபாரத்தில் போட்டியாளர்களிடமிருந்துக் கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். நிதி நிலைமை மோசமடையும். பழைய திட்டங்களால் இழப்புகள் ஏற்படக்கூடும். உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சிறுசிறு மோதல்கள் ஏற்படக்கூடும். எந்தவொரு முடிவையும் அவசரமாக எடுப்பதைத் தவிர்க்கவும், எச்சரிக்கை மற்றும் கவனமாக பரிசீலித்து அதற்குப் பின்னர் முடிவெடுக்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதற்கு இந்த நாள் பயனுள்ளதாக இருக்கும். எந்தவொரு வேலையையும் தள்ளிப்போடுவதைத் தவிர்த்து, அதை உடனடியாக முடிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று குடும்பத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியைத் தொடங்கலாம். சமூக சேவையில் இருப்பவர்கள் தங்கள் பங்களிப்பிற்காக அங்கீகாரத்தைப் பெறலாம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் கருப்பு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். வாகனம் ஓட்டும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். நீங்கள் சொத்து வாங்க அல்லது விற்க திட்டமிட்டால், உங்கள் விருப்பம் நிறைவேறலாம். வேலையில் சில சவால்கள் ஏற்படும், ஆனால் உங்கள் மேலதிகாரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். பாதகமான சூழ்நிலைகளில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு நிதிரீதியாக இன்று சாதகமான நாளாக இருக்கும். எந்தவொரு முடிவையும் பதட்டத்தில் அல்லது அவசரத்தில் எடுப்பதைதத் தவிர்க்க வேண்டும். வேலையில் மாற்றங்களைக் கொண்டுவர எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள்தேடி வரும். இருப்பினும், அற்ப விஷயங்களுக்காக அதிகம் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் அலுவலகப் பணிகளை கவனமாக செய்ய வேண்டியது அவசியம். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்கும். கட்டுப்பாடற்ற செலவுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம், ஆனால் உங்கள் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பான விஷயங்களில் கூடுதல் முயற்சி தேவைப்படலாம். குடுமபத்தில் மூத்த உறுப்பினருடன் சில வாக்கு வாதங்கள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத்துணையின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று வழக்கத்தை விட சிறப்பான நாளை அனுபவிக்கலாம். பெரிய லாபங்களைத் துரத்தும்போது சிறிய லாபம் ஈட்டும் வாய்ப்புகளில் நீங்கள் குறைவாக கவனம் செலுத்தலாம், இது விரும்பிய முடிவுகளைத் தராது. உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்ப விஷயங்களில் முழு கவனம் செலுத்துங்கள். காதல் உறவில் இருப்பவர்கள் தங்கள் துணையுடன் தரமான நேரத்தை அனுபவிப்பார்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் மெரூன்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலமான நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை உங்கள் வேலையில் உங்களுக்கு முழு ஆதரவளிப்பார். குடும்ப உறுப்பினர்களின் திருமணத் திட்டத்தில் இருந்த தடைகள் நீங்கும். வயிற்றுப் பிரச்சினைகளைத் தவிர்க்க உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முக்கியமான தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். உங்களின் உத்திகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, August 15, 2026, 5:00 [IST]
Desktop Bottom Promotion